உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:காடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

காடு என்பதற்கு 16 உக்கும் கூடுதலான சொற்கள் தமிழில் உள்ளன. --செல்வா 23:51, 14 மே 2010 (UTC)Reply

மொழி பெயர்ப்புகள் கடைசியாக இருக்க வேண்டியவை. தமிழில் பொருள், விளக்கம், இலக்கியக் குறிப்புகள், எடுத்துக்காட்டு சொற்றடர்கள், சொற்பிறப்பியல் ஆகிய யாவும் தந்தபின் பிற மொழியில் உள்ள ஈடான மொழிபெயர்ப்பு சொற்கள் தருதல் முறை. பிற மொழி விக்கிகளையும் பாருங்கள். எடுத்துக்காட்டுக்கு ஆங்கில விக்கியைப் பாருங்கள். இடாய்ச்சு மொழி விக்கியைப் பாருங்கள். இடாய்ச்சு மொழி விக்கியில், எல்லா விளக்கங்களும் தந்தபின்தான் Übersetzungen என்னும் மொழிபெயர்ப்புகளைத் தருகின்றார்கள் (பார்க்க: Geld (பணம்). மொழிபெயர்ப்புகளைக் கடைசியாக இட வேண்டுகிறேன்.--செல்வா 16:13, 18 மே 2010 (UTC)Reply
  • அகரமுதலி என்பது மொழிபெயர்ப்புக்கு தானே? அதற்கு பின்னிடம் தருவதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே அதற்கு முன்னிடம் தந்தேன். மற்ற மொழிகளை தமிழ் பின்பற்ற வேண்டுமா? த*உழவன் 16:28, 18 மே 2010 (UTC)Reply
இல்லை. அகரமுதலி என்பது ஒரு மொழியில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றுக்குமான பொருள்களை அம்மொழியில் அகரவரிசைப்படி தரும் ஒரு நூல். மொழிபெயர்ப்புகள் தரவேண்டிய எந்தத் தேவையும் இல்லை. விக்சனரிகள் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவில் பன்மொழியில் ஈடுசொற்களைத் தரும் ஓர் அரும் அகரமுதலித் திட்டத்தைச் சேர்தவை (இருமொழி, மும்மொழி அகரமுதலிகளும் உண்டு). உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம், ஆனால் முறை என்றும், குறிக்கோள்கள் என்றும் சில உண்டல்லவா? பிறமொழிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை, அதில் ஓர் ஒழுக்கம் உள்ளது, பிறபல மொழிகளிலும் பின் பற்றுகிறார்கள் என்று காட்டவே கூறினேன். --செல்வா 16:41, 18 மே 2010 (UTC)Reply

எந்த ஒழுங்கில் மொழிகள் தரப்படுகின்றன?

[தொகு]

--Natkeeran 03:46, 29 ஜூலை 2010 (UTC)

மொழிபெயர்ப்புகள் இப்பொழுது எந்த ஒழுங்கிலும் இல்லை. தமிழ் அகரவரிசைப்படி தரலாம், ஆனால் மாற்றாக முதலில் இனமான மலையாளம், கனண்டம் தெலுங்கு, இந்தி, மராட்டி (மராத்தி), குசராத்தி, வங்காளி ஆகிய மொழிகளிலும் அடுத்து சிங்களம், ஆங்கிலம், எசுப்பானியம், பிரான்சியம், இடாய்ச்சு, சீனம் நிப்பான் கொரியா என்று தரலாம். இபப்டி ஒரு சில சொற்களுக்குத் தந்துள்ளேன். எச்சொற்கள் என நினைவில்லை. கிடைத்தால் தெரிவிக்கின்றேன்.--செல்வா 04:03, 29 ஜூலை 2010 (UTC)
  • அடிக்கடி தமிழுக்கு இணையான ஆங்கிலச் சொற்கள் தேடியே பெரும்பாலான வருனர்கள் வருவர்; அவர்கள் எளிதில் பொருள் காணும்படி அமைத்தல் நலம். பழ.கந்தசாமி 04:07, 29 ஜூலை 2010 (UTC)
Geld (பணம்). என்னும் பக்கத்தைப் பார்க்கலாம். கடைசியாக மொழிபெயர்ப்புகள் தந்துள்ளார்கள் (இடாய்ச்சு மொழி விக்கியில், இடாய்ச்சு மொழிச் சொற்களுக்கு). ஆங்கிலம் போன்ற பிறமொழிச்சொற்கள் என்றால், தமிழில் மட்டுமே பொருள் விளக்கமும் அல்லாமும் இருத்தல் வேண்டும். ஆங்கிலச்சொல்லுக்கு இந்திச் சொல் வேண்டும் என்றால், ஆங்கில விக்சனரியை நாட வேண்டும் அல்லது இந்தி விக்கி அகராதியை நாட வேண்டும்.எல்லா மொழிச் சொற்களுக்கும் தமிழில் விளக்கமும் ஈடான சொற்களும் தருவதே தமிழ் விக்கியின் பொறுப்பு.--செல்வா 04:15, 29 ஜூலை 2010 (UTC)
மொழி பெயர்ப்ப்புகளில் ஆங்கிலம் முதலில் இருப்பதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. ஆங்கிலம்,, இந்தி ஆகிய இரண்டும் இந்தியர்களுக்கு முக்கியம் போலவே, சிங்களம் இலங்கையர்களுக்கு முக்கியமாக இருக்கலாம், மலாய் மொழி மலேசியர்களுக்கும், சீனம் சிங்கப்பூர் தமிழர்களுக்கும் முக்கியமானதாக இருக்கலாம். --செல்வா 04:18, 29 ஜூலை 2010 (UTC)

வடிவமைப்பில் மாற்றாமா?

[தொகு]

ஏன் படங்கள் தனியாக வலப்புறம் தெரிகின்றன? வடிவமைப்பில் ஏதோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன போல் தெரிகின்றனவே! --செல்வா 22:58, 24 சனவரி 2012 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:காடு&oldid=1831015" இலிருந்து மீள்விக்கப்பட்டது