பயனர் பேச்சு:Info-farmer/விக்சனரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தகவலுழவன், விக்சனரியில் சொற்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது தவிர்ந்த வேறு மேம்பாடுகளுக்கான தேவைகள் குறித்தும் கட்டுரையில் குறிப்பிட்டால் நல்லது என்று எண்ணுகிறேன். ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போல் அல்லாது, தமிழ்ச் சொற்கள் பால், இடம், காலம் முதலியன குறிக்கும்போதும், உருபுகளோடு சேரும்போதும், எச்சங்களாகப் பயன்படும்போதும் பல மாற்றங்களை அடைகின்றன. இவை குறித்த தகவல்களையும் விக்சனரி போன்ற இணைய அகரமுதலிகளில் உள்ளடக்க முடியும். இது புதிதாகத் தமிழைக் கற்றுக்கொள்வோர், தமிழ் படிக்கும் மாணவர்கள் போன்றோருக்குப் பயனுள்ளதாக அமையும். இதற்கான மனித வளம் இப்போது இல்லை என்பதை நான் அறிவேன் ஆனாலும் இவற்றையெல்லாம் செய்யவேண்டி உள்ளது என்பதை அறிந்து வைத்திருத்தல் நலமே.

விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் இணைப்பு இல்லாத எந்தச் சொல்லின்மீது சொடுக்கினாலும் அது விக்சனரிக்கு இணைப்புக்கொடுப்பதை அண்மையில்தான் கவனித்தேன். இந்த வசதி தமிழில் முறையாகப் பயன்பட வேண்டுமானால் விக்சனரியில் புதிய மேம்பாடுகளைச் செய்யவேண்டும். ----Mayooranathan (பேச்சு) 10:26, 13 செப்டம்பர் 2013 (UTC)

தங்களுரை மகிழ்ச்சியளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னமேயே, நீங்கள் இம்முயற்சிகளை எடுத்ததையும் இன்னும் என்னுள் கொண்டுள்ளேன். அதற்குரிய நிரலரை தேடி வருகிறேன். எண்ணிக்கைக் கூட்டுவது என்பது மிகமிக அடிப்படையான பணியே. அதற்கு தேவைப்படும் கணியநிரல் நுட்பங்களை, இப்பொழுது கற்றும், கேட்டும் வருகிறேன். தமிழ் சொற்களின் எண்ணிக்கை, தமிழ் விக்சனரியில் குறைவு என்ற உங்களின் கூற்று என்னைத்துண்டியது. அதற்காக சென்னைப்பேரகரமுதலியின் தரவுகளைப் பதிவேற்ற முயன்று வருகிறேன். அதன் கட்டக அமைப்பில் சில நிரல்நுட்ப தடைகள் உள்ளன. விரைவில் தீர்க்கப்படும். ஒரு தமிழ் சொல்லுக்கு, பல்வேறு மொழிபெயர்ப்புகள் அமைந்து, உண்மையில் தமிழ் விக்சனரி பன்மொழி அகரமுதலியாவதற்கான ஒரு திட்டத்தினையும் நகர்த்திக் கொண்டுள்ளேன். அது இந்திய மொழிகளில் ஏறத்தாழ 15 மொழிகளில் இருக்கும். அதற்கான சோதனைச் சொல்லினைக் கண்டு, (அம்மா) அதன் பேச்சுப்பக்கத்தில் தங்களின் எண்ணங்களை தவறாமல் குறிப்பிடவும். முதற்கட்டமாக மலையாளம்-தமிழ், தெலுங்கு-தமிழ், இந்தி-தமிழ் சோதனை ஓட்டம் நிகழ்ந்துள்ளது. குடும்ப சூழல் காரணமாக பயணிக்க இயலாமல் உள்ளேன். அதோடு சிறு பொருளாதார தடையும் உள்ளது. எது எப்படி இருப்பினும், இன்னும் ஒரு வருடத்தில் அவை ஒலிக்கோப்புகளுடன் இங்கு அமையும். விக்கி கூடலில் உங்களை நேரில் சந்திக்கப் போகிறேன் என்ற மகிழ்ச்சியுடன் இவ்வுரையை முடிக்கிறேன். வணக்கம்.-- உழவன் +உரை.. 01:24, 17 செப்டம்பர் 2013 (UTC)