பேச்சு:கைபேசி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கைப்பேசி/கைபேசி, அலைப்பேசி/அலைபேசி, தொலைப்பேசி/தொலைபேசி இச்சொற்களில் சீர்மை இல்லை. பல ஊடகங்களில் இவ்விரு வழக்குகளும் புழங்கப்படுகின்றன.

இலங்கை அலுவல் கலைச்சொற்களில் கைப்பேசி, அலைபேசி, தொலைபேசி
சிங்கப்பூர் அலுவல் கலைச்சொற்களில் கைபேசி, அலைபேசி, தொலைபேசி.
ஆக்ஸ்போர்ட் தமிழ் அகராதியில் கைபேசி, தொலைபேசி
கவிஞர் மகுடேஸ்வரின் கட்டுரையில் கைப்பேசி, அலைப்பேசி, தொலைப்பேசி,

பெருவழக்கை ஏற்கலாம் என்றால் தவறான இலக்கணத்திற்கு முன்னுதாரணமாக வாய்ப்புள்ளது. மேலும் இது திசைச்சொல் அல்ல மொழிபெயர்ப்பு என்பதால் சரியான இலக்கணச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

(Vp1994 பயனர் பேச்சுப் பக்கத்திலிருந்து இங்கே படியெடுக்கப்படுகிறது.)

பக்கம் நகர்த்தல்[தொகு]

வணக்கம், தாங்கள் இலக்கணப் பிழைகளைக் களைவது வரவேற்கத்தக்க செயல் என்றாலும் சில தவறான இலக்கணத்தைக் கடைபிடிப்பதாகக் கருதுகிறேன். அலைப்பேசி, கைப்பேசி, தொலைப்பேசி போன்றவற்றை மொத்தமாக ஒற்றை நீக்கி விக்சனரியிலும் விக்கிப்பீடியாவிலும் செய்திருப்பதைத் தற்போதே கவனிக்கிறேன். ஏழாம் வேற்றுமை உருபும் உடன் தொக்க தொகையாகையால் ஒற்று மிகுவதே சரி என நினைக்கிறேன். தாங்கள் மாற்றியதன் இலக்கணத்தைக் குறிப்பிட முடியுமா? அல்லது மீளமைத்துக் கொள்ளலாமா?-நீச்சல்காரன் (பேச்சு) 13:20, 25 சூன் 2019 (UTC)[பதிலளி]

ஆம். தொலைக்காட்சி (தொலை + காட்சி) என்ற சொல்லில் ஒற்று மிகவேண்டும் ஏனென்றால் 'தொலை' என்ற சொல்லும் 'காட்சி' என்ற சொல்லும் இரண்டுமே பெயர்ச்சொற்கள் தான். ஆனால் 'பேசி' என்று முடியும் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது. ஏன்? 'பேசி' என்ற சொல் 'பேசு' என்ற வினைச் சொல்லை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும். அதே போன்று 'வழிகாட்டி' (வழி + காட்டி) என்ற பெயர்ச்சொல்லில், 'வழி' என்ற சொல் பெயர்ச் சொல்லாக இருப்பினும், 'காட்டி' என்ற சொல் 'காட்டு' என்ற வினைச் சொல்லை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும். இதனால், வல்லினம் மிகாது. இன்னொரு உதாரணம், 'மொழிபெயர்ப்பு' (மொழி + பெயர்ப்பு) என்ற சொல்லில், 'மொழி' என்ற சொல்லுக்கும் 'பெயர்ப்பு' என்ற சொல்லுக்கும் இடையில் வல்லினம் மிகாது. ஏனெனில், 'மொழி' என்ற சொல் பெயர்ச் சொல்லாக இருப்பினும், 'பெயர்ப்பு' என்ற சொல் 'பெயர்' என்ற வினைச் சொல்லை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும். 'பெயர்' என்பது மாறும் நிகழ்வைக் குறிக்கும் சொல்லாகும். நீங்கள் மேற்கூறிய சொற்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் https://ta.oxforddictionaries.com/ என்ற இணைய தளத்தில் இவ்வாறான சொற்களைத் தேடிப் பார்க்கலாம். நன்றி!--Vp1994 (பேச்சு) 23:16, 25 சூன் 2019 (UTC)[பதிலளி]
அலைபேசி, கைபேசி, தொலைபேசி என எழுதுவதே சரி.--Kanags \உரையாடுக 08:32, 26 சூன் 2019 (UTC)[பதிலளி]

@Vp1994: நீங்கள் குறிப்பிடும் இலக்கணம் சரியானதன்று என்று நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட இரு உதாரணமும் இரண்டாம் வேற்றுமைத் தொகை ஆகையாலேயே ஒற்று வரவில்லை. வழியைக் காட்டி = வழிகாட்டி. மொழியைப் பெயர்ப்பு = மொழிபெயர்ப்பு. வழிப்பறி மற்றும் மொழிப்பயிற்சி போன்ற இடங்களில் எல்லாம் ஏன் ஒற்று இட்டுள்ளோம் எனப் பாருங்கள் வினைச்சொல் என்பதால் ஒற்று மிகாது என்று கொள்ள இயலாது. சரியான இலக்கணம் இருந்தால் மற்றவர்களுக்கும் பயன்படும். மற்றவர்கள் கருத்தையும் அறிய ஆவலாக உள்ளேன்-Neechalkaran (பேச்சு) 13:50, 26 சூன் 2019 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கைபேசி&oldid=1968401" இலிருந்து மீள்விக்கப்பட்டது