பிள்ளைப் பெற்றாள் மருந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பிள்ளை+ பெற்றாள் + மருந்து

பொருள்[தொகு]

  • பிள்ளைப் பெற்றாள் மருந்து, பெயர்ச்சொல்.
  1. ஒரு லேகியம்-மருந்து

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a medicinal preparation, made of herbs given to women after childbirth,

விளக்கம்[தொகு]

  • இஃதொரு கொச்சைத் தமிழ்ச் சொல்... சில சமூகத்தாரிடையே புள்ள பெத்தா மருந்து என்று வழக்கிலுள்ளது...குழந்தை பிரசவித்தப் பெண்களின் உடல்களை, நோய்கள் தாக்காமல் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கிக் காக்கவும், பிரசவத்தினால் வலுவிழந்த, அழுத்தத்திற்குக் குறியான உள்ளுறுப்புகளுக்கு வலுவூட்டவும், சன்னி போன்ற உயிர்க்கொல்லி நோய்களைத் தடுக்கவும், மூலிகை வேர்கள், பட்டைகள், விதைகளைக்கொண்டு செய்துக்கொடுக்கப்படும் ஓர் இலேகிய மருந்து...இதை சாதாரணமாக எல்லோருமே உடற்நலத்திற்காகச் சாப்பிடலாம்...மிகுந்தச் சூட்டையுண்டாக்குமாதலால் அளவறிந்து சாப்பிடவேண்டும்...
  • இந்த மருந்தில் சேர்க்கப்படும் மூலிகைப் பொருட்களில் சுக்கு, மிளகு, வால்மிளகு, வாய்விளங்கம், ஏலம், கிராம்பு, இலவங்கப்பட்டை, பறங்கிச்சக்கை, அரிசித்திப்பிலி, கண்டந்திப்பிலி, சிற்றரத்தை, பேரரத்தை, பெருஞ்சீரகம், சீரகம், ஓமம் ஆகியவை முக்கியமானவை...இவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து, மைய அரைத்து, வெல்லமும், பசுந்நெய்யும் சேர்த்து மிதமானச் சூட்டில் கிண்டிக் கிளறிப், பக்குவப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் ஒரு நெல்லிக்காய்ப் பிரமாணம் பாலோடு உண்பர்...குறைந்த மூலிகைப்பொருட்களில் இப்படியே செய்து, தீபாவளியன்று அதிகாலை தலைக்குளித்து, சாமி கும்பிட்டு, பட்சணங்களைத்தின்றபின், சிறிது இந்த இலேகியத்தை தீபாவளி மருந்து என்னும் பெயரில் உண்பது சம்பிரதாயம்...


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்