பேச்சு:அறைகலன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அறைகலனே சரி[தொகு]

அறைக்கலன் என்பதே சரி, இது இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்று ஒரு வாதமுள்ளது.(https://perumalmurugan.in/araikalanum-araikkalanum/) அறைகலன் = அறையினது கலன்; அறைக்கலன் = அறைக்கான கலன். அடிப்படையில் furniture என்பது எண்ண இயலாதது. furnitures என்பது பிழை. எனவே அறைக்கலன் என்றால் எண்ணக்கூடியதாகிவிடும் அது பிழை. எனவே அறையினது கலன் அறைகலன் என்பதே சரி. Neechalkaran (பேச்சு) 10:19, 16 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

அறைக்கலனே சரி[தொகு]

நீச்சல்காரன், அறையினது கலன் என்னும் ஆறாம் வேற்றுமையின் தொகையாயினும் அறைக்கலன் என்று ஒற்று மிகுந்தே வரவேண்டும். அறை என்பது அஃறிணை. அஃறிணைப் பெயர்களில் ஆறாம் வேற்றுமைக்கு வலிமிகும்.
பிற காட்டுகள்:
புலித்தோல், குதிரைக்கொம்பு (அஃறிணை)
தலைவர்பேச்சு, கவிஞர்கூற்று (உயர்திணை)

Rselvaraj (பேச்சு) 05:10, 23 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அறைகலன்&oldid=1983922" இலிருந்து மீள்விக்கப்பட்டது