தகவல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

தகவல்

  • ஒன்றினைப் பற்றிய செய்தி அல்லது குறிப்பு தகவல் எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • காணாமல் போன குழந்தை குறித்து தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் (A suitable reward will be given to anyone who gives information/tip about the missing child)
  • தகவல் தொழில்நுட்பம் (Information Technology)
  • தகவல் பரிமாற்றம் (Information exchange)
  • சற்றுமுன் கிடைத்த தகவல் (Information just received)

(இலக்கியப் பயன்பாடு) - தகவல் தமிழ்ச் சொல் அல்ல என்று சொல்லாவறிஞர் தமிழூர் ப.அருளி அவர்களின் அயல் அகரமுதலியில் குறிக்கப் பட்டுள்ளது. இஃது அரபுச் சொல்லென அவர் காட்டியுள்ளார். தமிழில் தமிழ் போல் மயக்கம் தரும்படியான அயற் சொற்கள் கலந்திருந்தன. இவற்றை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் போலும் வேர்ச்சொல் ஆய்வு முனைவர்கள் கண்டறிந்து இனங்காட்டியுள்ளனர். பாவாணர் செய்திக்கு, பற்றியம், புலனம் முதலான சொற்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். தகவு சான்ற செய்தி எனும் பொருளில் தகவல் வந்தது எனச் சிலர் இதற்கு விளக்கம் அளிக்கின்றனர். தகவு + அல் = தகவு இல்லாதது எனும் பொருள் இச்சொல்லைப் பகுக்கின்ற பொழுது காணக் கிடைக்கின்றது. தமிழ் வழி பார்த்தாலும் இது பொருந்தவில்லை. பண்டைய இலக்கிய சான்றுகளும் இச்சொல்லுக்கு வழங்கப்படவில்லை. நிகண்டுகளிலும், கழக இலக்கியப் பேகர முதலிகளிலும் இச்சொல் செய்தி எனும் பொருளில் வழங்கப்படவில்லை. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியில், தரவல்>தகவல் ஆக மாறியுள்ளதாகக் குறித்துள்ளனர். ரகரம் ககரமாக மாறுவது ஐயத்திற்குரியது. இதற்கான வேர்ச்சொல் விளக்கத்தையும் யாரும் தரவில்லை. தகவல் இலாகா என வழங்கும் சொற்றொடரில் இலாகாவும் தமிழில்லை. எனவே நாம் நீண்ட காலத்திற்கு முன்பே செய்தித் திணைக்களம் என்றே இதனை நற்றமிழில் அழைத்து வந்துள்ளோம். Information department செய்தித் திணைக்களம்/ தெரிவல் திணைக்களம்.

செய்தி / தெரிவல் / பற்றியம் / புலனம் எனும் சொற்களை இனி வழக்கத்திற்குக் கொணர்வோம்.


{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=தகவல்&oldid=1969812" இலிருந்து மீள்விக்கப்பட்டது