உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சிங்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அரிமா அல்லது ஏறு இடியென வலுத்து ஒலியெழுப்புவதற்கு முழக்கம் என்று பெயர். அதிரும் அந்த ஒலி சிறப்பாக முழக்கம் என தமிழில் வழங்குவது. புலியின் ஒலியை உறுமல் என்பர். யானையின் ஒலியைப் பிளிறல் என்பர். ஓநாய்யினுடையதை ஊளை என்பர். மயில் அகவல், நாகம் சீறல், காகம் கரைதல், குயில் கூவல், பாட்டுப்பாடும் பறவைகளக் குயிலும் பறவைகள் என்பர். இவற்றையெல்லாம் நாங்கள் கற்றது போல ஏன் தற்காலத்தில் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதில்லை என்று தெரியவில்லை (அல்லது சொல்லிக்கொடுக்கின்றார்களே?, நான் தான் அறியாமல் இருக்கின்றேனோ?)--செல்வா 13:28, 3 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • ஒவ்வொரு சொல்லிலும் உச்சரிப்பு இட்டால் அதன் தோற்றம் குறித்து எளிதில் அறியலாம். தமிழில் காணப்படும் ஒலியில் மட்டுமே இடம்பெற்ற வார்த்தை சிங்கம் - Chinkam. தமிழர்களாகிய நாம் ச - cha வென உச்சரிக்காமல் Sa வென உச்சரித்து தமிழின் சான்றை மறைக்காதீர்கள். தமிழில் அக்கறை கொள்பவராவது உச்சரிப்பில் பிழையில்லாமல் நோக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றிகளுடன் - --சிங்கமுகன் 17:44, 11 அக்டோபர் 2011 (UTC)Reply
தமிழில் ஒலிக்கோப்புகள், இங்கு உருவாக்கப்பட்டுவருகின்றன. தமிழ் விக்சனரியில் ஆங்கில ஒலிப்புக் குறிப்புகளைத் தவிர்ப்போம். உச்சரிப்பு என்பதனை ஒலிப்பு எனக்குறிக்கலாமே? இது குறித்து, இதற்கு முன் நடந்த உரையாடல்களை, இங்கு காணலாம். எனவே, உச்சரிப்பு என்ற தலைப்பையும், ஆங்கில ஒலிக்குறிப்புகளையும் நீக்குகிறேன். வணக்கம்.--01:49, 24 அக்டோபர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சிங்கம்&oldid=1018540" இலிருந்து மீள்விக்கப்பட்டது