உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:உருசியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆலமரத்தடி யிலிருந்து இங்கு மாற்றப்படுகிறது.--த*உழவன் 01:40, 27 ஆகஸ்ட் 2010 (UTC) எது மிகவும் சரியான சொற்பதமாகத் தென்படுகிறது? இரசியர்களின் உச்சரிப்பின் படி அவர்கள் பயன்படுத்துவது "ரசியா" என்றே. எனவே இரசியா என்று அழைப்பதா அல்லது உருசியா என்று அழைப்பதா உகந்தது? --சி. செந்தி 20:55, 25 ஆகஸ்ட் 2010 (UTC)

  • உங்களின் கவனித்தல் படி, இரசியா என்றழைக்கக் கருதுகிறேன். நீங்கள் இரசியாவில் மருத்துவம் பயின்றவரா என்றறிய ஆவலாக உள்ளேன்.--த*உழவன் 05:53, 26 ஆகஸ்ட் 2010 (UTC)

உருசிய மொழியா இரசிய மொழியா?
உருசியர்/இரசியர் தங்கள் மொழியை русский язык என்கிறார்கள். இதன் ஒலிப்பை நீங்களே என்னைவிட நன்கு அறிவீர். இதன் ஒலிப்பு russkiy yazyk [ˈruskʲɪj jɪˈzɨk] என்று கொடுத்துள்ளவாறே நானும் உணர்கிறேன். காறொலி சகரத்தை ச்7 = s என்றும், кий என்பதைக் க்யீ அல்லது கிஇய் என்றும் கொண்டால் ரச்7க்யீ யிசி8க் என்பது போல ஒலிக்க வேண்டும். ரசியா என்பது Россия என்பதற்கு நெருக்கம்தான். ஆனால் தமிழ்நாட்டில் ருசியா, என்றும் உருசியா என்றும் 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் இன்று ரஷ்யா என்று பலரும் எழுதுகின்றனர். ரசியா என்பதை இரசியா என்று எழுதுவது மிகவும் பொருத்தம். உருசியா என்பதில் பழமையான வழக்கு என்பதையும் தாண்டி ஒரு நுட்பமான பொருத்தம் உண்டு. உரு என்றால் பெரியது என்று தமிழில் பொருள் (தொல்காப்பியச் சொல்). உலகிலேயே மிகப்பெரிய நாடாகிய இதனை உருசியா என்று அழைப்பது மிகவும் பொருத்தமானதாக எனக்குப் படுகின்றது. ஆகவே இரசியா, உருசியா ஆகிய இரண்டுமே இரு வெவ்வேறு கோணங்களில் சரியானதாகவோ பொருத்தமானதாகவோ எனக்குப் படுகின்றது. இரண்டும் எனக்கு முழு உடன்பாடே. --செல்வா 21:11, 29 ஆகஸ்ட் 2010 (UTC)

  • இப்பொருள் பற்றி முன்னொரு முறை உரையாடல் நிகழ்ந்ததாக நினைவு. என்றாலும், என் கருத்தை முன்வைக்கிறேன். உருசியா என்பது தமிழ் முறைக்கு அதிக பொருத்தம் என்பது என் கருத்து. "ர" என்று முதலெழுத்தை ஒலிப்பது பெரும்பாலும் ஆங்கில வழக்கு. பிற ஐரோப்பிய மொழிகளில் "ரு" என்றே முதல் எழுத்தின் ஒலி உள்ளது (எ.டு.: பிரான்சியம், எசுப்பானியம், செருமானியம், இத்தாலியம், போர்த்துகீசியம், உருசிய மொழியோடு குடும்ப உறவுள்ள கிழக்கு ஐரோப்பிய மொழிகள்...). எனவே பெரும்பாலான மக்கள் ஒலிக்கும் முறையைத் தமிழும் கையாண்டால், "ரு" தமிழில் "உரு" ஆகும்; எனவே "உருசியா" பொருத்தமாக இருக்கும்.--பவுல்-Paul 03:18, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
ரஷ்யா என்பது பிறமொழிப் பெயர். அதற்கு தமிழில் ஒரு பொருளைக் கண்டுபிடித்துத் திணிப்பது தவறு. தமிழ்நாட்டில் ரஷ்யா என்ற பெயரே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிறமொழிப் பெயர்களை உச்சரிக்க ஜ, ஸ, ஹ போன்ற எழுத்துக்களைப் பயன்படுத்துவதே சரியான முறை. GangadharGan26 (பேச்சு) 07:58, 25 செப்டம்பர் 2019 (UTC)
  • தங்களது விளக்கத்திற்கேற்ப, உருசியா என்பதற்கு நகர்த்தி விட்டேன்--த*உழவன் 05:19, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
தாங்கள் இவ்வாறு நகர்த்தியது தவறு. தமிழ் பேசும் மக்கள் உருசியா என்றால் வேறு நாட்டைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது. விக்கிப்பீடியா கொள்கைகளின்படி ஒரு தலைப்பு அனைவரும் அறியக்கூடியதாக இருக்க வேண்டும். GangadharGan26 (பேச்சு) 08:01, 25 செப்டம்பர் 2019 (UTC)
    • (இங்கு எனது உரையாடலில் உள்ள கிரந்த எழுத்துப் பிரயோகம் தவிர்க்கமுடியாதது என்று நினைக்கிறேன்)

செல்வா அவர்கள் கூறியது சரியே, நாட்டிற்கு ரசியா என்றும் மொழிக்கு ருஸ்கி ஈசி(z)க் என்றும் அவர்கள் அழைப்பதனால் நாங்களும் நாட்டிற்கு இரசியா என்றால் என்ன என்றே எண்ணத்தோன்றியது. ருஸ்கி (ஆண்பால் பெயரடை) அல்லது ருஸ்கய ( பெண்பால் ) என்னும் போது தேசத்தையும் தேசிய இனத்தையும் பொதுவாக அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது. российский (ரசிஸ்கி) என்றும் பெயரடை உள்ளது, எ.கா. (Российский университет - ரசிஸ்கி உனிவர்சித்தியத் - இரசியப் பல்கலைக்கழகம்). இதன் படி நான் பரிந்துரைக்க முனைந்தது; அவர்கள் ருஸ்கி பயன்படுத்தும் போது, உதாரணமாக "ருஸ்கி ஈசி(z)க்" என்னும் போது நாம் உருசிய மொழி எனலாம், ரசிஸ்கி என்னும் போது "இரசிய" எனலாம் என்றே. சில இலங்கை நூல்களில் ருஷ்யா என்றும் அழைத்துள்ளனர். செல்வா, பவுல் ஆகியோரின் கருத்துக்களின் படி உருசியா, உருசிய மொழி என்பதனை நானும் பின்பற்றுகிறேன், எனினும் கீழே தரப்பட்டுள்ள வேறுபாடுகளையும் ஒருதரம் நோக்க வேண்டுகிறேன். --சி. செந்தி 23:32, 30 ஆகஸ்ட் 2010 (UTC)

русский словарь

ருஸ்கி ஸ்லவார் உருசிய அகரமுதலி  

русское радио

ருஸ்கொய ராஜியோ உருசிய வானொலி  

русская музыка

ருஸ்கய மூசி(z)க்கா உருசிய இசை [múzɨkə]

русские шпионы

ருஸ்கிய ஷ்பியோணி உருசிய உளவாளிகள்  
       

российские фильмы

ரசிஸ்கிய ஃபில்மி இரசியத் திரைப்படங்கள்  

российский космонавт

ரசிஸ்கி கஸ்மனா(ஃ)வ்த் இரசிய விண்வெளிவீரன் [kəsmanáft]

российская газета

ரசிஸ்கய க(g)சியதா இரசியப் பத்திரிகை  

российское посольство

ரசிஸ்கய பசோல்ஸ்த்வா இரசியத் தூதரகம் [pasó[l]stvə]

--சி. செந்தி 23:32, 30 ஆகஸ்ட் 2010 (UTC)


நல்ல அருமையான கருத்துப் பகிர்வு நண்பர்களே. செந்தி மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார். நாம் இரண்டையும் பயன்படுத்தலாம் (பெண்பால், ஆண்பால் என்னும் பாகுபாடு தமிழில் இல்லாவிடினும்). எல்லா இடத்திலும் உருசியா, உருசிய என்று இருந்தால் குழப்பம் குறைவாக இருக்கும், ஆனால் உருசிய, இரசிய என்னும் இரண்டையும், செந்தி குறிப்பிட்டவாறு பயன்படுத்தினால், அதிலும் ஓர் ஒழுக்கம் மூல மொழியைப் பின்பற்றி உள்ளது. (நான் русское радио என்பதை ருச்7கொ1ய ராதியோ என்று நினைத்தேன் дио என்பது தி3யோ என்பது போல ஒலிக்கும் அல்லவா?) --செல்வா 00:16, 31 ஆகஸ்ட் 2010 (UTC)

செந்தி மெலிந்த ககரம் (g) ஒலியைக் காட்ட க3 என நாம் குறிக்கலாம். மேலொட்டு எண் இடுவது கடினம் எனில் கா'ந்தி, газета க'சியதா" எனக் குறிக்கலாம். --செல்வா 00:22, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
  • உருசிய மொழி அறியாத எனக்கு செந்தி தந்த தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. உருசியா என்பது நாட்டைக் குறிக்கவும் உருசிய என்பது உரிச்சொல்லாகவும் பயன்படுத்தலாம். உருசிய மொழியில் வேறு பல ஐரோப்பிய மொழிகளில் இருப்பதுபோல ஆண்-பெண்(அஃறிணை) வேறுபாடு இருந்தாலும் தமிழில் அவற்றைக் கருதாது விடலாம் என்று நினைக்கிறேன். இரசியா, இரசிய என்பதில் குற்றமில்லை என்றாலும், குழப்பம் தவிர்க்கும் பொருட்டு அவ்வடிவங்களைக் கையாளாது விடலாம். ஒலிப்பைப் பொறுத்தமட்டில் செல்வா கூறுவதோடு உடன்படுகிறேன்.--பவுல்-Paul 02:05, 31 ஆகஸ்ட் 2010 (UTC)

Start a discussion about உருசியா

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:உருசியா&oldid=1887186" இலிருந்து மீள்விக்கப்பட்டது