உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:காய்கறி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இதிலுள்ள படம் மிகவும் ஈர்க்கிறது. பிரெஞ்சு என்பது பிழையா? பிரான்சியம்? இரண்டும் கூறலாமா? த*உழவன் 02:23, 29 மே 2010 (UTC)Reply

ஆம், இப்படம் மிகவும் அழகாக உள்ளதல்லவா? பிரெஞ்சு என்பது பிழை இல்லை. ஆங்கிலேயர்கள் French என்கிறார்கள், ஆனால் பிரான்சு நாட்டவர் தங்கள் மொழியை Français என்கிறார்கள். இது ஃப்ரான்சே என்பதுபோல ஒலிக்கும். பிரான்சு நாட்டவர் மொழியைப் பிரான்சியம் என்பது எளிது. நாம் ஏன் ஆங்கிலேயரைப் பின்பற்றி பிரென்ச் என்று சொல்ல வேண்டும்? பிரெஞ்சு என்று எழுதினால் piranju என்று ஒலிக்க வேண்டும். சொல்லின் முடிவில் உள்ள -nju என்பதை -nch என்று ஒலிக்கக்கூடாது. அப்படி ஒலிக்க வேண்டும் என்றால் பிரென்ச்சு அல்லது பிரெஞ்ச்சு என்று எழுத வேண்டும். பிரெஞ்சு என்று எழுதிவிட்டு pirenchu என்று ஒலிப்பது தமிழ் ஒலிப்பு முறையை கெடுப்பதாகும்/குழப்புவதாகும். பிரான்சு, பிரான்சியம் இயல்பான இணை. (மூல மொழியை ஒத்த வழக்கு). வி'ரான்சு, வி'ரான்சியம் என்பதோ ஃபிரான்சு, ஃபிரான்சியம் என்பதோ, ஃவிரான்சு, ஃவிரான்சியம் என்பதோ, முதலெழுத்தும் ஓரளவுக்கு நெருங்கிய ஒலிப்பு கொண்ட எழுத்துப்பெயர்ப்பு. இடாய்ச்சு மொழியாளர் பிரான்சு என்பதை Frankreich என்கிறார்கள். பிரான்சிய மொழியை Französische Sprache என்கிறார்கள் (French எனக்கூறவில்லை). ஆகவே நாம் நம் மொழிக்கு உகந்தவாறும் மூல மொழியைக் கூடியமட்டிலும் ஒத்திருக்குமாறும் வழங்குவது சரியாக இருக்கும். --செல்வா 02:49, 29 மே 2010 (UTC)Reply
இரண்டும் கூறலாம். --செல்வா 02:49, 29 மே 2010 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:காய்கறி&oldid=650981" இலிருந்து மீள்விக்கப்பட்டது