நவதீர்த்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--नवम् + तीर्थ--நவ + தீ1ர்த2--மூலச்சொல்
- நவம் + தீர்த்தம்
பொருள்
[தொகு]- நவதீர்த்தம், பெயர்ச்சொல்.
- கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, சிந்து, காவேரி, கோதாவரி, சோணை, துங்கபத்திரை என்ற ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள்/நதிகள்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The nine sacred rivers of the indus, viz., Kaṅkai, Yamuṉai, Caracuvati, Narumatai, Cintu, Kāvēri, Kōtāvari, Cōṇai, Tuṅkapattirai
விளக்கம்
[தொகு]- நவம் என்றால் சமசுகிருதத்தில் ஒன்பது (नवम्--நவம்)--என்று பொருள்...இந்தியாவில் ஆயிரக்கணக்காண ஆறுகள் இருந்தாலும், இந்து சமயத்தினர் புராண, இதிகாசங்களோடு தொடர்புடைய ஒன்பது ஆறுகளை மிகப்புனிதமாகக் கருதுவர்...இவற்றில் நீராடினால் செய்தப் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிட்டி நற்கதியை அடைவார்கள் என நம்புவர்...இந்த நதிகளின் பெயர்களை ஒவ்வொரு நாளும் குளிக்கும்போது உச்சரித்தாலே, அவற்றில் நேரிடையாகக் குளித்தப் பலன் அடைவர் என்றும் சொல்வர்...அப்படிப்பட்ட சில துதிக்களும் (சுலோகங்கள்} உண்டு..
- உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனமுடைக் கல்வி இல்லோரே - (திருமந்திரம் -509)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +