உள்ளடக்கத்துக்குச் செல்

பிதற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிதற்று (வி)

  1. அறிவின்றிக் குழறு; உளறு
  2. அவசத்தால் விடாது பேசுதல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. talk nonsense; chatter, babble, prate
  2. rave, as a delirious person
விளக்கம்
பயன்பாடு
  • நீண்ட பகல் நேரம் முழுவதும் இராசசிம்மன் அன்றைக்குக் கண் விழிக்கவேயில்லை, உணவும் உட்கொள்ளவில்லை. தூக்கத்தில் அவன் என்னென்னவோ பிதற்றினான் (பாண்டிமாதேவி, தீபம் நா. பார்த்தசாரதி)
  • துப்பாக்கியுடன் ஒரு மனிதனைக் கண்டவுடன் நடுக்கத்தில் பிதற்றினான், “ஐயோ! எனக்கு எதுவும் தெரியாதுங்க!! என்னை விட்டுடுங்க!” அழவும் ஆரம்பித்தான் ([1])
  • "பயமாயிருக்கு… அம்மா பயமாயிருக்கு…. அப்பா… என்ரை அப்பா…" தண்ணீர் தெளித்ததும் கண்ணை விழித்துப் பார்த்துவிட்டுப் பிதற்றினாள். காய்ச்சல் அனல் பொரிந்தது. (யாழினி என்றொரு சிலோன் பொண்ணு, தமிழ்நதி)

(இலக்கியப் பயன்பாடு)

  • இவை பிதற்றுங் கல்லாப் புன்மாக்கள் (நாலடி, 45)
  • ஓர்நாண் முற்றும் பிதற்றினானே (சீவக. 1082).

(இலக்கணப் பயன்பாடு)


பிதற்று (பெ)

  • அறிவின்றிக் குழறுகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பித்தனா னென்னும் பிதற்றொழிவ தெந்நாளோ (தாயு. எந்நாட். 1120)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிதற்று--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :குழறு - உளறு - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிதற்று&oldid=1980125" இலிருந்து மீள்விக்கப்பட்டது