தா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உரிச்சொல்[தொகு]

பொருள்
 1. வலி
 2. வருத்தம்
 3. தாக்குதல்
இலக்கணம்
"தாவே வலியும் வருத்தமும் ஆகும்" - தொல்காப்பியம் 2-8-48
இலக்கியம்
 1. கருங்கட் தாக் கலை (குறுந்தொகை 69) = வருந்திய கலைமான் (இளம்பூரணர் விளக்கம்)
 2. தாவில் நன்பொன் (அகநானூறு 212) = கலப்பிட வருத்தம் இல்லாத நல்ல பொன் (இளம்பூரணர் எடுத்துக்காட்டு)
மொழிபெயர்ப்பு[தொகு]
 1. pain
 2. adulterate

பெயர்ச்சொல்[தொகு]

பொருள்
 1. குற்றம் (பெயர்ச்சொல்)
மொழிபெயர்ப்பு[தொகு]
 1. mistake

வினைச்சொல்[தொகு]

தா(பெ)

பொருள்
 1. கொடுத்தல் (தா - ஒத்தவனுக்குத் தருதல்) (ஈ - தாழ்ந்தவனுக்குத் தருதல்) - தொல்காப்பிய விளக்கம் (வினைச்சொல்)
 2. தாவு (வினைச்சொல்)
மொழிபெயர்ப்பு[தொகு]
 1. 1)give, 2)grant,3)bestowஆங்கிலம்
 2. skip{ஆதாரம்}--->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - தா

"https://ta.wiktionary.org/w/index.php?title=தா&oldid=1969289" இலிருந்து மீள்விக்கப்பட்டது