சுகி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சுகி (வி)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. live happily - சுகமாயிரு
 2. indulge in sexual pleasure -சிற்றின்பம் அனுபவி
 3. enjoy something - அனுபவி, இரசி
விளக்கம்
பயன்பாடு
 1. பேருந்தின் நெரிசலில் பயணத்தைச் சுகிக்க முடியாது - One can't enjoy the ride in a crowded bus.
 2. பள்ளிப் படிப்பிற்குப் பிறகு மரத்துப் போகத் தொடங்கும் நமது மனம் மேலும் வளர வளர, கல்வி, தேர்வு என்றாகி பிறகு வேலை, சம்பளம், அதன்பிறகு பணி உயர்வு, பதவி உயர்வு என்று பொருளாதார எண்ணங்களால் பீடித்து மேலும் மரத்துப் போய், வாழ்வின் அற்புதமான அன்றாட நிகழ்வுகளையெல்லாம் சுகிக்க மறந்த மரக்கட்டையாகி விடுகிறது ([1])
 3. வெதுவெதுப்பின் சுகத்தை சுகிக்க விரும்பும் மக்கள் வெப்பக் குளியலை விரும்பி வருகிறார்கள் (வலைப்பூ)
 4. என்னை பல முறை அவள் சுகிக்க அழைத்தும் நான் மறுத்திருக்கிறேன் ([2])
 5. அழகில்லையென்று விட்டுச் சென்ற அதே ஆடவன் அவளைச் சுகிக்க வருகிறான் ([3])

(இலக்கியப் பயன்பாடு)

 1. அன்னார் நெறியில் அழகுக் கவிகள் சொன்னார் பலரும் ; சுகித்தேன் யானும் (கவிதை)
 2. மெய்போகம் ஆகச் சுகித்தேன். அகப்பட்டேன் (விறலி விடு தூது)
 3. துணைக்கவரி பரிமாறச் சுகிப்பம் (ஞானவா. லீலை. 22)
 4. பூமுடித்துத் தினஞ் சுகித்தால் (செந். xxv, 390).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுகி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுகி&oldid=488008" இருந்து மீள்விக்கப்பட்டது