உள்ளடக்கத்துக்குச் செல்

நவதுவாரபுரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
நவதுவாரபுரி:
மனித உடல் (பெண் & ஆண்)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நவதுவாரபுரி, பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--नवम् + द्वारं + पुरि + நவம் (ஒன்பது) + த்3வாரம் (கதவு/வழி) + பு1ரி (நகரம்/ஊர்) + நவதுவாரபுரி
  1. மனித உடல்

விளக்கம்

[தொகு]
  • உடல் என்பது ஆன்மா/உயிர்/பிராணன், அதன் காலம் முடியும்வரை வாழும் ஓர் இடமாகும்...அதோடு கணக்கற்ற நுண்ணுயிர்களும் உடலை பாதுகாத்து, இயக்கும் வகையில் உடலில் வாழ்கின்றன...அடிக்கடி வெளிப்புற நுண்ணுயிர்களும் உடலுக்குள் புகுந்து,அதில் வசித்து நோய்களையுண்டாக்கி சிறுதுகாலம் மருந்து, மாத்திரைகளால், அழிக்கப்படும் வரை வாழ்கின்றன...ஆகவே இந்த உடல் பல உயிர்கள் வாழும் ஒரு புரி அதாவது நகரம்/ஊர் ஆகும்... இந்த நகருக்கு நவம்/ ஒன்பது; துவாரம்/வாயில்கள் கதவுகள்/வழிகள் உள்ளன...அவை இரண்டு காதுகள், இரண்டு கண்கள், இரண்டு மூக்குத் துவாரங்கள், வாய், மலம், சிறுநீர் வெளியேறும் வழிகள் உள்ளன... பெண்களின் யோனி இக்கணக்கில் சேர்க்கப்படுவதில்லை...இந்த ஒன்பது வழிகளில் எந்த வழி மூலமாக பிராணன் வெளியேறி மரணத்தை ஏற்படவைக்குமென்பது எவருக்கும் தெரியாது!...ஆகவே மனித உடல் ஒன்பது வழிகளையுடைய நகரம் என்பதாக நவதுவாரபுரி என்று தத்துவார்த்தமாகக் குறிப்பிடப்படுகிறது...


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. human body



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நவதுவாரபுரி&oldid=1282309" இலிருந்து மீள்விக்கப்பட்டது