இறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இற்ஐ = இறை

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

 • இறை, பெயர்ச்சொல்.
 1. இறைவன், பரம்பொருள்
  இறை நிலையுணர்வரிது (திவ். திருவாய். 1, 3, 6)
 2. அரசன், தலைவன்
  இறைகாக்கும் வையக மெல்லாம் (குறள், 547)
 3. கை
  இறைவளை நல்லாய் இதுநகையா கின்றே (சிலப்.)
 4. நிலவரி; இறவாணம்
  இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு (குறள் 733)
 5. பறவை இறகு
 6. ஆசனம், இருக்கை
  இறையிடை வரன்முறை ஏறி (கம்பராமாயணம், அயோத். மந்திர. 12)

(வி)

 1. இழு
  கிணற்றிலிருந்து நீர் இறைத்தேன்.
 2. சிதற விடு
  பணத்தை வாரி இறைத்தார் வள்ளல்.
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்:
 1. God
 2. king
 3. hand
 4. land tax
 5. feather; quill
 6. seat, throne
 7. draw (water from a well)
 8. distribute

ஆதாரங்கள் ---இறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

இறை/இரை,

"https://ta.wiktionary.org/w/index.php?title=இறை&oldid=1995985" இலிருந்து மீள்விக்கப்பட்டது