சிங்கப்பிரான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சிங்கப்பிரான்
சிங்கப்பிரான்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
(கோப்பு)

சிங்கப்பிரான், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சிங்கமுகக் கடவுள்; நரசிம்மன்; நரசிங்கமூர்த்தி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a hindu deity with a lion's face called lord narasimha.

விளக்கம்[தொகு]

மஹாவிஷ்ணு என்று போற்றப்படும் திருமால் எடுத்த பத்து முக்கியமான அவதாரங்களில் நான்காவது நரசிம்மாவதாரம்...இந்த அவதாரம் தீவிர திருமால் பக்தனான பிரகலாதனை அவனுடைய தந்தை இரணியகசிபு என்னும் அரக்கனின் கொடுமைகளிலிருந்து காக்க அந்த அரக்கனை வதம் செய்ய, முகம் சிங்க உருவத்திலும் மற்ற உடற்பகுதிகள் மனித உருவத்திலுமாகத் தோன்றினார்...இது இரணியகசிபு பெற்ற தான் எந்த விலங்காலோ அல்லது மனிதனாலோ இறக்கக்கூடாது என்னும் வரத்தை மீறாமல் இருப்பதற்காகத்தான்...கடவுளரை பிரான் என்று அழைப்பது மரபு...ஏ.கா: சிவ பிரான், கண்ண பிரான், இராம பிரான்... ஆக சிங்க முகத்தோடு விஷ்ணு பிரான் அவதாரம் எடுத்ததால் அந்த அவதாரத் திருப்பெயர் சிங்கப்பிரான் என்றானது...


( மொழிகள் )

சான்றுகள் ---சிங்கப்பிரான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிங்கப்பிரான்&oldid=1989755" இலிருந்து மீள்விக்கப்பட்டது