குற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மொழிபெயர்ப்புகள்[தொகு]

விளக்கம்
  • குற்றங்கள், அறநூலுக்கு மாறானவும், அரசிய லுக்கு மாறானவும், தெய்வத்திற்கு மாறானவும் என மூவகைப்படும்.

குடி பொய் களவு காமம் கொலை என்பன அறநூலுக்கு மாறானவை. இவை ஐம்பெருங் குற்றம் எனப்படும். பிறரிடம் வாங்கினதை மறுத்தலும், தன்னிடத்துள்ள பிறர் பொருளை ஒளித்தலும், கள்ளக் கையெழுத்தும், ஆள்மாறாட்டமும் பொய்யுள் அடங்கும்.

இறையிறுக்காமை, உறுபொருள் கவர்தல், பகையொற்று, அறைபோதல், அரசனது பொருள் கவர்தல், அரசனது இன்பப் பொருள் நுகர்தல், ஊருக்கு அல்லது நாட்டிற்கு இரண்டகஞ் செய்தல், அரசற்கிரண்டகஞ் செய்தல், அரசாணை மீறல், கொள்ளை யடித்தல், கலகஞ்செய்தல் என்பன அரசியற்கு மாறான குற்றங்களாம். புதையலும் பிறங்கடையில்லாச் சொத்தும் உறுபொருளாகும்.

ஒப்பிப் பணிசெய்யாமை, கோயிற் பொருட்கவர்வு என்பன தெய்வத்திற்கு மாறான குற்றங்கள். கோயிலில் விளக்கெரிப்பதைத் தண்டனையாகப் பெற்றவனும், கோயிலில் விளக்கெரிக்கப் பொன் பெற்றவனும், அங்ஙனம் எரிக்காமையும்; கோயிற் பண்டாரத்திற் பெற்ற கடனுக்கு வட்டியிறுக்காமையும்; ஒப்பிப் பணிசெய்யாமை யாகும். கோயிற் கலங்களையும் அணிகலங்களையும் களவாடலும், வழிபாட்டு விழாச் செலவைக் குறைத்தலும் அடியோடு நிறுத்தலும் கோயிற் பொருட் கவர்வாகும்.

மூவகைக் குற்றங்களுள்ளும், கடுமையானவை மேற்படு குற்றம் எனப்பட்டன.

பயன்பாடு
  • குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை (கொன்றை வேந்தன், ஔவையார்)

சொல்வளம்[தொகு]

குற்றம்
குற்றச்சாட்டு, குற்றவாளி, குற்றவியல், குற்றப்பத்திரிகை
போர்க்குற்றம், கொலைக்குற்றம், சொற்குற்றம், பொருட்குற்றம்
  1. மறு
"https://ta.wiktionary.org/w/index.php?title=குற்றம்&oldid=1901868" இருந்து மீள்விக்கப்பட்டது