தாமதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • நேரம் தாண்டிச் செய்தல்; நேரம் கடத்துதல்; காலக்கழிவு; காலநீட்டம்
  • மந்த குணம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • இனியும் கால தாமதம் செய்யாமல் தேர்வுக்குப் படிக்க ஆரம்பி (without any more தாமதம், start preparing for the examination)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒரு கண நேரங்கூட இதில் தாமதம் கூடாது" என்றாள் (பார்த்திபன் கனவு, கல்கி)
  • என்ன இவ்வளவு தாமதம்? நேற்று ராத்திரியே ஏன் வரவில்லை? (அலை ஒசை, கல்கி)
  • தொட்டதுதான் தாமதம் உடனே ஓர் அற்புதம் நிகழ்ந்தது (சிவகாமியின் சபதம், கல்கி)
  • தாமதம் நீக்கிவிடு (பாரதிதாசன்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாமதம்&oldid=1634713" இலிருந்து மீள்விக்கப்பட்டது