உள்ளடக்கத்துக்குச் செல்

நோர்வே மொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

நோர்வே மொழி,.

  • நோர்வே மொழியானது (Norsk) உலக மொழிகளில் ஒன்றாகும். இது கிட்டத்தட்ட 4.8 மில்லியன் மக்களால், முதன்மையாக நோர்வேயில் வாழும் மக்களால் பேசப்படுகின்றது. நோர்வேயிலிருந்து முன்னைய நாளில் அமெரிக்காவில் குடியேறி அங்கே வாழ்ந்துவரும் மக்களும், அவரது சந்ததியினருமாகிய கிட்டத்தட்ட 50,000 மக்கள் இந்த மொழியைப் பேசுகின்றவர்களாய் உள்ளனர்.
  • தற்போது நோர்வே மொழியில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பூக்மோல் (Bokmål), நீநொர்ஸ்க் (Nynorsk) என்னும் இருவேறு மொழி வடிவங்கள் உள்ளன. இவ்விரு மொழிகளுமே நோர்வேயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பூக்மோல் கிட்டத்தட்ட 85-90% மக்களாலும், நோநொர்ஸ்க் 10-15% மக்களாலும் பயன்படுத்தப்படுகின்றன. பூக்மோலே பொதுவாக

வெளிநாட்டு மாணவர்கள் கற்கும் மொழியாக உள்ளது.

  • நோர்வே மொழியில் 29 எழுத்துக்கள் உள்ளன.
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZÆØÅ
abcdefghijklmnopqrstuvwxyzæøå
மொழிபெயர்ப்புகள்

1. Norwegian (ஆங்கிலம்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=நோர்வே_மொழி&oldid=1934855" இலிருந்து மீள்விக்கப்பட்டது