படித்தீர்வு
படித்தீர்வு (பெ)
(கோப்பு) |
படிமுறைத் தீர்வு (Algorithm, ஆல்கரிதம்) என்பது ஒரு தீர்வுமுறை. இது பொதுவாக ஒரு கேள்விக்கான விடையை அடைய ஒரு திட்டத்துடன், முறைவகுத்து, படிப்படியாய், ஆனால் முடிவுடைய படிகளுடன், தீர்வு காணும் முறை. இம்முறை கணிதம், கணினியறிவியல் போன்ற துறைகளில் பெரிதும் ஆய்ந்து அலசிப் பயன்படுத்தப்படுகின்றது. ஆல்கரிதம் அல்லது அல்காரிதம் என்னும் பெயர் 9 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த அல் குவாரிசிமி (al-Khwarizmi) அல்லது அல் கோவாரிசிமி (Al-Khowarizmi) என்னும் பெயருடைய ஈரானிய கணிதவியலாளர் எழுதிய "இந்துக்களின் கணக்கிடும் கலை பற்றி அல்-குவாரிசிமி" என்னும் பொருள் படும் நூலின் இலத்தீன் மொழிபெயர்ப்பு நூலாகிய "Algoritmi de numero Indorum" (ஆல்கரித்மி டி நுமரோ இந்தோரம்) என்னும் நூலின் தலைப்பில் இருந்து பெற்றது. சுருக்கமாக கூறுவதென்றால் ஆல்கரிதம் என்பது, ஒரு முடிவுபெற, படிப்படியாய், முடிவுடைய படிகளுடன், முடிவுபெறும் தீர்முறை எனலாம். பார்க்க; படிமுறைத் தீர்வு
- algorithm ஆங்கிலம்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---படித்தீர்வு--- DDSA பதிப்பு + வின்சுலோ +