பேச்சு:இடர்ச்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இடர்ச்சி = தீநேர்ச்சி

இச்சொல்லை, மலேசியத் தமிழறிஞர் சீனி நைனா முகம்மது (உங்கள் குரல் என்னும் இதழின் ஆசிரியர்) சொல்லக் கேட்டேன் (கோவை, சூன் 25, 2010). எதிர்பாராமல் சாலையில் நேரும் தீவிளைவான நிகழ்வுகளைத் தீநேர்ச்சி என்று குறிப்பிடுவோம் என்று நான் கூறியபொழுது, தாங்கள் பயன்படுத்தும் சொல்லாகிய இடர்ச்சி என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார். நான் முன்னர் சில இடங்களில் நேர்ச்சி என்னும் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இது தீநேர்ச்சியாகவும் இருக்கலாம் நன்னேர்ச்சியாகவும் இருக்கலாம். திட்டமிடாமல் எதிர்பாராமல் நிகழும் ஒன்று (accident). ஆனால் சாலை நேர்ச்சி என்றால் சாலையில் நேர்ந்த தீநேர்ச்சியை (இடர்ச்சியை)க் குறிக்கும். இடாய்சு மொழியில் Unfall என்றால் எதிர்பாராமல் ஏற்படும் அல்லது நிகழும் ஒரு நேர்ச்சி, ஆனால் அவர்கள் சாலையில், போக்குவரத்தில் நிகழும் (தீவிளைவு) நேர்ச்சி என்றால் தெளிவாக Straßenverkehrsunfall என்பர் (இதில் Straße சாலை, Verkehr என்றால் போக்குவரத்து, Unfall என்றால் திட்டமிடாமல் எதிர்பாராமல் நிகழும் நேர்ச்சி).. இதனைத் தமிழில் சாலைநேர்ச்சி, சாலைதீநேர்ச்சி, சாலை இடர்ச்சி என்று கூறுவதற்கு ஈடாகும். --செல்வா 22:50, 21 ஜூலை 2010 (UTC)

  • ஆழ்ந்த விளக்கங்கள். இவற்றை வைத்தே, பல சொற்களை உருவாக்கலாம். இது போன்ற விளக்கங்கள், நம் அகரமுதலியை பல படிகள் மேலுயுர்த்தும். இது போன்ற ஆய்தலுக்கு, நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.--த*உழவன் 02:30, 22 ஜூலை 2010 (UTC)
நன்றி. --செல்வா 11:19, 22 ஜூலை 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:இடர்ச்சி&oldid=762903" இலிருந்து மீள்விக்கப்பட்டது