கோதாவரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கோதாவரி:
இந்துக்கள் கொண்டாடும் கோதாவரித் தாய்
கோதாவரி:
தெலங்காண மாநிலம் பத்ராசலம் அருகே பாய்கின்ற கோதாவரி ஆறு
கோதாவரி:
ஆந்திர மாநிலத்தில் உல்லாசச் சுற்றுலாவுக்கேற்ற பாபிகொண்டலு
கோதாவரி:
இயற்கை எழில் கொஞ்சும் கொனசீமா
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சொற்பிறப்பு:

  • சமசுகிருதம்--गोदावरी--கோ3தா3வரி--வேர்ச்சொல்...

பொருள்[தொகு]

  • கோதாவரி, பெயர்ச்சொல்.
  1. ஒரு பேராறு. (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. the river godavari


விளக்கம்[தொகு]

  • *இந்தியாவின் கங்கைக்கு அடுத்தபடியாக இரண்டாவது நீளமான நதி...இந்துக்களின் மிகப்புனிதமான ஏழு ஆறுகளிலொன்று...புனித கங்கைக்குச் சமமான இந்த ஆறு தென்திசைக் கங்கை அதாவது தட்சண கங்கா என்றுப் போற்றப்படுகிறது...இந்த நதி 1,465 கிலோமீட்டர் அல்லது 910 கல் நீளமுள்ளது...மராட்டிய மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நாசிக் நகருக்கு அருகில் தோன்றி, கிழக்கு முகமாகப் பாய்ந்து மராட்டியம், தெலங்காண, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் விவசாய, குடிநீர், மின்சாரத் தேவைகளுக்கு மிகமுக்கிய ஆதாரமாக விளங்கி வங்காள விரிக்குடாக் கடலில் சங்கமிக்கிறது...ஆந்திரப் பகுதியில் போக்குவரத்துக்கும் மிகுந்த அளவில் பயனாகும் இந்த ஆற்றுக்கு சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், அநேக உபநதிகளால் உண்டாகியிருக்கின்றன...
  • கோதாவரி பாயும் மாநிலங்களில் இந்த ஆற்றின் குறுக்கே கங்காபூர் அணை, ஜயக்வாடி அணை, விஷ்ணுபுரி அணை, ஸ்ரீராம்சாகர் அணை, தவளேஸ்வரம் அணை, காட்கர் அணை போன்ற இன்னும் சில அணைகள் விவசாயம் மற்றும் மின்சாரத் தேவைகளுக்காகக் கட்டப்பட்டு இருக்கின்றன...தற்போது போலவரம் என்னும் இடத்தில் தெலங்காண மற்றும் ஆந்திரப்பிரதேசத் தண்ணீர்த் தேவைகளுக்காக தேசிய அந்தஸ்துக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான அணைக்கட்டு நிர்மானத்திலிருக்கிறது...
  • நாசிக், நான்தெட், நிர்மல், இராமகுண்டம், இராஜமந்திரி, நரசாபுரம் போன்ற பற்பல புகழ்மிக்க நகரங்களும், த்ரம்பகேஸ்வரம், புண்தாம்பா, பாசரா, தர்மபுரி, மந்தனி, காளெஸ்வரம், பத்ராசலம், முக்தேஸ்வரம், தவளேஸ்வரம், அந்தர்வேதி போன்ற இந்துக்களின் புண்ணிய தலங்களும் கோதாவரி ஆற்றங்கரையிலேயே அமைந்துள்ளன..ஆந்திரத்திலுள்ள பாபிகொண்டலு என்னும் இடம் உல்லாச சுற்றுப்பயணத்திற்கு மிகவும் புகழ்மிக்கதாகும்...கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இரு கோதாவரி நதிக்கிளைகள் வங்கக் கடலோடு சங்கமிக்கும் இடத்திற்கிடையேயுள்ள நிலப்பரப்பு கொனசீமா எனப்படுகிறது...இது இயற்கை தன் அழகு, எழில்,ஒயில், வனப்பு, அனைத்தையும் கொட்டித் தீர்த்திருக்கும் மிக இரம்மியமான இடமாகும்.....



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோதாவரி&oldid=1395557" இலிருந்து மீள்விக்கப்பட்டது