உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:அஜித்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வாருங்கள், அஜித்!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 07:55, 8 செப்டெம்பர் 2006 (UTC)Reply

குறிப்பு

[தொகு]

அஜித், வந்த வேகத்தில் நீங்கள் பல சொற்களை சேர்த்து வருவது கண்டு மகிழ்ச்சி. நீங்கள் பொருள் சேர்க்க ஏதேனும் அச்சு வடிவ அல்லது இணைய அகராதியை பயன்படுத்துகிறீர்கள் என்றால் இதே பக்கத்தில் தெரிவிக்கவும். பெரும்பாலும், உங்கள் சொந்த சொற்களில் பொருள் விளக்குவது வரவேற்கப்படுகிறது. சொற்களை சேர்க்கும்போது சரியான படிவத்தை பயன்படுத்துங்கள். எடுத்துக்காட்டுக்கு, belittle என்பது வினைச்சொல். ஆனால், தவறுதலாக இதற்கு பெயர்ச்சொல் சேர்க்கும் படிவத்தை சேர்த்திருக்கிறீர்கள். இது போன்ற எளிய பிழைகளை நீங்கள் கவனித்து திருத்தலாம். எதற்கும், ஒரு முறை நீங்கள் புதுப் பயனர் பக்கத்தை ஒரு முறை பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். உங்களிடம் இருந்து தொடர் பங்களிப்புகளை எதிர்ப்பார்க்கிறேன். நன்றி--ரவி 08:38, 8 செப்டெம்பர் 2006 (UTC)Reply

அஜித், நீங்கள் பக்கங்களை சேமிக்கும்போது, நீங்கள் தரும் பொருளை, தொகுப்புச் சுருக்கப் பெட்டியில் இட்டு சேமியுங்கள். இதன் மூலம், நீங்கள் செய்யும் தொகுப்புகளின் தன்மையை பிறர் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் இருந்தே அறிந்து கொள்ள இயலும். மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. --ரவி 08:59, 8 செப்டெம்பர் 2006 (UTC)Reply

அஜித், பன்மைச் சொற்கள் (எடுத்துக்காட்டு - stars, contents), வினைச்சொற்களின் இறந்த கால (எடுத்துக்காட்டு - constituted), தொடர் கால வடிவங்கள் (எடுத்துக்காட்டு - raining) ஆகியவற்றுக்கு தனிப்பக்கங்களை துவக்க வேண்டாம். இவ்வாறான பக்கங்களை நீக்கிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். தங்கள் பங்களிப்புகளில் கட்டுப்பாடு விதிப்பதாக தயவு செய்து கருத வேண்டாம். நிர்வாகக் காரணங்களுக்காகவும் பயன்பாட்டு எளிமைக்காகவும் இந்நடைமுறைகளை இங்கு கையாண்டு வருகிறோம். தமிழ் விக்சனரியில் ஓரிரு நாட்கள் பங்களித்து வந்தாலே உங்களுக்கு இவை புரிபட்டு விடும். நன்றி.--ரவி 09:22, 8 செப்டெம்பர் 2006 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:அஜித்&oldid=16501" இலிருந்து மீள்விக்கப்பட்டது