பறக்கும் பாம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பறக்கும் பாம்பு:
-
பறக்கும் பாம்பு:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பறக்கும் பாம்பு, பெயர்ச்சொல்.
  1. ஒரு பாம்பு இனம்/வகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. srilankan flying snake,

விளக்கம்[தொகு]

  • இஃதொரு அரியவகைப் பாம்பு இனம்..இலங்கைத் தீவிலும், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் அரிதாகக் காணப்படுகிறது...'ஸ்ரீலங்கன் பறக்கும் பாம்பு' என்றும் அறியப்படுகிறது...பறப்பதற்கு இறக்கைகள் இருக்காது...மரத்திலிருந்து கீழே இருக்கும் வேறொரு மரத்துக்கு இது குதித்துத் தாவிச் செல்லும். அப்போது அதன் உடல் பட்டையாக மாறி, காற்றில் உடல் சுழன்று செல்வதால், பறப்பது போலத் தெரியும்...இந்த பாம்பு சுமார் இரண்டு அடி நீளத்தில், மரப்பட்டை நிறத்தில், பச்சை நிறம் கலந்த செதில்களுடன், தலையில் கருப்பு, மஞ்சள் நிறத்துடன் காணப்படும்... இந்த வகை பாம்புக்கு நஞ்சுத்தன்மை குறைவு..அடர்ந்த காடுகளில் பழம்பெரும் மரங்களிலும், அடர்ந்த தாவரப் பகுதிகளிலும் வாழும் இது சில சமயங்களில், மனிதர்கள் வாழும் குடியிருப்புகளுக்கும் வந்துவிடும்...பல்லி, ஓணான், எலி, வௌவால், சிறு பறவைகள், மற்ற சிறுஇனப் பாம்புகளை பறக்கும் பாம்பு இரையாக்கிக் கொள்கிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பறக்கும்_பாம்பு&oldid=1986574" இலிருந்து மீள்விக்கப்பட்டது