சிதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிதி, பெயர்ச்சொல்.

  1. கறுப்பு
  2. வெண்மை
  3. கோடாலி
  4. பெண்குறி, பிறப்புறுப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. blackness
  2. whiteness
  3. axe
  4. pubic area
விளக்கம்
வாலி மடிந்ததுவும் வல்லரக்கர் பட்டதுவும்
கோலமுடி மன்னர் குறைந்ததுவும் - சால
மதியுடைய நூற்றொருவர் மாண்டதுவும் ஐயோ
சதவிகரத் தால்வந்த தாழ்வு - காளமேகம் தனிப்பாடல்
  • இப்பாடலில் சதவிகரம் என்பதற்குப் பொருள் என்ன? சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தனிப்பாடல் திரட்டு 'சதவிகரம் - இடக்கரடக்கல்' என்று குறிப்பிடுகின்றது. ச.சீனிவாசன், நா.பழனியப்பன் ஆகியோர் காளமேகம் பாடல்களுக்கு உரை எழுதியுள்ளனர். அவ்வுரையில் 'சகர இகரம், தகர இகரம் ஆகிய சி, தியால் - பெண்ணைப் பற்றிய விவகாரங்களால் - நேர்ந்த இழிவாகும்' என்று எழுதியுள்ளனர். மேலும் 'ச இகரம் - சி, தகரம் இகரம் - தி. சிதி - பெண்கள் பற்றிய செயல்கள் (இடக்கர் அடக்கல்)' என்று விளக்கமும் உள்ளது. இதிலும் சிதி என்றால் பெண்கள் பற்றிய செயல்கள் என்பதாகக் கருத்து உள்ளது. புலவர் மாணிக்கம் எழுதிய உரையில் 'சத இகரத்தால் (பெண்ணைப் பற்றிய விவகாரத்தால்) உண்டான இழிவாகும். (சத இகரத்தால்; சகர இகரம் - சி; தகர இகரம் - தி; இதைக் கூட்டிப் பொருள் காண்க)' என்று உள்ளது. சதரவிகரம் என்பதை சிதி என்று கூட்டிக் கொள்ளலாம்.
  • சிதி என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? தஞ்சாவூரைச் சேர்ந்த சிவனடியாராகிய தமிழறிஞர் ஒருவர்தான் என் சந்தேகத்தைத் தெளிவாகத் தீர்த்தார். சிதி என்னும் சொல் அல்குலைக் குறிக்கும் சொல்தான். இது தஞ்சாவூர் வட்டார வழக்குச் சொல்லாகும். அப்பகுதியில் இபபோதும்கூட இந்தச் சொல் மக்கள் வழக்கில் உள்ளது. கிராமத்து டீக்கடைகளில் நடுவே பொத்தல் உள்ள மெதுவடையைக் கையில் எடுத்துக் கொண்டு 'என்ன இது சின்னப் பொண்ணு சிதி மாதிரி இருக்குது' என்று யாராவது கேலி செய்து பேசுவதை இன்றும் கேட்கலாம்.
  • காளமேகப் புலவர் திருகுடந்தையாம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். அங்கு பிறந்து வளர்ந்து பரிசாரகத் தொழில் செய்தவர். வரதன் என்னும் இயற்பெயர் கொண்டவர். புலவரான பின்னர் பல இடங்களுக்கும் அலைந்து மக்கள் வழக்கை நன்கு கற்றவர். ஆகவே மக்கள் வழக்காகிய சிதி என்பது அவருக்கு நன்கு தெரிந்திருக்கும். அந்தச் சொல்லைத்தான் இந்தப் பாடலில் மறைத்துச் சொல்கிறார். இவ்வாறு அந்தத் தமிழ் அறிஞர் வழியாகச் சதவிகரத்திற்கு எனக்குப் பொருள் கிடைத்தது. (கெட்ட வார்த்தை பேசுவோம் - பா.மணி)
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சிதிமயிர், சதவிகரம், அல்குல், கூதி


( மொழிகள் )

சான்றுகள் ---சிதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிதி&oldid=1979816" இலிருந்து மீள்விக்கப்பட்டது