பயனர் பேச்சு:Balajijagadesh

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Balajijagadesh!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி -->signature button.png இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

--Sodabottle 08:48, 20 மார்ச் 2011 (UTC)

வருகைக்கு நன்றி-நேற்றைய பதிவுகள் குறித்து..[தொகு]

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்தமைக்கு நன்றி. நேற்று செய்த பதிவுகளில் மாற்றங்கள் செய்துள்ளேன். கவனிக்கவும். அவற்றை எளிமையாகச் செய்ய, சில ஆழிகள் தேவைப்படுகின்றன. அவை உருவாக்கப்பட்டு வருகின்றன. உங்களது நிரல் அறிவால் அதை இன்னும் மேம்படுத்தி பதிவேற்றினாலும் சரி. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 02:26, 9 திசம்பர் 2014 (UTC)

ஒப்பமிட்டு கருத்திடுக[தொகு]

மீடியாவிக்கி பேச்சு:Gadget-mySandbox.js என்பதனைக் கண்டு, ஒப்பமிட்டு கருத்திடவும்.--தகவலுழவன் (பேச்சு) 05:26, 20 திசம்பர் 2014 (UTC)

posted by thoughts in the page.பாலாஜி (பேச்சு) 05:54, 20 திசம்பர் 2014 (UTC)

படமிடுதல்[தொகு]

தொகுப்பானில் அடியில் படமிடுதலுக்கான வார்ப்புரு உள்ளது. அதனைப் பயன்படுத்துவதன் மூலம் அதற்கான பகுப்பும் எளிமையாக தோன்று விடும். மாற்றத்தை , மின்னற்றழுக்கு என்பதில் கண்டறிக.--தகவலுழவன் (பேச்சு) 01:09, 25 திசம்பர் 2014 (UTC)

how to add the picture while pasting it and creating it in the first time. because when I paste and new word and picture, the picture comes down below categories. To avoid it I am putting the picture at the top.பாலாஜி (பேச்சு) 02:55, 25 திசம்பர் 2014 (UTC)
இதற்கான நிகழ்படத்தை விரைவில் உருவாக்குகிறேன். அதுவரை இப்படமிடுதலுக்கான குறிப்புகள், உங்களுக்கு உதவும்.
  • முதலில் சொல்லை உருவாக்கிக் கொள்ளவும். உருவாக்கப்பட்ட சொல்லில் படமிடுதலுக்கானக் குறிப்புகளைக் கீழே தந்துள்ளேன்.
  • மறவாமல் முதலிலேயே, இடவேண்டிய படக்கோப்பின் பெயரை நகலெடுக்கவும்.
படமிடுதல்-1-கோப்பின்-பெயரை-நகலெடுத்தல்.png
  • படவார்ப்புரு உள்ள இடம்.
படமிடுதல்-3-படத்தின்-வார்ப்புருவை-இடல்.png
  • பின்பு, முதலில் இருக்கும் ஒலிக்கோப்புக்கு மேலே, மொழி வார்ப்புருவுக்கு கீழே, படவார்ப்புருவை இடவும்.
படமிடுதல்-2-படத்தை-அமைக்கும்-இடம்.png
  • இப்பொழுது நகெலடுத்த கோப்பினை பெயரை, படவார்ப்புருவில் இடவும்.
படமிடுதல்-4-படத்தின்-வார்ப்புருவை-இடல்.png

இதன் அளவுகள் பல்வேறு படங்களை இட்டு, சோதித்தப் பின்பே அமைக்கப்பட்டுள்ளது. --தகவலுழவன் (பேச்சு) 08:23, 25 திசம்பர் 2014 (UTC)

நன்றிபாலாஜி (பேச்சு) 16:57, 25 திசம்பர் 2014 (UTC)

w:விக்கிப்பீடியா:உதவித்தொகை என்பதில் கலந்து கொள்க[தொகு]

இந்திய விக்கிமீடியாவின் நிதி உதவியால், மடிக்கணினிப் பெற, தமிழ்விக்கிசமூகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, w:விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer (தகவலுழவன்) என்ற திட்டப்பக்கத்தில், விண்ணப்பித்துள்ளேன். இதுபற்றி ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் மேனிலைப் பங்களிப்பாளர்(Bureaucrats)களுக்கும், சிறப்புநிலைப் பங்களிப்பாளர்(system operator) களுக்கும், அவரவர் உரையாடற்பக்கத்தில், தனித்தனியே செய்தி விடுத்துள்ளேன். பிற பங்களிப்பாளரகளும், அத்திட்டபக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டைக் கூற அழைக்கிறேன். மேலும், பிற தமிழ் திட்டங்களின் ஆலமரத்தடியிலும், இச்செய்தி விடுத்துள்ளேன். வணக்கம்.---- உழவன்+உரை.. 01:46, 11 சூலை 2015 (UTC)

அலைப்பேசி[தொகு]

உங்களது அலைப்பேசி எண்ணைத் தவறவிட்டுவிட்டேன். எனது எண்ணுக்கு, அழைக்கவும். வணக்கம்.---- உழவன்+உரை.. 00:38, 15 சூலை 2015 (UTC)

தற்போது நேரம் இருப்பின் எனது எண்ணுக்கு, அழைக்கவும்.---- உழவன் (Info-farmer)+உரை.. 17:31, 11 ஆகத்து 2015 (UTC)

இத்திட்டபக்கத்திற்கு வருக[தொகு]

விக்சனரி:விக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டுமுயற்சி என்ற திட்டப்பக்கத்தில் உங்களது ஒப்புதலை தரக் கோருகிறேன்--தகவலுழவன் (பேச்சு) 04:46, 23 அக்டோபர் 2015 (UTC)

பெயர்ச்சொற்கள்[தொகு]

பெயர்ச்சொற்கள் என்பதை இணைக்கத் தேவையில்லை. தமிழ்-பெயர்ச்சொற்கள் என்பது வார்ப்புருவால் தானாகவே இணையும் என்பதால். உங்கள் பதிவுகளை, அடிக்கடி பார்ப்பது, மகிழ்ச்சியாக இருக்கிறது. வணக்கம்--தகவலுழவன் (பேச்சு) 03:07, 24 அக்டோபர் 2015 (UTC)

நான் இணைக்க வில்லையே. எனக்கு தாங்கள் சொல்வது விளங்கவில்லை. எடுத்துக்காட்டு கூறினால் நன்றாக இருக்கும். பாலாஜி (பேச்சு) 03:10, 24 அக்டோபர் 2015 (UTC)
இந்த மாற்றம் செய்தபோது,

அதன் கீழுள்ள பெயர்ச்சொல் பகுப்பை நீக்க மறந்தீர்கள். இதனால் இரு பெயர்ச்சொல் பகுப்புகள் இணைந்தது. அதனை நீக்கி, சரி செய்துள்ளேன்.வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 03:28, 24 அக்டோபர் 2015 (UTC)

நன்று. திருத்திவிடுகிறேன். பாலாஜி (பேச்சு) 04:38, 24 அக்டோபர் 2015 (UTC)

படமிடுதல்2[தொகு]

செந்நகரை என்பதில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தைக் காணவும்.இவ்வாறு நீங்கள் படம் இடும் சொற்களில், பட வார்ப்புருவினைப் பயன்படுத்தினால், அதனை பிற மொழி விக்சனரிக்கும் பயன்படுத்த எளிமையாக, இப்பகுப்பு உதவும். இதுபற்றி நாம் ஏற்கனவே இப்பேச்சுபக்கத்தில் உரையாடி உள்ளோம், எனவே, மறவாமல் படத்தினை வார்ப்புருவுடன் இணைக்கவும்.வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 02:29, 16 நவம்பர் 2015 (UTC)

அப்படியே. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி. எல்லாம் நலம்தானே? பாலாஜி (பேச்சு) 07:22, 16 நவம்பர் 2015 (UTC)

விக்கி தானுலாவி[தொகு]

இதுபோல பிழைகளைக் கண்டு சீர் செய்யவும். சொற்களை வேகமாகப் பதிவேற்றும் போது, சரிபார்த்து செய்யுங்கள். களைகள் இல்லாமல் பதிவேற்றும் கலை உங்களுக்கு எளிதானதே. சற்று கவனம் மட்டுமே தேவை--தகவலுழவன் (பேச்சு) 16:52, 5 திசம்பர் 2015 (UTC)

அப்படியே :) பாலாஜி (பேச்சு) 17:30, 5 திசம்பர் 2015 (UTC)

வேண்டுகோள்[தொகு]

wikipedia:en:Internet Engineering Task Force என்ற கட்டுரையை, தமிழ் விக்கிப்பீடியாவில், சுருக்கமாக உருவாக்குங்கள். பல கட்டுரைகளில் இது பயனாகும் சொல். அனைவரும் அறியப்படவேண்டியது ஆகும். --தகவலுழவன் (பேச்சு) 06:22, 8 திசம்பர் 2015 (UTC)

wikipedia:ta:இணைய பொறியியல் பணிக்குழு தாங்கள் வேண்டியது போல் கட்டுரையை உருவாக்கிவிட்டேன். எதேனும் தவறு இருந்தால் கூறவும் பாலாஜி (பேச்சு) 19:14, 8 திசம்பர் 2015 (UTC)
கண்டேன். மகிழ்ந்தேன். உட்பிரிவுகளையும், குறிப்பாக மேற்கோள்கள் இருக்கும் வாக்கியங்கள் முக்கியமானவையாக இருக்கின்றன. அவை பிற அனைத்துலக அமைப்புகளோடு இணைந்து செயல்படுவது சிறப்பல்லாவா?. .அவசரமில்லை.. உங்களுக்கு நேரம் இருக்கும் போது, ஒவ்வொன்றாக விரிவாக்கவும்--தகவலுழவன் (பேச்சு) 00:33, 9 திசம்பர் 2015 (UTC)

பகுப்பு[தொகு]

விக்கித்தானுலாவி மூலம் பகுப்புகளைச் சேர்க்கும்போது சில பக்கங்களில் தவறான பகுப்புகள் இணைக்கப்படுகின்றன. காண்க: அறுசமயம், தொள்ளிரவு, சீபதி. இலக்குமி என்ற சொல்லிருந்தால் பகுப்பு:லட்சுமியின் பிற பெயர்கள் என்ற பகுப்பை இணைக்க வேண்டும் என்ற தானியக்க அணுகுமுறை தவறானது. --மதனாகரன் (பேச்சு) 14:59, 9 திசம்பர் 2015 (UTC)

சுட்டிகாட்டியதற்கு நன்றி. எதிர்காலத்தில் கவனம் கொள்கிறேன் :) -- பாலாஜி (பேச்சு) 23:37, 9 திசம்பர் 2015 (UTC)

svg[தொகு]

மையநோக்கு விசை என்பதில் நீங்கள் உருவாக்கிய படம் கண்டு மகிழ்ந்தேன். அதனை விக்கிப்பீடியாவுடன் இணைக்கவும். மேலும், இனி, அதுபோன்ற கோப்புகளை, பொதுவகத்தில் இப்பகுப்புடன் இணைக்கவும்.--தகவலுழவன் (பேச்சு) 02:31, 13 திசம்பர் 2015 (UTC)

சரி -- பாலாஜி (பேசலாம் வாங்க!)

பகுப்பு இணைக்கவும்[தொகு]

கூட்டுச்சொற்கள் பகுப்பையும் இணைக்கவும்#:(எ. கா.) ஈர்ப்பின் மையம்--தகவலுழவன் (பேச்சு) 12:53, 24 திசம்பர் 2015 (UTC)

சரி -- பாலாஜி (பேசலாம் வாங்க!)

கவனிக்கவும்-படப்பகுப்பு[தொகு]

என்று ஆங்கிலச் சொற்களுக்கு படப்பகுப்பு இடவும். --தகவலுழவன் (பேச்சு) 04:18, 28 சனவரி 2016 (UTC)

அப்படியே - பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:44, 28 சனவரி 2016 (UTC)

வேகமான பதிவேற்றங்கள்[தொகு]

  • தங்களின் தமிழ்ச்சொற்களைப் பதிவேற்றும் வேகம் மலைக்கவைக்கிறது...எப்படி இத்தனைச் சொற்களை ஒரே நேரத்தில் பதிவேற்றுகிறீர்கள்..தெரிந்தால் அதே உத்தியை நானும் பின்பற்றலாமென்று நினைக்கிறேன்..AWB என்றால் என்ன?..--Jambolik (பேச்சு) 22:26, 15 பெப்ரவரி 2016 (UTC)
@Jambolik: தங்கள் வார்த்தைகளை பாராட்டுகளாக நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். நன்றி. AWB என்பது AutoWikiBrowser. அதன் விவரங்களை இங்கே காணலாம். அதன் உரையாடல் பக்கங்களிலும் பல தகவல்கள் உள்ளன. நான் முதலிலேயே wikimarkupகளை excelஇல் தயார் செய்து கொண்டு விக்சனரியில் AWB மூலம் பதிவேற்றுகிறேன். AWBஇல் பதிவேற்றம் செய்வது browserஇல் செய்வதை விட வேகமாக செய்யலாம். தாங்களும் AWB பதிவிறக்கம் செய்து முயற்சி செய்து பாருங்கள். ஏதேனும் இடர் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள். என்னால் முயன்ற வரை உதவுகிறேன். -பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:42, 16 பெப்ரவரி 2016 (UTC)
  • நன்றி..என்னால் இயலுமா என்றுத்தெரியவில்லை!..பார்க்கலாம்!..வணக்கம்--Jambolik (பேச்சு) 15:46, 16 பெப்ரவரி 2016 (UTC)
தாங்கள் AWB தரவை எங்கிருந்து பெறுகிறீர்கள் சொன்னால் நானும் பதிவேற்றலாம்.-- மாதவன்  ( பேச்சு ) 09:57, 19 மார்ச் 2016 (UTC)
@maathavan: இங்கிருந்து. மேலும் tamilvuயில் பல அகராதிகளும் நிகண்டுகளும் உள்ளன. மற்றும் விக்கிமூலத்தில் பல நாட்டுடமையாக்கப்பட்ட அகராதிகள் உள்ளன.
நன்றி பாலாஜி-- மாதவன்  ( பேச்சு ) 10:25, 19 மார்ச் 2016 (UTC)
தங்களுக்கு bot பகுதி awbஇல் வேலைசெய்கிறதா? எனக்கு தமிழ் விக்கிக்கு வேலைசெய்கிறது. ஆனால் விக்சனரிக்கு வேலைசெய்யவில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 09:49, 24 மார்ச் 2016 (UTC)
நான் bot பயன்படுத்தவில்லை. அதனால் தெரியவில்லை. பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:50, 24 மார்ச் 2016 (UTC)

மின்னஞ்சல்[தொகு]

தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.-- மாதவன்  ( பேச்சு ) 08:01, 26 மார்ச் 2016 (UTC)

தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்-- மாதவன்  ( பேச்சு ) 11:05, 30 மார்ச் 2016 (UTC)
தங்களுக்கு மறுமின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். தங்கள் AWB இல் பயன்படுத்தும் column header மற்றும் text இனை தாருங்கள்.-- மாதவன்  ( பேச்சு ) 10:49, 31 மார்ச் 2016 (UTC)
@maathavan:அனுப்பியுள்ளேன். பார்க்கவும். வேகமாக பதிவேற்றும் பொழுது கவனம் கொள்ளுங்கள். பாலாஜி (பேசலாம் வாங்க!) 01:48, 2 ஏப்ரல் 2016 (UTC)
தங்களுக்கு மறுமின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.-- மாதவன்  ( பேச்சு ) 05:38, 2 ஏப்ரல் 2016 (UTC)
@maathavan: AWBயில் நீங்கள் வினவியது போல் எவ்வாறு "#..." தவிர்பது என்பதை பற்றி படத்துடன் மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். மேலும் பதிவேற்றம் செய்யும் பொழுது தங்களுக்கு தெரிந்த, எளிதான ஆங்கில மொழிபெயர்ப்பையும் பதிக்கவும். பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:38, 2 ஏப்ரல் 2016 (UTC)
என் பேச்சுப் பக்கம் பாருங்கள்.-- மாதவன்  ( பேச்சு ) 14:24, 5 ஏப்ரல் 2016 (UTC)

வேண்டுகோள்[தொகு]

நீங்கள் பதிவேற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீச்சல்காரன் ஒரு சொல்லுக்குரிய தரவை, பல இணைய தமிழ் அகரமுதலிகளில் இருந்து எடுத்து தொகுத்து வைத்துள்ளார். அவரை மூன்று மாதங்களுக்கு முன் சந்தித்த போது தெரிந்து கொண்டேன். நாம் எதிர்கொள்ள இருக்கும் மூன்று நாட்பயிற்சியில், இது பற்றி ஆலோசிப்போம். அதுவரை புதிய சொற்களை பதிவேற்ற வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். நாம் அதுவரை பிற தேவைகளை எண்ணுவோம். நேரமிருப்பின் அழைக்கவும். விக்கிமூலம் பற்றி உரையாடுவோம். வணக்கம்--தகவலுழவன் (பேச்சு) 06:58, 8 ஏப்ரல் 2016 (UTC)

எனது பதிவேற்றங்களைக் கண்டு தங்களுக்கு மகிழ்சியாக இருப்பது எனக்கு உவகை அளிக்கிறது. நீங்கள் கூறியது போல் ஒரு பயனர் பல இணைய தமிழ் அகரமுதலிகளில் இருந்து எடுத்து தொகுத்து செய்வது கூட்டு முயற்சியா அல்லது தனி நபர் முயற்சியா? அதைப் பற்றி அவர் ஏதாவது விக்சனரி பக்கங்களில் ஏதாவது குறிப்பிட்டுள்ளாரா? நான் செய்யும் பதிவுகளால் அவருக்கு ஏதேனும் தொல்லை உள்ளதாக தங்களிடன் கூறினாரா? இந்த திட்டத்தைப் பற்றி அவர் கூட எனது பேச்சு பக்கத்தில் ஏதும் கூறாத பொழுது தங்கள் ஏன் என்னை மற்றும் மேலும் சிலரை பதிவேற்ற வேண்டாம் என்று கூறுகிறீர்கள். விக்கி என்பது கூட்டு முயற்சியால் நாலொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக சிறப்பாகும் வகையில் பலருடைய பங்களிப்பு மூலமாக நடைபெறுவது தானே. எதிர்காலத்தில் ஒருவர் சிறப்பாக தொகுக்கப்போகிறார் அல்லது பதிவேற்ற போகிறார் என்பதால் இன்று என்னை பதிவேற்ற வேண்டாம் என்று இவ்வளவு அனுபவம் வாய்ந்த தாங்கள் கூறுவது தங்களுக்கு தகுமா? நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள் மூன்று மாதங்களுக்கு முன் நீங்கள் பார்த்தீர்கள் என்று. அவர் அவருடைய வேலைக்கு இன்னும் எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்வாரோ? மேலும் இறுதியாக அவர் பதிவேற்றம் செய்வதுதான் உறுதியா? இடையிலேயே அவர் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டால்? அதுவரை விக்சனரி பயன்படுத்துபவர்களுக்கு நான் மற்றும் மேலும் சிலர் பதிவேற்றும் வார்த்தைகள் கிடைக்காமல் செய்வது நியாயமா? தங்களுடைய இந்த நியாமற்ற வேண்டுகோள் எனக்கு மிகுந்த வருத்தையும் மன உளைச்சலையும் தந்துவருகிறது -- பாலாஜி (பேசலாம் வாங்க!)

மறுபதிவேற்றம்[தொகு]

பயனர் பேச்சு:Info-farmer/Tamil Lexicon/கண்டறிய வேண்டியன என்பதைக் காணவும். அதில் சிவப்பாக இருப்பவை விக்சனரியில் இல்லாதவை. நீலமாக இருக்கும் சொற்களில் பல ஆங்கில விளக்கம் இல்லாதவை. அதற்குரிய விரிவான பொருளும், ஆங்கில மொழிபெயர்ப்பும் இச்சொற்களில் அமைந்திருப்பதால், அச்சொற்களை பதிவேற்றம் செய்ய விரும்புகிறேன். உங்களின் எண்ணமென்ன? அதில் பெரும்பாலானவை நீங்கள் பதிவேற்றியதால், இந்த ஆலோசனை வினா?--தகவலுழவன் (பேச்சு) 15:35, 10 மே 2016 (UTC)

விக்சனரிக்கு மற்றும் மக்களுக்கு எது நன்றோ அதை செய்யுங்கள். இதற்கு முன்பு நான் செய்தேனா இல்லை வேறு எவர் செய்தார் என்று பார்க்க தேவையில்லை. நாளை நீங்கள் பக்க மேம்பாடு செய்வதை நாளை மறுநாள் வேறு ஒருவர் இன்னும் சிறப்பாக செய்வர். பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:47, 10 மே 2016 (UTC)
சரி. பாலாஜி. இல்லாத சொற்களை முதலில் உருவாக்க சீனியிடம் ஆலோசித்து வருகிறேன். விரைவில்,. அவரது தானியங்கி, இந்த அடிப்படையில் செயற்படும். இருக்கும் சொற்களில் படங்கள் இடப்பட்டிருக்கக் கூடும். ஆகவே, தானியங்கி தற்போது அதனை அறிந்து செயற்பட வகை செய்யாததால், இல்லாத சொற்களில் செயற்பட கேட்டுள்ளேன்.மீண்டும் மற்றொருமொரு உரையாடலில் சந்திப்போம். மற்றொரு குறிப்பு: இங்கு கருத்திட்டு, அக்கூடலுக்கு, இப்பகுதியில் விண்ணப்பமிடுக.

மீண்டும் புதிய வேறொரு செய்தியிழையில சந்திப்போம். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 04:38, 12 மே 2016 (UTC)

அப்படியே. பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:11, 12 மே 2016 (UTC)

வார்ப்புரு மாற்றம்[தொகு]

இந்த மூன்று சொற்களுக்கு மட்டும் வார்ப்புரு மாற்ற வேண்டும். மற்ற சொற்களுக்கு மாற்றி விட்டேன். வ. பே என்பதை இறுதியில் புள்ளியிட்டு வ. பே என மாற்றி யுள்ளேன். இம்மாற்றத்தை நினைவில் கொள்ளவே, மூன்று சொற்களுக்கு மாற்றக் கோருகிறேன்--தகவலுழவன் (பேச்சு) 08:47, 23 மே 2016 (UTC)

புதுப்பயனர் வரவேற்பு[தொகு]

புதுப்பயனர் வரவேற்பிற்கு {{subst:புதுப்பயனர்}}--~~~~ பதிலாக {{புதுப்பயனர்}} மட்டும் பயன்படுத்தலாமே?-- மாதவன்  ( பேச்சு ) 11:57, 24 சனவரி 2017 (UTC)

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?[தொகு]

வணக்கம் பாலாஜி. தமிழ் விக்சனரியில் நிருவாகப் பொறுப்பு ஏற்க தங்களுக்கு விருப்பமா? உங்களுக்கு விருப்பம் எனில், இது தொடர்பான வாக்கெடுப்பு நடைமுறையைத் தொடங்க விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 14:40, 24 ஏப்ரல் 2018 (UTC)

@Ravidreams: தங்கள் கேள்விக்கு நன்றி. விக்சனரியில் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம். சில பக்க நிரல்கள் மாற்றங்கள் மற்றும் ஏனைய நிருவாக செயல்களைச் செய்ய ஏதுவாக இருக்கும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:50, 26 ஏப்ரல் 2018 (UTC)
இங்கு உங்களைப் பரிந்துரைத்துள்ளேன். தாமதத்துக்கு வருந்துகிறேன். உங்கள் ஏற்பைப் பதிவு செய்த பிறகு, மற்ற பயனர்கள் வாக்கிடத் தொடங்குவர்.--இரவி (பேச்சு) 21:30, 13 மே 2018 (UTC)
@Ravidreams: நன்றி - ஏற்பை பதிவு செய்துவிட்டேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:47, 14 மே 2018 (UTC)

Significant long-term spam on this project[தொகு]

Hi, apologies for English, I do not speak your project's language - I have seen reports of spam pages on this project, such as this page. Please consider patrolling for spam pages and delete them. Thank you! :-)

ஹாய், ஆங்கிலத்திற்காக மன்னிப்பு கேட்கிறேன், உங்கள் திட்டத்தின் மொழியை நான் பேசவில்லை - இந்த திட்டத்தில் ஸ்பேம் பக்கங்களின் அறிக்கைகளை நான் கண்டிருக்கிறேன் this page. ஸ்பேம் பக்கங்களுக்கான ரோந்து பார்க்கவும் அவற்றை நீக்கவும். நன்றி! :-)

Kind regards/வகையான குறித்து There'sNoTime (பேச்சு) 19:10, 30 சூன் 2018 (UTC)

Whoops, already deleted by me (as a global sysop). Stryn (பேச்சு) 19:11, 30 சூன் 2018 (UTC)

வாக்கிடுக[தொகு]

விக்சனரி:ஆலமரத்தடி#வாக்கெடுப்பு: தமிழ் சொல்லுக்கு, மொழிபெயர்ப்புகளை இணைக்கும் கருவி --தகவலுழவன் (பேச்சு) 06:36, 3 அக்டோபர் 2018 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Balajijagadesh&oldid=1684185" இருந்து மீள்விக்கப்பட்டது