பேச்சு:அன்னியோன்னியபாவம்
தலைப்பைச் சேர்Appearance
இந்தப்பக்கத்தில் தரப்பட்ட 'ஒன்று மற்றொன்று ஆகாமை' எனும் பொருளில் தவறுயிருப்பதாகப் படுகிறது...சரி பார்க்கவும்...ஒன்றுக்கொன்று இணக்கமாகயிருப்பதையே இந்தச்சொல் குறிப்பிடும்...--Jambolik (பேச்சு) 15:56, 24 ஏப்ரல் 2016 (UTC)
- நீங்கள் குறிப்பிடுவது அன்னியோன்னியம் என்ற சொல்லுக்கு பொருளாக நினைக்கிறேன். அன்னியோன்னியபாவம் என்பது அதற்கு எதிர்மறையானதாக கொள்ளவேண்டுமல்லாவா?. பாவம் என்பது bhavam அல்ல pavam. பாலாஜி (பேசலாம் வாங்க!)
- எதிர்மறைப் பொருளுக்கு ' அன்னியோன்னியா பாவம்' என்றே தலைப்புச்சொல் இருக்கவேண்டும் என்றும், pavam என்னும் சொல் இந்த இடத்தில் பொருந்தாது என்றும் எண்ணுகிறேன்.--Jambolik (பேச்சு) 15:21, 27 ஏப்ரல் 2016 (UTC)
- ஐயா.[1] இப்பக்கத்தை ஆதாரமாகக் கொண்டு இச்சொல் சேர்க்கப்பட்டது. தங்கள் பார்வைக்கு. தமிழ் நாட்டு பாட நூல் கழகம் வெளியிட்ட அகராதி --பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:20, 27 ஏப்ரல் 2016 (UTC)
- இந்தச்சொல் வடமொழி மூலத்தைக்கொண்டது என்பதை மறுப்பதற்கில்லை...சமஸ்கிருத அகராதியின்படி अन्योन्यभाव--அன்யோன்யபாவ-- என்றால் mutual exchange of condition என்றும், अन्योन्याभाव--அன்யோன்யாபாவ-- என்றால் mutual negation என்றும் பொருளாகிறது..[[2]]--பொதுவாக சமஸ்கிருத சொற்களுக்கான பொருளை அந்த மொழியின் அகராதியில் கண்பதே சிறப்பு.--Jambolik (பேச்சு) 18:28, 27 ஏப்ரல் 2016 (UTC)
- சரி. தாங்கள் எது சரி என்று கருதுகிறீர்களோ அது போலே சொல் பொருள்களில் மாற்றம் செய்திடுங்கள் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:42, 28 ஏப்ரல் 2016 (UTC)
Start a discussion about அன்னியோன்னியபாவம்
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve அன்னியோன்னியபாவம்.