கோந்து, பசை, பிசின் என்று அழைக்கப்படும் கெட்டியான திரவப் பொருட்கள், ஒரு பொருளோடு மற்றொருப் பொருளை ஒட்டப் பயன்படுத்தப்படுகின்றன...வித விதமாக, ஒட்டப்படும் பொருட்களின் தன்மைகேற்றவாறு கோந்துகள் கிடைக்கின்றன...இயற்கையாக பலவிதமான மரங்களிலிருந்து வடியும் கோந்துகளைத்தவிர, செயற்கையாகவும் உண்டாக்கப்படும் கோந்துகள் அடைக்கப்பட்டிருக்கும் உலோகம், பீங்கான், நெகிழி ஆகியவற்றாலான போத்தல், குழல், சாடி முதலியன கோந்துத்தான் எனப்படும்...