அம்மா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

Wikipedia-logo.png
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க.
(கோப்பு)

பொருள்[தொகு]

 • அம்மா, பெயர்ச்சொல்.
அம்மா:
தாயும், சேயும்~1917
 1. தாயை குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  (எ. கா.) அம்மாவைப் பேணு.
 2. பெண்களை, பாசமாக அழைக்கவும், மரியாதையாக அழைப்பதற்குப் பயனாகும் சொல்.
  (எ. கா.) தங்கையைப் பார்த்து, அம்மா இங்கே வா என்று அழைப்பர்.
 3. அம்மா என்பது ஒரு கூட்டுச்சொல்லாகவும் அமைந்து பொருள் தருகிறது.
  (எ. கா.) அம்மா அரிவை.. திருக்குறள்-1107 - அழகிய மாமை நிறம் உடைய அரிவை.
 4. அம்மா என்பது இடைச்சொல்லாகவும் அமைந்து பொருள் தருகிறது.
  • ஒரு வியப்பு இடைச்சொல்லாக வருவதுண்டு.
  (எ. கா.) அம்மா! எவ்வளவு பெரிய யானை
  • அதிசய இரக்கக்குறிப்பு
  (எ. கா.) அவா...வெறும்பொருள தம்மா(சீவக.)
  • ஒர் மகிழ்ச்சி/உவப்புக் குறிப்பு
  (எ. கா.) அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் ( திவ். பெருமாள். 9, 6)
 5. ஓர் அசைச்சொல்லாகவும் அமைந்து பொருள் தருகிறது. (பாரத. இராசசூ. 91.)
 • அம்மாடி என்னும் சொல்லின் விளக்கத்தை இங்குக் காணவும்

விளக்கம்[தொகு]

 • பகுபதம்: அம் + ம் + ஆ

மொழிபெயர்ப்புகள்[தொகு]

இந்திய மொழிகள்[தொகு]

உலக மொழிகள்[தொகு]

இலக்கிய மேற்கோள்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+  + indo wordnet +த. இ. க. க. தமிழ்-ஆங்கில அகரமுதலி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்மா&oldid=1633047" இருந்து மீள்விக்கப்பட்டது