உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Singamugan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரைகள்

[தொகு]

வருக!

  • பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.
வணக்கம்.--தகவலுழவன் 05:17, 28 பெப்ரவரி 2011 (UTC)

ஐயா உங்களது பணிக்குப் பாராட்டுகள். எனது தமிழில் சிறு பிழை ஆரம்பத்தில் வரக்கூடும். அதை நாளடைவில் சரிப்படுத்திக்கொள்கிறேன். எனது எழுத்துக்களில் எழுத்துப்பிழை வேண்டுமானாலும் அனுமதிக்கப்படலாம் ஆனால் பிறமொழிக்கலப்பு அடியோடு ஒழிக்கப்பட வேண்டியது. அவ்வாறு இருப்பின் உடனே தெறியப்படுத்துக. மேலும், ஆதிவிலங்கி என்பதை மூத்தவிலங்கி என மாற்றம் கொடுத்துள்ளேன். அது சரியாவென பார்த்து விடையனுப்பவும், மேலும் தலைப்பை திருத்தவும்.. உங்களுடைய உதவிகளுக்கு மிக்க நன்றி. மேலும் கட்டுரைகளின் தலைப்பில் பிழையிருப்பின் பக்கம் உருவாக்கிய பிறகு எவ்வாறு திருத்துவது என தெறியப்படுத்தவும். மேலும் துணை வேண்டின் சந்திக்கிறேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 18:30, 28 பெப்ரவரி 2011 (UTC)


சிங்கமுகன், விக்சனரி ஒரு பன்மொழி அகராதி என்பதால் (தமிழ்-தமிழ், ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம், என எம்முறையிலும் பக்கங்கள் அமையலாம்) தமிழில் தான் தலைப்பு அமையவேண்டும் என்று கட்டாயமல்ல. hypersensitivity, pest ஆகியவை ஆங்கில தலைப்பில் இருந்தாலும் உள்ளே தமிழில் அர்த்தமும் விளக்கும் இருந்தாலும், ஆங்கிலத் தலைப்பே இருந்துவிட்டு போகட்டும். அவற்றின் தமிழ்ப்பெயர்களில் தனியே பக்கங்களைத் தொடங்கி அவற்றுள் ஆங்கில அர்த்தத்தை அளிக்கும் போது இவற்றுக்கு உள்ளிணைப்பு கொடுக்கலாம். --Sodabottle 05:29, 2 மார்ச் 2011 (UTC)


நன்றிகள் - --சிங்கமுகன் 06:14, 2 மார்ச் 2011 (UTC)

மலையாளக் கல்வி இணையம்

[தொகு]

இந்திய விக்கிபீடிய மாநாட்டு ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான நவீனுடன் உரையாடிய போது, இத்தளத்தை கேட்டுப் பெற்றேன். நமது தமிழ்விக்கிப்பீடியாவின் மலையாளம் கட்டுரையிலும் இதனை இணைத்துள்ளேன். இதனை விட சிறந்த தளம் உண்டோ?உங்களின் கருத்தறிய ஆவல்.--07:37, 11 நவம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

ஆம், இது நல்ல வலைத்தளமே. இவ்வலைத்தளத்தை நான் ஏற்கனவேக் கண்டுள்ளேன். இது மலையாளம் கற்க வேண்டுபவர்களுக்கு நல்லதொரு ஆசானாகச் செயல்படும் என்பதில் ஐயமில்லை. ஒன்று உங்களுடன் பகிர விழைந்து இதை இடுகிறேன் “Our Mother Tongue is our wealth.” வலைத்தளத்தின் முதல் வரி. என்னே ஒரு தொடக்கம். நன்றிகளுடன். --சிங்கமுகன் 10:30, 11 நவம்பர் 2011 (UTC)Reply

பேச்சு:வீ என்பதில், தங்கள் எண்ணங்களைத் தெரிவிக்கக் கோருகிறேன். வணக்கம்.---- உழவன் (Info-farmer)+உரை.. 03:20, 12 ஆகத்து 2015 (UTC) Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Singamugan&oldid=1331215" இலிருந்து மீள்விக்கப்பட்டது