பேச்சு:ஆனந்தமூலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒரே பக்கத்தில் நான்கு நிறப்பட்டைகள், மங்கிய தலைப்புகள், சீரற்ற உள் இணைப்புகள், தேவையற்ற அடைப்புக் குறி பயன்பாடு என்று இப்பக்கத்தின் வடிவமைப்பு மிகவும் அழகூட்டம் குறைந்து காணப்படுகிறது. யாரையும் குறை சொல்வது நோக்கம் இல்லை. ஆனால், இதனை மேம்படுத்த முனைய வேண்டும்.--ரவி 08:30, 28 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

வார்ப்புருவில் இருந்து வருகின்றன என்று அறிந்தே குறிப்பிட்டேன். ஒரு சில வார்ப்புருப் பேச்சுப் பக்கங்களிலும் தெரிவித்திருக்கிறேன். அண்மைய தானியங்கிப் பதிவேற்றத்துக்கு முன்பும் இது குறித்து நிறைய உரையாடப்பட்டதையும் அறிவேன். எனினும், இன்னும் நிறைவளிக்கும் வகையில், பல்வேறு கூறுகளும் ஒட்டு மொத்தமாக உருவாக்கும் வடிவமைப்பை சீராக்க வேண்டும். --ரவி 18:44, 28 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

dado2 என்பதில் இருப்பது போல இருக்கட்டும் என்றே எல்லோருமாகச் சேர்ந்து முடிவெடுத்தோம். ஆனால் இப்படி திடீர் என்று தகவல் உழவன் மாற்றியுள்ளார்! --செல்வா 01:41, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

dado2வில் உள்ள பொருட்களில் மேல் வரும் சிறிய எண் (பீடவிடை1) பயன்பாட்டை, தற்போது பதிவேறிய சொற்களில் பயன்படுத்தியபோது பயன்படுத்த வேண்டாமென நீங்களே கூறினீர்கள். அப்படி மறுத்தது எனக்கு குழப்பத்தைத் தந்தது. நீங்களே வடிவமைத்த அக்குறியீட்டை பயன்படுத்த வேண்டாமென்றால் இன்னும் அது ஏன் அவ்வடிமைப்பில் இருக்கிறது.அதுபோல கொடி பற்றியம் மாற்றுகருத்துகள் உள்ளன. அவையனைத்தையும் ஒரே இடத்தில் தொகுத்தால், நல்ல வரலாறாகவும், மேற்கொண்டு பலர் கலந்துரையாடவும் வழிவகுக்கும் என்பது என் எண்ணம்--த*உழவன் 06:45, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

இப்பொழுது நாம் உள்பிரிவுகளைக் குறிக்கும் பட்டைகளின் நிறம் பற்றியும் அதில் வரும் எழுத்துகளின் நிறம் பற்றியும், பட்டைகளின் நிறங்கள் வேறாக இருக்க வேண்டும் என்றாலும் அவற்றின் நிறவிணக்கம் பற்றியும், பேசுகிறோம். நீங்கள் இதைப்பற்றி உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். அருள்கூர்ந்து திடீர் என்று மாற்றங்கள் செய்யாதீர்கள் (அதிர்ச்சி தரும்படியான இனிப்பான மாற்றமாயின் நான் சேர்ந்து பாராட்டுவேன். என்றாலும் தனியா ஓரிடத்தில் இட்டு இப்படிச் செய்யலாமா என்று கருத்து வேண்டுதல் நல்ல முறையாக இருக்கும் என்பது என் கருத்து). --செல்வா 13:29, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
பிறர்செய்ததால், நானும் செய்தேன்.நான் மட்டுமே செய்தேன் என்ற பொருளில்,செல்வா! நீங்கள் என் பெயரை மட்டும் குறிப்பிட்டது பொருந்தாது. அனைத்து வார்ப்புருக்களின் வரலாற்றுப்பக்கங்களையும் கண்டால் அது தெளிவாகும். இதே போன்றுதான் thouவிலும், பலர் ஏற்படுத்திய மாற்றங்களை உணராமல், என் பெயரை மட்டும் கூறினீரகள். இது போன்று தொடர்ந்து என்பெயரைக் குறிப்பிடுவது சரியா? கலந்துரையாடாமல் மாற்றங்கள் ஏற்படுத்திய அனைவரும் இனி, கலந்துரையாடிய பின்னேரே எதையும் மாற்றுவோம். அதற்கு முன், இதுவரை நடந்த கலந்துரையாடல்களைத் தொகுப்போம். --த*உழவன் 18:06, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
தகவலுழவன், பலரும் கலந்துரையாடி முடிவெடுத்தப் பின்னர் நீங்கள் திடீர் என மாற்றியதைக் கூறினேன். நீங்கள் மாற்றியதை நானோ பிறரோ வேறொன்றாக மாற்ற ஒரு நொடி கூட ஆகாதே. ஏன் நான் மாற்றாமல் இங்கே குறிப்பிடுகின்றேன்?! மாற்ற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் ஆலமரத்தடியிலோ தக்கவாறு பிற இடத்திலோ இது பற்றிக் கேட்கலாம அல்லவா? இது ஒரு பெரிய செய்தியே அல்ல, இதனைத் தொகுக்க நேரத்தைச் செலவிட வேண்டுமா? --செல்வா 20:39, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஆனந்தமூலி&oldid=893553" இலிருந்து மீள்விக்கப்பட்டது