தாம்புந்தோண்டியுமாதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • தாம்பு(ம்) + தோண்டி(யும்) + ஆ(கு)-தல் = தாம்புந்தோண்டியுமாதல்

பொருள்[தொகு]

  1. சொல்லுக்கு சொல்-இறைக்குங் கயிறும் குடமும் போன்றிருத்தல்
  2. பொருள்...மிக ஒற்றுமை யாதல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • Verb intr
  1. to be like drawing rope and pitcher--சொல்லுக்கு சொல்
  2. To be familiar, intimate, hand and glove with

விளக்கம்[தொகு]

  • சில கிராமப்புறங்களில் சமையல், குடிநீர் மற்றும் குளியல் தேவைகளுக்காகக் கிணற்று நீரையே சார்ந்திருப்பர்...இதற்காக எண்ணிலடங்கா முறை கிணற்றிலிருந்துத் தண்ணீரை இறைத்துக்கொண்டே இருப்பர்...எனவே தாம்பு என்னும் கயிற்றை, தோண்டி என்னும் ஒரு பாத்திரத்தின் கழுத்தில் சுருக்குப்போட்டு (கட்டி), எப்போதும் ஆயத்த நிலையில், கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க வைத்திருப்பர்...எப்போதாவதுதான் தோண்டியைச் சுத்தம் செய்ய அதையும், கயிற்றையும் பிரிப்பர்...ஆக, தோண்டியும், கயிறும் சதா இணைந்தே இருக்கும்...இந்த நிலையே எப்போதும் மிக ஒற்றுமையாக இருப்பதை உணர்த்தும் வழக்காக தாம்புந்தோண்டியுமாதல் என குறிக்கப்படுத லாயிற்று!


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +