தரைக்கரும்புலிகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • தரைக்கரும்புலிகள், பெயர்ச்சொல்.
  1. ஈழத்தில் இருந்த தரைத் தற்கொடைப்படை அதிரடிப்படையைக் குறிக்கும் பெயர்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. land black tigers

சொல் விளக்கம்[தொகு]

 தரை+கரும்புலிகள் = தரைக்கரும்புலிகள்

தரையில் ஆடும் கரும்புலிகள். இச்சொல்லானது எப்பொழுதும் சேர்ந்தே வழங்கப்படுதல் வேண்டும்.

விளக்கம்[தொகு]

  • இவர்கள் திரும்பி வர முடியாத நடவடிக்கைகளிற்குச் செல்லும் வெடியுடை அணிந்த தற்கொடை அதிரடிப்படையைச் சேர்ந்த வீரர்கள்.
  • இவர் தங்கள் உயிரைக்கொடுத்து தரையில் உள்ள எதிரியின் இலக்கினை அழித்து தம் நாட்டினைக் காப்பர். இவர்கள் வெடியுடையினை இயக்கி வெடித்தால் இவர்களின் உடலங்கள் கிடைப்பது மிகவும் அரிது. அவை சிதறி சிதைந்து விடும். அனால் தாக்குதல்களிற்குச் சென்று குண்டுபட்டு ஊறாகி இறந்து (இதுவே சக்கை வண்டியில் சென்று வெடித்தால் கருகிய நிலையில் எடுக்கப்படும்; சிலவேளை அதுவும் சிதைய வாய்ப்புண்டு), அந்த படைத்தளம் புலிகளால் பரம்பானால்(overrun) இவர்களின் வித்துடல்கள் மீட்டெடுக்கப்பட்டு உரிய முறையில் துயிலுமில்லங்களில் விதைக்கப்படும். இல்லையென்றால் அவை எதிரியால் கைப்பற்றப்பட்டு வழங்கப்பட மாட்டாது.

பயன்பாடு[தொகு]

சொல்வளம்[தொகு]

கரும்புலிகள் - கடற்கரும்புலிகள் - தரைக்கரும்புலிகள் - வான்கரும்புலிகள் - மறைமுகக் கரும்புலிகள்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தரைக்கரும்புலிகள்&oldid=1972068" இலிருந்து மீள்விக்கப்பட்டது