விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வணக்கம். தமிழ் இணையப் பல்கலைச் சொற் பட்டியலைத் தமிழ் விக்சனரிக்கு நன்கொடையாக அளித்துள்ளார்கள். இச்சொற்பட்டியலைத் தமிழ் விக்சனரியில் பதிவேற்றுவதற்கான ஒருங்கிணைப்பு உரையாடல்களை இங்கு மேற்கொள்ளலாம்.

த.இ.ப பெயர் மாற்றம்

தமிழ் இணையப் பல்கலைக் கழகம், இறுதியாக தமிழ் இணையக் கல்விக் கழகம் என்று மாற்றப்பட்டுள்ளது. --த*உழவன் 07:02, 30 ஆகஸ்ட் 2010 (UTC)

விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/இதுவரை நடந்த பழைய உரையாடல்கள்

திட்டப்பணிக் காலம்[தொகு]

திட்டத்தில் பங்கு கொள்வோர்களும் பொறுப்புகளும்[தொகு]

திட்டத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் தங்கள் பெயர்களையும் என்ன வகையில் உதவ முடியும் என்பதையும் கீழே தெரிவிக்கலாம்.

 1. இரவி . பக்க வடிவமைப்பு, சோதனை ஓட்டம், தானியங்கி இயக்கம் ஆகியவற்றில் பங்கு கொள்ள முடியும்.
 2. --பவுல்-Paul 11:32, 28 ஜூலை 2010 (UTC) இடுகைப் பணி ஆற்ற முன்வருகிறேன்.
 3. --செல்வா 13:19, 28 ஜூலை 2010 (UTC) பக்க வடிவமைப்பு, ஆங்காங்கே சரி பார்த்தல்; எப்படி உள்ளீடு செய்கிறோம் என்பது பொருத்து உள்ளிடுவதிலும் பங்கு கொள்ள இயலும். செப்டம்பர் 2010 முதல், இத் திட்டத்தில் தொடர்ந்து உதவ முடியும் என்றாலும், சற்று மெள்ளவே செய்ய இயலும்.
 4. --த*உழவன் 01:31, 29 ஜூலை 2010 (UTC)இதற்கு முன் நடந்த பக்க வடிவ கருத்து ஒருங்கிணைப்பு, த.இ.ப அல்லாத சொற்களுடன் ஆய்வு, பக்க வடிவம், (பயனர்:TamilBOT)தானியங்கி செயல்முறைகள்.
 5. --Inbamkumar86 15:12, 2 ஆகஸ்ட் 2010 (UTC) , நான் புதியவன். இத்திட்டத்தைப் பற்றி த.உழவன் உரையாடிய போது :அறிந்தேன். நான் இதில் பணியாற்ற விரும்புகிறேன். என்னால் இடுகைப் பணியைச் செய்ய முடியும். தானியங்கியில் ஏற்கனவே உள்ளச் சொற்கள் மறுபடியும் சேராமல் இருக்க எதாவது உதவ முடியும் என்று நினைகிறேன். வேற உதவிகள் ஏதேனும் இருந்தாலும் செய்வேன். இல்லை இப்பொழுது அனுபவம் இல்லாத காரணத்தினால் பிறகு பார்க்கலாம் என்றாலும் பரவா இல்லை. உள்ளீடு செய்யும் பணியை என்னால் விரைவில் செய்ய இயலும் என்று நம்புகிறேன். நன்றி.
 6. பயனர்:Natkeeran(கலந்துரையாடலில் இருக்கிறார்.(த.உழவன்))
 7. --பழ.கந்தசாமி(கலந்துரையாடலில் இருக்கிறார்.(த.உழவன்))
 8. --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 13:11, 1 செப்டெம்பர் 2010 (UTC)எனது முக்கிய பங்களிப்பாக, பகுத்தல், படமிணைத்தல், தானியங்கி மூலம் பதிவேற்றுதல் ஆகியவற்றை செய்ய முடியும். மேலும், முன்னுரிமையான பணிகளை தெரிவித்தால் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 13:11, 1 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 9. மாகிர்- இணையப் பக்க வடிவியல் நிபுணர்.(கலந்துரையாடலில் இருக்கிறார்.(த.உழவன்))

பதிவேற்றத்திற்கு தேவையானவைகள்[தொகு]

 1. பதிவேற உள்ள சொற்களில் அஒநெ ஒலிப்புதவி குறிப்புகளை சேர்க்க செல்வா தரவேண்டும்.
 2. கொடி பற்றிய இறுதி முடிவு
 3. பலுக்கல்-உச்சரிப்பு பற்றிய இறுதி முடிவு
 4. பதிவேற்ற ஆரம்ப நாள்

இறுதி கட்ட மாதிரிப் பக்க வடிவங்கள்[தொகு]

உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப முன்மொழிவுகளில், மாற்றமேற்பட வாய்ப்புள்ளது. எனவே, தொடர்ந்து கவனிக்கவும்.மறவாமல், கீழ்காணும் சொற்களின் உரையாடல் பக்கங்களையும் கண்டு கருத்திடவும். மூன்றுக்கும் பொதுவானதை, கீழுள்ள உரையாடற்பகுதியில் குறிப்பிடவும். .

 1. a pair of compasses (சுந்தர் தானியங்கி வடிவம்).
 2. dado2 (செல்வா முன்மொழியும் வடிவம்.)

தானியங்கிச் சோதனைகள்[தொகு]

இறுதி கட்ட உரையாடல்கள்[தொகு]

த*உழவனின் த.இ.ப. சொற்களுக்குரிய படிவ கருத்து முடிவு[தொகு]

அனைவரது கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் எனது முடிவுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

 • ஒரு பக்கத்தில் பலகூறுகள் இருப்பினும், சுந்தர் தானியங்கி பக்க வடிவத்தில் உள்ள சொற்களை மட்டும் ஆய்வது நலம். எனெனில், அவரின் படிவ வடிவம், அனைத்து விக்சனரி முறைமைகளையும், எளியத் தானியங்கி செயல்பாட்டுத்திறனையும் பெற்றிருக்கிறது. இருப்பினும், அதில்
தேவைப்படும் மாற்றங்கள் வருமாறு;-
 1. ஊடகங்ளுக்காக சில மாற்றங்கள் அதில் செய்ய வேண்டிய நிலையுள்ளது.(எ. கா.) lion, abacus, dado (பேச்சுப்பக்கத்தினைக் காணவும்)
 2. நம்பகத்தன்மையை வேண்டுவார் காண்பதற்கு வசதியாக, ஆதாரங்கள் சிறியதாகப் பட்டுள்ளது.
 3. சமக் குறியீடுகள் மூலம் அதிகமாகத்தோன்றும் தொகு வசதி,
  படங்களுக்கு இடர் ஏற்படுத்துவதாலும்,
  குறைவான உள்ளீடுகள் இருப்பதாலும் குறைக்கப்பட்டுள்ளது.அதற்கு பதில்<.div>முறை கையாளப்பட்டுள்ளது.
 4. எனது அனுபவங்களின் மூலம் நான் அனுமானிக்கும் வடிவம் dado.இதனைத் தொடர்ந்து, அனுபவங்களுக்கு ஏற்ப மாற்றுவேன்.

தானியங்கி நேரம்:அனைத்துக்கும் தேவைப்படும் பதிவேற்ற நேரம், ஒரு சொல்லுக்கு ஒரு நொடி(போதும்) வேண்டும்.ஏறத்தாழ இந்த ஒரு இலட்சம் சொற்களுக்கு 30-35 மணிநேரங்கள் தேவை. அனைவரது உழைப்பினையும் ஒருங்கிணைக்கப் பயன்பட்ட பயனர்:TamilBOT, எத்தகைய படிவமாற்றம் என்று வந்தாலும், தன் கடமையை ஆற்றும்.--த*உழவன் 02:17, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

சுந்தரின் தானியங்கிப் பதிவேற்றம் நடந்த போது, நொடிக்கு ஒரு முறை சொற்கள ஏற்றினால் எரித வடிகட்டியில் மாட்டலாம், வழங்கி திணறலாம் என்பதால் வேண்டும் என்றே சிலநொடி இடைவெளி விட்டுத் தான் பதிவேற்றினோம். இதையும் கருத்தில் கொள்ளலாம்--ரவி 10:41, 16 செப்டெம்பர் 2010 (UTC)Reply

த. இ ப சொற்கள் பதிவேற்றத் திட்டத்தில் கொடி தொடர்பான எனது பரிந்துரை - மாகிர்[தொகு]

இந்தியா
தமிழ்நாடு
சிறீலங்கா
சிங்கப்பூர்

மலேசியா
 1. வெறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொடிகளுக்கு ஏன் முழு வரியையும் அடைக்கவேண்டும்?
 2. சாதாரணப் பயனராக நான் விக்சனரிக்கு அதிகமகா வருவது பொருள் தேடித்தான். அதனால் அது பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா அல்லது எந்தெந்த நாடுகளில் உபயோகிக்கப்படுகிறது போன்றவை அடுத்த கட்டத்திற்கு தான் வருகிறது. அதனால் கொடியை சொல்லின் முதல்வரியில் கொடுப்பதை தவிர்க்கலாம்.
 3. சாதாரண இணைய தொழில்நுட்பத்தை அறிந்தவன் என்கிறவகையில், முதலில் வரும் தமிழ் என்கிற சொல் அங்கே ஒரு படம் விடுபட்டுள்ளது என்பதை காட்டுவது போன்று உள்ளது. (இது எனக்கும் மட்டுமான கணிப்பா என்று தெரியவில்லை) இந்த சொல்லையும் தவிர்க்கலாம். ஏனென்றால் குறிப்பிட்ட சொல் பக்கத்தில் முதலாவதாக அது எந்த மொழி சொல் என்பதை தலைப்பிட்டு கொடுத்துவிட்டால் கொடியுடன் வரவேண்டியதில்லை. காட்டாக கண் பக்கத்தில் முதலில் கண் தமிழ்ச் சொல் என்பதை சொல்லிவிட்டால் இந்தக் கொடியுடன் அதனை சேர்க்கவேண்டியதில்லை.

-- Mahir78 18:12, 1 செப்டெம்பர் 2010 (UTC)Reply

இது பற்றி பல முறை விரிவாக உரையாடி இருக்கின்றோம் மாகிர் (இது 3-4 ஆவது முறையாக இருக்கும்). அதாவது கொட்டை எழுத்தில் தமிழ் என்றோ ஆங்கிலம் என்றோ மொழியின் பெயர் இருப்பது பொருத்தமாக இல்லை. (பல நேரங்களில் இலத்தீன் எழுத்துகளில் இருக்கும் சொல் எந்தமொழிச்சொல் என்று அறியத் தேவை உள்ளது. இதே போலத்தான் சிரிலிக் (Cyrillic) எழுத்து, அரபி எழுத்துகளில் வரும் சொற்களுக்கும். தமிழ் எழுத்தும் கூட ஆறு வெவ்வேறுமொழிகளுக்குப் பயன்படுகின்றது!). நேரடியாக பொருளுக்கு வருவதற்காகத்தான் மேலே அப் பட்டியே (அப்பட்டி, மொழியைக் குறிக்க உள்ளது. கொடி இருப்பது சிறிது நிறம் தருவதற்கும், மொழியின் பெயரைச் சற்றே ஒதுக்கி வலைப்புறமாக இருக்கச் செய்யவும்). --செல்வா 18:54, 1 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • படகர் (Badaga), இருளர் (Irula), பணியர் (Paniya), சௌராட்டிரா (Saurashtra), சமசுக்கிருதம் (Sanskrit), ஓரளவுக்கு துளு. மைக்ரோசாவ்'ட் நிறுவனம் இவற்றையும் கணக்கில் கொள்ளுகின்றது. --செல்வா 13:35, 3 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கொடி குறித்து, இதற்கு முன் நடந்த கலந்துரையாடல்கள்[தொகு]

கொடி குறித்த கூறப்பட்டுள்ள மாற்றுக் கருத்துக்களைக் காணவும்(ஆலமரத்தடியில் 6.4 எந்த மொழிக்கு என்ன மொழிப் பட்டி(கொடி பற்றி..) என்பதிலுள்ள உரையாடல்கள்)}}). கொடியில் மட்டுமே இறுதி முடிவு மாற்றப்பட வேண்டும். மற்ற அனைத்தும் இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது.நன்றி.வணக்கம்.--த*உழவன் 01:18, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

மாற்றுக் கருத்திட்டவர்கள்;-
 1. நற்கீரன்
 2. இரவி
 3. மாகிர்(கொடியை இடம் மாற்றுவது பற்றிக் கூறினார்.காண்க:மேலே)
 4. த*உழவன்
I commented flag can be placed left side or end of the page, not requested to remove entirely. Thanks. -- மாகிர் 11:01, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply

தகவலுழவன், இப்படி சாய்வான கருத்துகள் இடுதல் சரியல்ல. கருத்து கணித்தபொழுது இரவியோ, நற்கீரனோ, மாகிரோ வாக்கு அளிக்கவில்லை. கொடியுடைய பட்டைக்கு நால்வர் ஆதரவாக வாக்கு நல்கினர். எதிர்த்து யாரொருவரும் வாக்கு அளிக்கவில்லை (நீங்களும் வாக்கு அளிக்காவிட்டாலும் ஒப்புக்கொண்டீர்கள்). இவற்றை இங்கே பார்க்கலாம். ஆலமரத்தில் நிகழ்ந்த உரரயாடல்களை பலவாறு மாற்றியும், பிரித்தும், பல்வேறு இடங்களில் பகுதிபகுதியாக பிரித்தும் சேர்த்தும் நீங்கள் பெருவாரியாக குழப்பியுள்ளீர்கள் (இவை ஒழுங்குபடுத்துதல் என்பது உங்கள் கருத்து என்பதனை அறிவேன்). எனவே எது எங்குள்ளது என்று கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது. எனினும் இப்போதைக்கு நான் மேலே இட்டுள்ள தொடுப்பைப் பாருங்கள். முறைப்படி கருத்துக் கணிப்பு நடத்தியபோது எடுத்த முடிவைப் பாருங்கள். அப்படியே நீங்கள் மேலே கூறும் கருத்தைக் கூறவேண்டும் எனினும், வேண்டும் என்று யார்யார் கூறினர் என்பதனையும், நடுநிலை நோக்கிக் கூறுதல் வேண்டும். மேலே அனைத்தும் இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது என்று நீங்கள் கூறுவது முறையல்ல என்பதனைச் சுட்டிக்காட்டக் கடமைப்பாட்டுள்ளேன். --செல்வா 03:51, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

 • /த*உழவன், கொடியில் மட்டுமே இறுதி முடிவு மாற்றப்பட வேண்டும். மற்ற அனைத்தும் ஓரளவு இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது //. வேகமாக செயல்பட்ட பொழுது ஏற்பட்ட இப்பிழையினைப் பொறுக்கவும்.--த*உழவன் 04:21, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply
"ஓரளவு இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது" என்று எப்படி, எதனைக்கொண்டு சொல்கின்றீர்கள்? --செல்வா 04:33, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 1. தவறு இருப்பின் மன்னிக்கவும். பதிவேற்றத்தினை ஆரம்பிக்க அடுத்து என்ன செய்யவேண்டும்?--த*உழவன் 04:37, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • பதிவேற்றுமுன், பக்க வடிவத்தை முடிவு செய்தல் வேண்டும் அல்லவா? இந்த முடிவை இங்குள்ள பயனர்கள் அனைவரும் சேர்ந்துதானே இறுதி செய்தல் வேண்டும். 2,3,4 வெவ்வேறு வடிவங்கள் இருந்தால், அவற்றை வரிசைப்படுத்தி பயனர்களைக் கருத்து அளிக்கச் சொல்லலாமே? கணேஷ் சில பொது வடிவங்களை பதிவேற்றத்துக்கு உகந்த வடிவில் வைத்திருந்தாரே, அவை எல்லாம் என்ன ஆயிற்று? பக்க வடிவத்தைப் பற்றி பற்பல கருத்துகள் அக்கறையுடன் பலரும் தந்திருந்தனர். பக்க வடிவத்தோடு பிற கருத்துகளும் பேசப்பட்டன (தமிழ்ச்சொற்களுக்கு உள்ளிணைப்பு தருதல், ஒரு படத்துக்கு மேல் இல்லாமல் இருத்தல், படங்கள் இயல்பான விக்கிநிரலில் இருத்தல் (வார்ப்புருவாக இல்லாமல் - ஏன் என்ற காரணங்களுடன்). இவை எதனையும் உறுதிசெய்யாமல் "ஓரளவுக்கு இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டது" என்றால் ஒன்றும் விளங்கவில்லை! யாரால் எப்படி முடிவுகள் எடுக்கப்பட்டன ஏன் என்ன என்ற கேள்விகள் எழுகின்றனவே. பதிவேற்றும் முன் எந்தப் பக்க வடிவில் ஏற்றலாம் என்று கூடி முடிவு எடுக்க வேண்டும். முதலில் ஒரு 5 பக்கங்கள் செய்து பார்த்து நிறைவாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். அதன் பின்னர் பதிவேற்றம் செய்யலாமே. 2-5 நாட்கள் கூட ஆனால் என்ன ஆகிவிடும்? ஏன் முறை பிசகி முடுக்கத்துடன் முடிவுகள் எடுக்க வேண்டும்? --செல்வா 04:53, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply
   • த*உழவன், முடிவை நோக்கி முன்னகர்ந்து கொண்டுள்ளோம் என்பது மகிழ்ச்சியான விடயம். ஒரு கருத்து. பதியப்பட்ட உரையாடல்களைப் பலவாறு பிரித்தமைப்பதற்குப் பதிலாக அவற்றை மாற்றாமல் அப்படியே விட்டுவிட்டு அவ்வுரையாடல்களின் பொதுக்கருத்தை மட்டும் ஓர் இடத்தில் கொடுத்தல் நலம். அவ்வாறு கொடுத்திருந்தால், எவை எங்குள்ளன என்று தேடுதல் குழப்பம் ஏற்பட்டிருக்காது. காட்டாக, அத்தகைய நோக்கத்தில் நான் உருவாக்கிய ’கருத்துக்கணிப்புக்கு முன்மொழியப்படும் பக்கங்கள்’ என்று dado2, dado4 பக்கங்களைக் கொடுத்து நான் இட்ட பகுதி எங்கே என்று எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கே மற்றவர்கள் முன்மொழியும் பக்கங்களையும் சேர்த்துக் கருத்துக்கணிப்பு நடத்தலாம் என்பதே அப்பகுதியின் நோக்கம். அப்பகுதியை இங்கு சேர்க்கவும். கருத்துக்களைக் கேட்டுக் கருத்துக்கணிப்பு செய்யலாம். நன்றி. பழ.கந்தசாமி 04:58, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 • இத்திட்டபக்கம் அதிக அளவினதாக ஆகிவிட்டது. நடைபெறும் மாற்றங்களுக்கு ஏற்ப இப்பக்கத்தை நன்கு கவனிக்க, பொதுவான பகுதிகளை மேலுள்ள பரணில் இட்டுள்ளேன்.மேலுள்ள பரணில், ஒரு படம் இணைத்து விடுகிறேன். சொல்லப்பட்ட கருத்துக்களே திரும்ப திரும்ப பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.திட்ட பக்க அளவு சிறியதாக இருந்தால் செயல்படுவதற்கு நன்கு இருக்கும் என்று கருதி இங்ஙனம் செய்தேன். இங்கு மட்டுமல்ல. ஆலமரத்தடியிலும் அதே முறையை பின்பற்றியுள்ளேன்.
விரைந்து செயல்பட இறைந்து கிடக்கும் உரையாடல்களை சுருக்கமாகக் கூறி, அது சரியா என அறிந்து கொள்ள மூலத் தொடுப்பினையும் கொடுத்திருக்கிறேன். சாய்வு என்ற பிறர் கருத வாய்ப்பு இருப்பதால், இப்ப என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. ஆங்காங்கே இருக்கும் பதிவுகளை எப்படி ஒருங்கிணைப்பது? ஆங்கில விக்கிப்பீடியாவில் இது போன்ற கலந்துரையாடல்கள் வாரம் ஒருமுறை தானாகவே ஒரு தானியங்கி செயல்பட்டு, ஒவ்வொரு வாரமும் பரணிட்டுவிடும். இங்கு அந்த வசதி இல்லை.
மேலுள்ள எனது முடிவில் படிவ மாற்றத்தின் அவசியத்தை ஓரளவு கூறியுள்ளேன். படிவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும், பல உரையாடல்களை கவனித்த பிறகே எனது இறுதி வடிவம் அமைத்துள்ளேன்.எனினும், இனி சுந்தரின் கருத்தொட்டி மாற்றினாலும் மாற்றுவேன். இனி காத்திருப்பதைத் தவிர வேறு முறை எனக்குத்தெரியவில்லை. வேறு ஒருங்கிணைப்பை, தெரிந்தவர் செய்யின் இணைகிறேன்.
கருத்துக்கணிப்பு நமக்குள் செய்வதும் முக்கியம் தான். நமது விக்சனரி குழுமத்திலும் அதைச் செய்ய வேண்டும். அதோடு ,முடிந்தவரை பல தரப்பட்ட பயன்பாட்டாளர்களிடமும் விரிவாக நடத்துவதே தலைசிறந்த வழி. அத்தகைய கருத்துக்கணிப்புக்கு குறைந்தது 10 நாட்களாவது வேண்டும்.--த*உழவன் 08:18, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

விக்சனரி குழுமத்திலும் இன்னும் பரந்துபட்ட வாசகர்களிடமும் கருத்துக் கணிப்பு நடத்துவது நல்ல யோசனை. நாம் பல்வேறு கோணங்களிலும் அலசினாலும், இது போன்ற பெரிய மாற்றங்களுக்கு வாசகர்கள் கருத்து அறிவது நல்லது. இறுதியாக மூன்று பக்கங்களை வடிவமைத்து விட்டு, அது குறித்த வாக்கெடுப்பை நடத்தலாம். இதற்கான அறிவிப்பை வலைப்பதிவிலும், விக்சனரி site noticeலும் இடலாம். இதனை வாக்கெடுப்பாக கருதாமல், இன்னும் பல தரப்பட்ட கருத்துகளை அறிந்து அதற்கேற்ப திட்டத்தைச் செம்மைப்படுத்த முனைவோம். திட்டம் குறித்த உரையாடல்கள் வெகு நாட்கள் நடப்பதால் வரும் அயர்ச்சியைப் புரிந்து கொள்கிறேன். எனினும், ஓரளவு இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்வதால் முறையான வழிமுறைக்காக சற்று தாமதமாவது பரவாயில்லை என்று நினைக்கிறேன். --ரவி 10:45, 16 செப்டெம்பர் 2010 (UTC) .Reply

பலுக்கல்-உச்சரிப்பு[தொகு]

முதலாவது தலையங்கம் "உச்சரிப்பு" என்று வருவேண்டுமா? அதுவே தரப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புகள் என்ற தலையங்கம் எல்லா பக்கங்களிலும் தேவை. தலையங்களுக்கு சமன்களைப் பயன்படுத்தல் விக்கி syntax ஏற்ற மாதிரி இருக்கும். --Natkeeran 14:08, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply

பலுக்கல் குறித்து முன் நடந்த உரையாடல்கள்[தொகு]

தற்பொழுதுள்ள பலுக்கல் என்ற சொல்லுக்கு மாற்றாக, உச்சரிப்பு என்றால் அனைவருக்கும் தெரிய வாய்ப்புண்டு என்று கருத்திட்டவர்கள்.(காண்க: ஆலமரத்தடியில் 6.3பலுக்கல் எதிர் உச்சரிப்பு[ என்பதிலுள்ள உரையாடல்கள்)

மாற்றவேண்டுமென்று கருத்திட்டவர்கள்;-
 1. நற்கீரன் (உச்சரிப்பு என மாற்றலாம்)
 2. பழ.கந்தசாமி (உச்சரிப்பு அல்லது ஒலிப்பு என மாற்றலாம்)
 3. த*உழவன் (ஒலிப்பு என மாற்றலாம்)
 4. மாகிர் (உச்சரிப்பு என மாற்றலாம்)
 5. செல்வா(ஒலிப்பு என மாற்றலாம்)
 6. பெரியண்ணன்(ஒலிப்பு என மாற்றலாம்)
 7. இரவி (ஒலிப்பு என்பது அனைவருக்கும் புரியும் எளிய தமிழ்ச் சொல்)
 8. பவுல்(ஒலிப்பு என மாற்றலாம்)
 • pronunciation என்பதற்கு எந்த அகரமுதலியிலும் "பலுக்கல்" என்னும் சொல் காணப்படவில்லை. "உச்சரிப்பு", "ஒலிப்பு" ஆகிய சொற்கள் உள்ளன. பெர்சிவல் அகரமுதலி "மொழியோசை" என்னும் சொல்லையும் தருகிறது! ஒலிப்பு என்பது எல்லாருக்கும் எளிதில் புரியும் சொல். ஒலிபெருக்கி, வானொலி, ஒலிநாடா, முரசொலி போன்றவற்றோடு இயைந்தும் செல்லும். --பவுல்-Paul 01:30, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply

தீர்வு

பக்க வடிவமைப்பு(த*உழவனின் பேச்சுப்பக்கத்தில் செல்வா கூறியவை)[தொகு]

இப்பக்கத்தில் பக்க வடிவமைப்பு என்ற தலைப்பில், செல்வா என்னிடம் கூறியவைகளை இங்கு அப்படியே இடுகிறேன்.--த*உழவன் 09:18, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

பக்க வடிவமைப்பு

தகவலுழவன், நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் "இதற்கு முன் பயன்படுத்தப்பட்டுள்ள சுந்தர் தானியங்கி படிவ வடிவம் ஏன் வேண்டாமென்று சில வரிகள் எழுதக் கேட்டுக்கொள்கிறேன்" இதனை நான் எங்கு பதிய வேண்டும்? பேச்சு:dado என்னும் பக்கத்தில் உள்ள முதல் வடிவத்தைப் பார்த்தால் (என் கருத்துப்படி), (1) அது எடுப்பாக இல்லை, (2) முதலில் கொட்டை எழுத்தில் "ஆங்கிலம்",பிறகு அடுத்து அடுத்து பலுக்கல், கடைசியாக சிறிதாக பொருள்; பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா என்று விளக்கம் இல்லை. நீங்கள் மாற்றி அமைத்ததில், பெயர்ச்சொல் என்னும் குறிப்பைச் சேர்த்து உள்ளீர்கள், அதனை நான் வரவேற்கிறேன், ஆனால் சொல்-ஆங்கிலம்-பெயர்ச்சொல் என்னும் தொடர் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு நேர்த்தியாய் இல்லை என்பது என் கருத்து. மேலும் பொருள், விளக்கம் என்னும் பட்டைகள் எடுப்பாக இல்லை (எழுத்துகள் மிகவும் மங்கலாக இருப்பது ஆவலைத் தூண்டுவதாக இல்லை என்பது என் கருத்து). இவற்றை எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்க்க வேண்டுகிறேன். எனக்கு dado2 என்னும் வடிவம் பிடித்துள்ளது. நீல நிற எழுத்தில் இருப்பது தவறாக எனக்குப் படவில்லை. அது கறுப்பாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலோர் விரும்பினால் அப்படியே இருக்கட்டும். ஆனால் நீலம் பிடிக்கின்றதா, கறுப்பு பிடிக்கின்றதா என்று கேட்டுப்பார்க்கலாம். இதற்காக இனிமேலும் நேரம் செலவிடுவது நல்லதல்ல என்பது என் கருத்து. --செல்வா 17:25, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply

செல்வா, பொதுவாக இணையத்தில் நீலம், pink ஆகியவை இணைப்புகளுடன் தொடர்புப் படுத்திப் பார்க்கக்கூடிய வண்ணங்கள். பயனர்கள் அவற்றை அழுத்திப் பார்த்துக் குழம்பலாம் என்பதால் இவ்வண்ணங்களைத் தவிர்ப்பது நன்று--ரவி 10:53, 16 செப்டெம்பர் 2010 (UTC)Reply

 • முந்தைய வடிவம் இல், ஏற்கனவே பதிவேற்ற்றப்பட்ட சுந்தர் தானியங்கி வடிவமும், உள்ளீடுகளும் உள்ளன. அவற்றின் பக்க வடிவத்தை மாற்றி dado இல் முன்மொழிந்துள்ளேன். அந்த உள்ளீடுகளை dado2 வடிவில் எங்கு இடுவது?
dado-வில் உள்ள எந்த உள்ளீடுகளை dado2 இல் சேர்க்க வேண்டும்?--செல்வா 00:43, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 • படத்தைத் தவிர மற்ற தகவல்கள் ஒவ்வொரு பதிவேற்றச் சொல்லிலும் இருக்கும். பிறகு, கருத்து கணிப்பு நடத்தினால் நன்றாக இருக்கும்.கருத்துக்கணிப்புக்கு பிறகு தானியங்கி மூலம் சோதனைப் பதிவேற்றங்களை இட்டால் சரியாக இருக்குமென நம்புகிறேன். நன்றி. --த*உழவன் 04:34, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply
ஆம்.--செல்வா 00:43, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply

பதிவேற்றத்துக்கு ஏற்ற பக்க வடிவை இறுதி செய்வதற்கான கணிப்பு பற்றி[தொகு]

பயனர் பவுல்,
//செல்வா, தாங்கள் குறிப்பிட்டபடி இப்பக்கத்தையும் பார்த்தேன். இப்பக்கத்தில் நடந்த உரையாடலின் தொகுப்பாகத் தாங்கள் சில கேள்விகளைக் கருத்துக் கணிப்புக்காக உருவாக்கினால் எப்படி?//
என்று விக்சனரி:மொழியைக் குறிப்பிடும் தலைப்பு#கருத்துக் கணிப்புக் கேள்விகள் உருவாக்குவதில் ஒத்துழைப்பு என்னும் பக்கத்தில் கேட்டிருந்தார். இப்பொழுது கருதப்படும் பக்கங்களுக்கு இடையே பெரிய வேறுபாடு இல்லை என்று பழ. கந்தசாமி கூறியிருந்தார். விரிவாக கருத்துக்கணிப்புச் செய்ய வேண்டும் எனில் கேள்விகளை உருவாக்குகின்றேன், ஆனால், dado2 இல் உள்ளவாறு பகுதி பகுதியாக

 1. மொழிப்பட்டை (உண்டு/இல்லை, கொடி- உண்டு/இல்லை),
 2. பொருள்,
 3. விளக்கம்,
 4. பயன்பாடு,
 5. மொழிபெயர்ப்பு ,
 6. சான்றுகோள்/ஆதாரம்


என்று தனிசையாக (மாடுலராக, modular), வார்ப்புருக்களை பக்க வடிவமைப்பில் சேர்த்துவிட்டால், பின்னர் தேவை எனில், பொருள்-விளக்கம்-பயன்பாடு முதலான பட்டைகளுக்கான நிறம், எழுத்துக்கான நிறம் (அளவு) முதலியவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் எளிதாக மாற்றி சேர்த்துவிடலாம் (அப்பட்டைகளுக்கான வார்ப்புருவை மட்டும் மாற்றினால் போதும்)

 • ஆகவே வடிவமைப்பின் முக்கியக்கூறுகளை (எங்கெங்கு என்னென்ன இருக்க வேண்டும் என்பதை) மட்டும் கூடித் தேர்ந்து விட்டால் போதும்.
 • பயனர்:Ganeshk/Translation என்னும் பக்கங்களையும் எல்லோரும் ஒருமுறை பார்க்கட்டும்.(இவ்வடிவங்கள் அவரது முன்மொழிவு அல்ல. எனக்கு அவர் பதிவேற்றப் பயிற்சி அளித்த போது, பக்கவடிவமொன்றை மாதிரிக்குக் கேட்டார். அப்பொழுது பகுப்பு:ஆங்கிலம்-பன்மைச்சொற்கள் பதிவேற்றிக் கொண்டிருந்தேன். அதனால் இவ்வடிவம் கொடுத்தேன். கொடிகள் பற்றியும், பிறவும் கேட்டார்.அப்பயிற்சிக்குப் பின்னே, நான் அவருக்கு செய்து காண்பித்தச் சொல், constant of aberration ஆகும்.--த*உழவன் 02:06, 9 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 • கடைசியாக dado, dado2 ஆகிய இரண்டு வடிவங்களை மட்டும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தால் போதும் (இரண்டும் மிகப்பெரும்பாலும் ஒரே வடிவினதே, (1) மொழிப்பட்டை இருப்பதும்-இல்லாததும், (2) இரட்டைப்படம் வார்ப்புரு-சொருகலாக (nested) சேர்த்திருப்பதும்-அப்படியில்லாமல் எளிய-அடிப்படை விக்கி நிரல்படி படம் சேர்த்திருப்பதும், (3) பெயர்ச்சொல்-வினைச்சொல் என்னும் குறிப்பு எங்கு எப்படி இடவேண்டும் என்பதுமே முக்கியமான வேறுபாடுகள்.
 • சான்றுகோள்/ஆதாரம் என்பதற்கு ஒரு பட்டை இருக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டால் போதும் (அது நீலமா, சாம்பலா, ஆதாரமா, சான்றுகோளா என்பதெல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் தேர்ந்து கொள்ளலாம். அதேபோல ஒலிப்பு என்பதற்கு ஒரு பகுதி இருக்க வேண்டும் என்று முடிவு செய்தால் போதும், அது ஒலிப்பா, உச்சரிப்பா பலுக்கலா, அங்குள்ள சிறு கொடியின் படவணுக்கள் 28 ஆ, 20 ஆ என்றெல்லாம் அலசவேண்டாம் (இப்பொழுது). ஒலிப்பை எழுத்துவடிவில் தரும்பொழுது அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்குப்படியும் (IPA) தமிழில் ஒரு முறைப்படியும் தர ஒரு கூறு இருக்க வேண்டும் என்று முடிவு செய்தால் போதும். அது என்ன எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பின்னர் முடிவு செய்யலாம். (எல்லா சொற்களுக்கும் IPA கிட்டாது, கிட்டுவதும் உறுதியாக அமெரிக்காவா, ஐக்கிய இராச்சியமா என்று கூறமுடியாது. கனடாவில் கூட வேறு பாடு உண்டு :) ஆத்திரேலியாவிலும், இந்தியாவிலும் கூட :) ). *ஆகவே dado2 அல்லது dado வில் உள்ள அடிப்படைப் பொதுக் கூறுகளை மட்டும் (கட்டுமான அமைப்பு, architectureசெப் 7, 2010 சேர்ப்பு) தேர்ந்தால் போதும். என்ன சொல்கிறீர்கள்? --செல்வா 01:47, 7 செப்டெம்பர் 2010 (UTC)--செல்வா 17:27, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 • செல்வா, சிறப்பான விதத்தில் விவாதப் பொருளை வரையறுத்துள்ளீர்கள். dado, dado2 ஆகிய இரண்டு மாதிரிகளையும் ஒப்பிட்டுக் கருத்துத் தெரிவிக்கக் கேட்கிறீர்கள். அடிப்படைப் பொதுக் கூறுகள் பற்றிக் கருத்துக் கணிப்பு நடத்த உங்கள் முன்மொழிவு பொருத்தமாய் உள்ளது. dado2 வடிவ அமைப்பிலும் உள்ளடக்கத் தொகுப்பிலும் சிறப்பாக உள்ளது. * dado2-இல் "சான்றுகோள்" என்னும் சொல்லைத் தொடர்ந்து ஒரு முற்றுப்புள்ளி தெரிகிறதே. கீழே, இன்னும் ஒருமுறை "சான்றுகள்" என்று வருகிறது. இவ்வாறு ஒரே விதமாக இரு சொற்கள் அடுத்தடுத்து வருவது குழப்பமாகக் கூடும். "சான்றுகோள்" பகுதியில் சிறப்பு உசாத்துணைகள் இடம்பெறலாம். எனவே அது இருக்கட்டும். ஆனால் சென்னை அகரமுதலி, ஆங்கில விக்சனரிகள் போன்றவை தன்னியக்கமாக வருபவை. அங்கே "சான்றுகள்" என்பதற்குப் பதிலாக "காண்க:" (= source, reference) என்று இடலாமோ? அப்போது, யாராவது பயனர் பொதுவானதொரு வெளி (உள்) இணைப்பைச் சேர்க்கவும் வழியாகும் அல்லவா? இக்கருத்துகளின் அடிப்படையில் dado2 -க்கு ஒப்புதல் தருகிறேன்.--பவுல்-Paul 02:23, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply

ஒப்புதல் தருவோர்[தொகு]

 1. செல்வா
 2. --பவுல்-Paul 02:23, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 3. --Natkeeran 00:24, 17 செப்டெம்பர் 2010 (UTC)Reply

மறுப்போர்[தொகு]

கருத்துகள்[தொகு]

 1. -கருத்துக்கணிப்பில் பக்கவடிவ மாற்றத்தின் அவசியத்தைக் கூறிய பின்பு நடத்தினால் நன்றாக இருக்கும். கருத்துக்கணிப்பு dado எதிர் dado2 அல்ல. பழைய வடிவம் எதிர் புதிய வடிவம் என்று உடன் புரிந்து கொள்ள வகை செய்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். புதிய வடிவம் அவசியமா? என்ற கேள்வியும் இணைக்கப்பட வேண்டும். ஏற்கனவே, ஒரு இலட்சம் சொற்களை பதிவேற்றிய இரவி, சுந்தர் ஆகியோரின் கருத்துக்களை அறிந்த பிறகு பதிவேற்றினால் சிறந்தது. ஏனெனில், அவர்களும் முதலிலுள்ள முன்மொழிவுப் பக்கத்தை இற்றைப்படுத்த வாய்ப்புள்ளது.--த*உழவன் 01:55, 9 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 2. -முதல்வரியான மொழிவரி ஆங்கிலச்சொற்களுக்கு அவசியம்.பிற மொழிகளும் அதில் சேர வாய்ப்பிருக்கிறது.(எ. கா.) dove,dado,..எனவே, மேற்கூறிய படி முதல் வரியான மொழி வரி உண்டு/இல்லை என்பது ஆங்கிலச் சொற்களுக்கு த் தேவையில்லை.அவசியம் முதல் மொழிவரி இருக்கும் என்பதால், அக்கேள்வியை நீக்கக் கோருகிறன்.
 3. -பட்டைகள் விக்கிநிரலமைப்பத் தருவதில்லை என்பதால், விக்கிநிரலோடு கூடிய முதல்வரி, இலத்தீனியச் சொற்களுக்கு மிக அவசியம். இங்கு பதிவேறவுள்ள ஒரு இலட்சம் சொற்களில் ஏறத்தாழ50-55000சொற்கள் ஆங்கில தனிச்சொற்களே. அதில் பிற இலத்தீனிய மொழிக் குறீயீடுகள் கொண்ட மொழிபெயர்ப்பு சேர வாய்ப்புள்ளது. மீதமுள்ள 40-45000 சொற்களில் இப்பொழுதுள்ள dado2வின் முதல் மொழிவரி அமைப்பதில் என்க்கு உடன்பாடே.அதைத்தான் பகுப்பு:ஆங்கிலம்-பன்மைச்சொற்கள்பதிவேற்றி உள்ளேன். முன்பு மேலே குறிப்பிட்டது போல, கணேசின் பதிவேற்ற பயிற்சிக்கு பயன்படுத்தியுள்ளேன். நமது விக்சனரி 16வது இடத்திலிருந்து, பதிவேற்றத்திற்கு பிறகு 8அல்லது9வது இடத்திற்கு போகும். அப்பொழுது பிற விக்சனரியர்களும் கவனிப்பர் என்பதனையும் கவனத்தில் கொண்டு பக்க வடிவை, பிற மொழி விக்சனரியின் சொற்களை, இப்பொழுதே நாம் கவனத்தில் கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன். --த*உழவன் 02:26, 9 செப்டெம்பர் 2010 (UTC)Reply
#- டிவ் (div) பயன்படுத்துவது தற்போதைய வழக்கான விக்கி தொடரியல் இல்லை என்பது குறிப்பிட வேண்டும். (Parse செய்யாது என்று கூற வரவில்லை). இது ஆங்கில மற்றும் பிற மொழி விக்சனரிப் பக்களின் மாதியில் இருந்து மாறுபடுவதாகும். இந்தப் பக்கங்களை semantic anaylysis செய்ய விரும்பியான் தடங்கல்கள் வரலாம். சுந்தர், கணேசு போன்ற நுட்பவியலாளர்கள் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும். --Natkeeran 00:50, 15 செப்டெம்பர் 2010 (UTC)Reply
1.1) நிரல் நுட்பவியலாளர்கள் மூலம் தெளிவு பிறக்கும். அவர்கள் கருத்திட நாம் முயல்வோம்.எனினும், நீங்கள் முன்பு இது பற்றி விளக்கமாக ஆலமரத்தடியில் கூறியதை மறக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை.
அதனால் தான், absolute line என்பதில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்ப்புருக்களை மாற்றி அமைத்துள்ளேன். அவைகளிலுள்ள <!--- குறியீடுகளையும், வார்ப்புருவினையும் எடுத்துவிட்டு, உகந்த பெயரை இட்டால், அது எத்தனை இலட்சம் சொற்கள் இருந்தாலும், சில நிமிடங்களில், டிவ் (div) இருந்து, சமக்குறியீடுகளுக்கு மாறும் வழிவகையுள்ளது என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மற்றொன்று இந்த தளத்தில் உள்ளது போல அமைத்தால், இப்பொழுது முன்மொழியப்பட்டுள்ள வார்ப்புரு பட்டைகளால் இடர் வராது என்பது எனது எண்ணம்.அதனை இங்கு கொண்டு வரத் தடுமாறுகிறேன். நிரலர் உதவுகளை எதிர் நோக்குகிறேன்--த*உழவன் 08:11, 16 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 1. நற்கீரன் மேலே div பற்றிக் கூறிய கருத்து இந்த கருத்துக்கணிப்புக்குள் வராது என்று நினைக்கின்றேன். ஏனெனில், இக் கருத்துக்கணிப்பு பொதுவான வடிவமைப்பைப் பற்றித்தானேயொழிய, அதனை எப்படிப்பட்ட நிரலால் செய்வது என்பதைப் பற்றியது அல்ல. எனவே அவருடைய மறுப்பு என்னும் வாக்கை மறுபார்வை இட வேண்டுகிறேன்.--செல்வா 17:02, 15 செப்டெம்பர் 2010 (UTC)Reply
தகவல் உழவன் விளக்கத்துக்கு நன்று. பொதுவான வடிவமைப்பு நன்றாகவே உள்ளது. --Natkeeran 00:23, 17 செப்டெம்பர் 2010 (UTC)Reply

மறுமொழிகள்[தொகு]

 1. தகவலுழவன், ஏன் புதிய பக்க வடிவம் வேண்டும் என பல இடங்களில் பல முறை உரையாடியுள்ளோம். மீண்டும் மீண்டும் கேட்ட கேள்வியையே, நடத்திய கருத்துக்கணிப்புகளையே நடத்த வேண்டும் என்று கூறுவதால் என்ன பயன்? 200,000 சொற்களுக்கான பக்கங்களைக் கொண்ட ஓர் அகர முதலியாய் இது உருவெடுக்க இருக்கும் நிலையில், சீரான, எடுப்பான, பயன் நல்கும் தனிசையான (மாடுலரான, modular-ஆன்) அமைப்புகள் கொண்ட பக்கங்களோடு இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? கொரிய மொழி விக்சனரியைப் பாருங்கள் (எடுப்பான தோற்றத்திற்கும் பக்க ஒழுங்குக்கும்). ஒரு பக்கத்தில் தரும் குறிப்புகள் ஒழுக்கத்துடனும் பயன் தருவதாயும், எடுப்பாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு? இரவியும் சுந்தரும் ஓர் இலட்சம் சொற்களைப் பதிவேற்றினார்கள் என்பதை நான் நன்கு அறிவேன் (சனவரி 2008 உக்கும் ஏப்ரல் 2008 உக்கும் இடையில்). அவர்கள் கருத்துகளையும் கட்டாயம் கேட்போம், ஆனால் அத்தனை சொற்களைத் தானியங்கி வழியாக வலையேற்றியது வேறு, பக்கத்தின் வடிவமைப்பைப் பற்றி இப்பொழுது இங்கு நாம் இங்கு உரையாடுவது வேறு. எல்லோருடைய கருத்துகளையும் கேட்போம், ஆனால் எது நல்லதாக கருத்தடிப்படையில் இருக்கும் என விக்சனரியர்கள் அனைவரும் கூடித் தேர்ந்தறிகிறோமோ, அதன்படி வலையேற்றுவது முறை என்பது என் கருத்து. எந்தப் பக்க வடிவமைப்பிலும், புதிய சொற்களை வலையேற்ற வழியுள்ளது. முன்னர் வலையேற்றிய பக்கங்களைத் தானியங்கி வழியாக புதிதாகத் தேர்ந்தெடுக்கும் பக்க வடிவமைப்புக்கு உகந்தவாறு மாற்றிக்கொள்ளாலாம். --செல்வா 03:07, 9 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 • த*உழவன், மேலே கருத்துக் கணிப்பு dado எதிர் dado2 என்றொரு தோற்றத்தைக் கொடுத்திருந்தால் மன்னிக்கவும். தாங்கள் சொல்வதுபோல, பழைய எதிர் புதிய என்று சொன்னால் பொருத்தமாயிருக்கும். எப்படியாயினும், இரண்டோ அதற்கு மேலோ மாதிரி இடுகைகள் காட்டி, அவற்றுள் எவ்வடிவம் விக்சனரியின் தரத்திற்கும் பயன்பாட்டுக்கும் எழில்மிகு தோற்றத்திற்கும் வருங்கால வளர்ச்சிக்கும் மிகப் பொருத்தமாயிருக்கும் என்று நாம் கருத்துக் கணிப்பு செய்வது நல்லது என்பது என் கருத்து. --பவுல்-Paul 03:30, 9 செப்டெம்பர் 2010 (UTC)Reply


 • பயன்பாடு, விளக்கம் முதலிய முக்கியமான கூறுகள் சுந்தர், ரவி முதலியோர் இணைத்த (தானியங்கிப்) பக்கங்களில் இல்லை என்பதால்தானே புதிய பக்கவடிவம் பற்றிய உரையாடலே ஆரம்பிக்கப்பட்டது. இல்லையா? இப்போதைய பக்கங்களில் அவற்றைப் பெரும்பாலும் சேர்க்க முயற்சி செய்துவருகிறோம் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். பழ.கந்தசாமி 03:38, 9 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 1. "உண்டுஇல்லை" என்று தனித்தனியாக பக்க வடிவமைப்பின் ஒவ்வொரு கூறுகளுக்கு இப்பொழுது கருத்துக் கணிப்பு நடத்தவில்லை. பொதுவாக பக்க வடிவமைப்பின் கட்டுமானம் (architectural design) dado2 அல்லது dado வில் உள்ளது போல இருக்கலாமா என்பதே. ஏனெனில், A1, A2, A3 என என்னென்ன அமைப்புகள் இருக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டால், அவற்றின் பொது வடிவம் இட்டு எல்லாச் சொற்களையும் வலையேற்றிவிடலாம். அந்த A1, A2, A3 என்பன தனிசையான (மாடுலரான, modular-ஆன) வார்ப்புருக்களாக இருக்கும். எ.கா. பொருள் என்பதற்கு ஒரு பட்டை அல்லது ஒரு வரி இருக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டால் போதும். அது பட்டையாக இருக்க வேண்டுமா அல்லது ==பொருள்== என்று இருக்க வேண்டுமா, பட்டையாயின் எழுத்து எந்த நிறம், பட்டை எந்த நிறம் என்பதெல்லாம் இப்பொழுது முடிவு செய்யத் தேவை இல்லை. {{பொருள்}} என்று ஒரு கூறு இருந்தால் இப்போதைக்குப் போதும். பின்னர் மாற்ற வேண்டும் எனில் இந்த வார்ப்புருவை மட்டும் மாற்றினால் போதும். ஆகவே இக் கருத்துக் கணிப்பு பக்க வடிவமைப்புக்கான கட்டுமானத்துக்கு மட்டும். இது dado-வா dado2-ஆ அல்லது வேறா என்று அல்ல. dado2 இல் உள்ளது போல உட்கூறுகள் (அதாவது என்னென்ன பகுதிகள் இருக்க வேண்டும், எதன் பின் எது வர வேண்டும், எங்கெங்கு என்னென்ன அமைய வேண்டும் என்பதான பொதுக் கூறுகள்). இவற்றை மட்டும் தேர்ந்து முடிவு செய்தால் பதிவேற்றம் தொடங்கலாம் (பின்னர் ஒவ்வொரு வார்ப்புருவும் எப்படி இருக்க வேண்டும் என்று பொறுமையாக முடிவு செய்யலாம்). எ.கா. முதல்வரியில் மொழிக்கு என ஒரு வார்ப்புரு இருந்தால் (பின்னர் அதில் கொடியுடனோ, கொடி இல்லாமலோ, பட்டையுடனோ, பட்டை இல்ல்லாமலோ, கொட்டை எழுத்திலோ, வேறு நிறத்திலோ என்று எப்படி வேண்டுமானாலும் மிக எளிதாக மாற்றலாம்). --செல்வா 03:46, 9 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கொடை அமைப்பு[தொகு]

த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்:
கொடை அமைப்பு

நமக்கு தமிழக அரசு தந்த கொடைச்சொற்கள் 1,32,746 ஆகும்.
அதன் முதல் 10 சொற்களும், இறுதி 10 சொற்களும் படத்தில்
கொடுக்கப்பட்டுள்ளது.


இத்தகவல்களில், C பிரிவில் வருவதைப் பகுப்பாகக் கொள்ளலாம்.
D என்பதைப் புதியத் தலைப்புச்சொல்லாகக் கொள்ளலாம்.
E என்பதனை அதற்குரிய பொருள் பகுதியாகக் கொள்ளலாம்.
இந்த வகையில் தானியங்கிச் சோதனகளை செய்யலாமெனக் கருதுகிறேன்.உங்களின் கருத்தென்ன? --த*உழவன் 02:28, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply

 • த*உழவன், தமிழக அரசிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட சொற்தொகுப்புக்கு மெருகூட்டுவது எப்படி என்பது குறித்துத் தானே உரையாடிவருகிறோம்? ஆங்கிலம்-பகுப்பு-பொருள் என்பதோடு "விளக்கம்", "பயன்பாடு", "மொழிபெயர்ப்பு(கள்)", "சான்றுகோள்" ஆகியவற்றை இணைத்தால்தானே செழுமை உண்டு? மொழிப்பட்டையும் கொடியும் இடுவது பற்றியும் பேசியுள்ளோமே. இத்தனை உரையாடலுக்குப் பின்னும் தாங்கள் ஒரு சிறு பகுதி பற்றி மட்டுமே கருத்துக் கேட்பது வியப்பாக உள்ளது.--பவுல்-Paul 03:46, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply

நம் பல உட்கூறுகளைப் பற்றி அலசி உள்ளோம். என் கைவசம் இருப்பது, அவை மட்டுமே.எடுத்துக்காட்டாக, முதலில் உள்ள ஒலிப்பு என்பதில் IPA பற்றியும, தமிழில் ஒலிக்குறிப்புகளையும் இப்பொழுதே இணைக்க எண்ணம். ஆனால் அது கைவசம் இல்லை. அக்குறிப்புகளை இடக்கூடாது என்று இதுவரை யாரும் கூறவில்லை. முனைப்பாக செய்யப்போய், ஏதேனும் குறை கூறுவரோ என்று தயங்குகிறேன். கருத்துகளை விட, ஒருங்கிணைப்பில் இணைந்தால் நன்றாக இருக்கும் மேலுள்ள தேவையானவைகளில் நான் இதனை எழுதித்தருகிறேன் என்று யாரும் முன்வரவில்லை என்பதால் தயக்கமாக இருக்கிறேன்.மொழிபெயர்ப்புகள் என்பது இதற்கு பொருந்துமா? அதனை ஆங்கில விக்சனரியர் தான் செய்யவேண்டும் என்று செல்வா கூறியது சரியெனப்படுகிறது. நாம் தமிழ் சொற்களை வளர்க்கும் போதே பல்வேறு மொழி பெயர்ப்புகள் தவறாமல் தரவேண்டுமென எண்ணுகிறேன். இருப்பதை வைத்து, மாதிரிக்கு சில பதிவுகளை பதிவேற்றிக் காண்பிக்கட்டுமா? --த*உழவன் 14:25, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply

மாதிரிகளைப் பதிவேற்றிக் காட்டுங்கள்![தொகு]

 • த*உழவன், நீங்கள் கூறுவதுபோல சில மாதிரிகைகளைப் பதிவேற்றிக் காண்பித்தால் நன்றாயிருக்கும். பயனர் அவை பற்றிக் கருத்துத் தெரிவிக்க அது வாய்ப்பாகும். IPA ஒலிப்புமுறை கைவசம் இல்லை என்கிறீர்கள். செல்வா இதற்கு உதவலாம் என்று நினைக்கிறேன். கணினி மொழியில் தேர்ச்சியுடையோர் (செல்வா உட்பட) எழுதித்தர முன்வரவேண்டும். அப்போது நீங்கள் தயங்கவேண்டியதில்லை.--பவுல்-Paul 15:08, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply
தகவலுழவன் காட்டியிருக்கின்றார், அவற்றில் அவர் பரிந்துரைப்பது dado என்பது. அதற்கும் dado2 என்பதற்கும் அதிக வேறுபாடு (இப்பொழுது) கிடையாது. ஆனால் படம் முதலானவற்றை இடுவதிலும், பட்டைகள் இடுவதிலும் அவர் சற்று மாறுபடுகின்றார். IPA குறிகளுக்லென வார்ப்புரு இட்டால் போதும். அவை வெற்றாக (இப்போது) இருக்கலாம். தக்க IPA குறிகள் கிடைக்கும் பொழுது பின்னர் சேர்த்துக்கொள்ளலாம். எல்லா சொற்களுக்கும் IPA குறிகள் கிடைப்பதில்லை (ஆனால், கேம்பிரிட்ச்சு அகரமுதலி, ஆக்ஃசுபோர்டு அகரமுதலி முதலானவை ஒலிப்பைத் தருகின்றன (இவை IPA குறிகள் அல்ல, ஆனால் ஒலிப்பைத் தரும் குறிகள்). IPA குறிகள் இருந்தால், அதிலிருந்து தானியங்கியாய்த் தமிழ் எழுத்துகளில் ஒலிப்புக்குறிகள் உருவாக்க முடியும். (இவை எல்லாம் ஆங்கிலம் பிரான்சியம், உருசியம் போன்ற மொழிகளுக்கே; இந்திய மொழிகளின் ஒலிப்பைத் தானியங்கியாய்த் தமிழில் வடிக்கலாம், இவற்றுக்கான IPA குறிகளையும் தானியங்கியாய் உருவாக்கலாம். ஏனெனில் இவை ஒலிப்பொழுக்கம் மிக்க மொழிகள் (ஓரெழுத்துக்கு ஓரொலி). ஆனால் நாம் பேசுவது ஆங்கிலச் சொற்களுக்கு. இப்பொழுது தேவை இல்லாமல் ஒரே எழுத்துக்கோவை உள்ள பிறமொழிச்சொற்களைப் (இத்தாலியம், பிரான்சியம்....) பற்றி தகவலுழவன் கவலைப்படுகின்றார். தமிழ் இணையக் கல்விக்கழகம் தந்த ஆங்கிலச் சொற்களை வலையேற்ற பிறமொழிகளைப் பற்றி இப்பொழுது கவலைப்படத் தேவை இல்லை. --செல்வா 17:26, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply

 • செய்யலாம் என்பது என் கருத்தும். ஆனால், முதலில் கருத்துக்கணிப்பில் உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள். காலக்கெடு எதுவும் கொடுக்காததன் காரணம் இப்பொழுது முனைப்பாக பங்களிக்கும் ப்லரும் அதில் கருத்தளித்து மேலெடுத்துச் செல்வர் என்னும் நோக்கில் விட்டுவிட்டேன். நாம் ஏதோ ஒரு திசை நோக்கி நகராதது போலவே உணர்கிறேன். இங்கொன்றும் அங்கொன்றுமாக கருத்துகள் இட்டுக்கொண்டிருக்கின்றோம். ஒருமுகமாக ஒர் இசைவான கருத்தை நோக்கி (அது ஒரு குறிப்பிட்ட முடிவு வேண்டாம் என்றிருந்தாலும், ஒரு முடிவை நோக்கி) நகர வேண்டுவது அடித்தேவை. நான் முன் வைத்த கருத்துக்கணிப்பு ஏதும் அதிக சிக்கல் இல்லாத பொது முடிவு. பயனைர்கள் எல்லோரையும் முடிவு நல்குமாறு அழைக்கின்றேன். மேலே கருத்துக்கணிப்பு என்பதைப் பார்க்கவும். கெடு வேண்டும் எனில் வரும் செவ்வாய்க்கிழமை UTC 23:00 மணிக்கு என்று அறிவிக்கலாம். --செல்வா 03:17, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply

 • தகவலுழவன், செல்வா மற்றும் பவுல் அவர்களுக்கு வணக்கம்.

தமிழக அரசு தந்த கொடைச்சொற்கள் 1,32,746 ஆன இவற்றை பதிவேற்றம் செய்ய ஏன் தாமதம் என்று புரியவில்லை. எனக்குத்தெரிந்த வரையில் எனது கருத்துக்களை கூறுகிறேன்.

1) பக்க வடிவமைப்பை சீக்கிரமாக முடிவு செய்ய வேண்டும்.
2) பவுல் அவர்கள் கூறியபடி,

---எவ்வடிவம் விக்சனரியின் தரத்திற்கும் பயன்பாட்டுக்கும் எழில்மிகு தோற்றத்திற்கும் வருங்கால வளர்ச்சிக்கும் மிகப் பொருத்தமாயிருக்கும் என்று நாம் கருத்துக் கணிப்பு செய்வது நல்லது --- இதனை முழுதுமாக ஏற்று, அடுத்த கட்டத்திற்கு செல்வது நலம்.

3) நேரத்தை வீணாக்காமல், ஒரு முடிவுக்கு வந்து பதிவேற்றத்தை துவங்கவும்.
4) பதிவேற்றத்தில் பங்கு கொள்ள நான், என்னால் முடிந்த அளவு பங்காற்றுவேன்.
5) பதிவேற்றத்திற்கான தானியங்கி பற்றிய முழு விவரங்களை எனக்குத்தெரிவித்தால், நான் என்னை தயார்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.
6) 1,32,746--- என்பது கொடைச்சொற்களின் எண்ணிக்கை. இதனை பதிவேற்றினால் மேலும் ஒரு இலட்சம் தமிழ்ச்சொற்கள் உருவாக வாய்ப்புள்ளது. ஆக மொத்தம் இரண்டு இலட்சம் சொற்கள் உருவாகும் எனபது எனது கருத்தாகும்.
நன்றி. வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 03:57, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 • பெரியண்ணன், விரைந்து செயல்பட வேண்டும் என்று தாங்கள் கூறுவதை முழுமையாக ஏற்கிறேன். போதிய அளவு உரையாடிவிட்டோம். முடிவுகள் எடுக்கவேண்டிய நேரம் இது. இந்த நல்ல தருணத்தை நழுவ விடலாகாது என்பதே என் கருத்தும் கூட. வணக்கம்!--பவுல்-Paul 04:15, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • திருச்சி பெரியண்ணன், பவுல், நானும் நீங்கள் சொல்வதைத்தான் கூறுகின்றேன். சொல்லப்போனால் மே மாதத்தில் இருந்து உரையாடிக்கொண்டிருக்கின்றோம். சூன் மாதம் சொற்கள் கைக்கு வந்த பின்பும் கூட மிக விரிவாக உரையாடியும், ஒருமித்தமுடிவுகள் நோக்கி நகர்வு இல்லை. பக்க வடிவமைப்பின் பொது வடிவம் (வடிவமைப்பின் கட்டுமானம் architectural design) இருந்தால் போதும் அதில் பெரிய கருத்து வேறுபாடு இருக்கத்தேவை இல்லை (இருந்தால் கூற வேண்டும்). இன்னின்ன கூறுகள் இருக வேண்டும் என்று வார்ப்புரு இட்டு செய்துவிடலாம். பின்னர் வார்ப்புருவை மட்டும் செப்பம் செய்தால் போதும் (5-7 வார்ப்புருக்கள்??). பல பக்கங்களில், பல செய்திகளைப் பேசுகின்றோம், எத்தனையோ வடிவமைப்புகள் செய்தாயிற்று, ஆனால் ஒருமித்த கருத்து நோக்கி இன்னமும் நகராமல் இருக்கின்றோம். --செல்வா 04:44, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply

பதிவேற்றச் சோதனைகள்[தொகு]

 1. அனைத்துச்சொற்களையும் இரு பெரும் பிரிவாகப் பிரித்துக்கொண்டேன். 1.தனிச் சொல், 2.கூட்டுச் சொல். அதில் ஆங்கில கூட்டுச்சொற்களுக்கு ஒரே தொகு வசதி போதும் என்ற கருத்து மிகவும் ஏற்புடையது. ஏனெனில், சொல்லாக்கத்தின் அளவும் குறைவாக வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
 2. absolute line என்பதனை ஆங்கிலக் கூட்டுச் சொற்களுக்கான மாதிரியாக க் கொள்ளலாமா? பதிவேறவுள்ள சொற்களில், ஏறத்தாழ 50,000 சொற்கள் இது போன்ற ஆங்கிலக் கூட்டுச் சொற்கள் ஆகும்.
 3. இதன் வடிவத்தினை ஓரளவு மாற்றவும் அமைப்பு இருப்பதால், பிற ஆங்கிலக் கூட்டுச் சொற்களுக்கும் பதிவேற்றவா? உங்களின் கருத்தறிய ஆவல். --த*உழவன் 20:09, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply
இதில் இந்தியக்கொடிக்கு மாறாக அமெரிக்கக் கொடியை இட வேண்டுகிறேன் (வார்ப்புரு_பேச்சு:=ஆங்= என்னும் பக்கத்தைப் பார்க்கவும்). விளக்கம் என்னும் பகுதியில் சொல்லைப் பற்றிய விளக்கம் இருக்க வேண்டும். சான்றுகோள் பகுதியில், அச்சொல் தமிழ் இணையக் கல்விக்கழகத்தினரால் அளிக்கப்பட்டது என குறிப்பிடுவது நல்லது என்று நினைக்கின்றேன். நன்கொடை என்பதற்கு மாறாக அளித்த சொல் என்றால் சரியாக இருக்கும், என்று நினைக்கின்றேன். --செல்வா 20:21, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 • மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளேன்.--த*உழவன்
நன்றி. மற்றவர்களும் கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும்.--செல்வா 02:05, 12 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 • பொதுவாக படிவத்தின் அனைத்துக்கூறுகளையும், ஒரு வார்ப்புரு மூலம் அமைத்து, அதில் உள்ளீடுகளை இடும், ஒரு வழிவகையை உருவாக்க முயலுகிறேன். அதன் முதற்கட்ட வெற்றியாக {.{முதல்வரிவார்ப்புரு2}}என்பதனைச் சொல்லலாம். எத்தகைய கருத்துக்கணிப்பு மாற்றம் வரினும், ஒரு சொல்லின் முதல்வரி அமைப்பினை, நாம் விரும்புவது போல மாற்றிக்கொள்ளலாம். கொடி வேண்டுமென்றாலும், வேண்டாமென்றாலும் எளிதில் அனைத்துச் சொற்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த {.{முதல்வரிவார்ப்புரு2}} என்பது உதவும்.

(எ. கா.)

 1. absolute line
 2. absolute tensor
 3. absolute point --த*உழவன் 05:38, 12 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 • த*உழவன், மேலே குறிப்பிட்ட இடுகைகள் கண்டேன். நன்றாக உள்ளன. பாராட்டுகள்! பயன்பாடு, மொழிபெயர்ப்பு என்று இரு வரிகள் இட்டால் வரும் நாட்களில் இடுகை செய்து மெருகூட்ட இயலும் என்பது என் கருத்து. --பவுல்-Paul 01:38, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 • தகலுழவனுக்கு வணக்கம். மேலே குறிப்பிட்ட 3 ஆங்கில கூட்டுச் சொற்களையும் பார்த்தேன். மிகவும் எளிமையாகவும், தற்போதய தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் இருக்கிறது. ஆகவே இதனை மாதிரியாக வைத்துக்கொள்ளலாம் என்பது எனது கருத்து. --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:19, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 • என் தேர்வு absolute line. தவிர, இரண்டு கருத்துகள் (1) சொல்லும், அதன் இலக்கணக்குறிப்பும் (பெயர்ச்சொல், வினைச்சொல்) என்பது பொருள் என்னும் பட்டைக்குக் கீழே இருந்தால் உதவியாக இருக்கும். அதாவது பொருளானது பெயர்ச்சொல் வடிவிற்கானது என்பது அருகே நின்று தெளிவாக்குவது. ஒலிப்புக்கும் முன்னே இட்டால் (அதுவும் நாம் பெயர்ச்சொல்ல் என்பதைச் சிறிதாகா எழுதிக்காட்டும் பொழுது) அது சிறப்பாகவோ மிகவும் பயனுடையதாகவோ எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் ஒலிப்புக்கும் மேலே இருக்க வேண்டும் என்று நினைத்தால் நானும் உடன்படுகின்றேன். (2) பக்கத்தின் உள்ளே வரும் தலைச்சொல்லை பெரிதாக்கலாம் <big>absolute line</big> என்று இட்டு. (பவுல், ஏன் மொழிபெயர்ப்பு என்பது வேண்டும் என்று கூறுகின்றீர்கள் என்று விளங்கவில்லை; ஆங்கிலச்சொற்களுக்குத் தமிழில் பொருள் தருவதும், ஈடான சொற்கள் தருவதுமே வேண்டுவன அல்லவா? தமிழ்ச்சொற்களுக்குத்தானே மொழிபெயர்ப்புகள்?) --செல்வா 21:25, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • பக்க வடிவம் absolute line என்பதுபோல் (மேலே கூறியுள்ள கருத்துகளோடு) இருப்பது உடன்பாடு என்றாலும், பக்கத்தை உருவாக்க சொருகு-வார்ப்புருக்கள் (nested templates) இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அருள்கூர்ந்து எளிமையாக முன்பிருந்த வார்ப்புருக்களையே இட வேண்டுகிறேன்!--செல்வா 21:29, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply
எனக்கும் இவற்றில் absolute line பிடித்திருக்கிறது. செல்வா கூறியபடி, அவர் கூறிய காரணங்களுக்காகவே, பொருளுக்குப் பக்கத்தில் பெயர்ச்சொல், வினைச்சொல் குறிப்புகள் இருத்தலே நலம். பழ.கந்தசாமி 21:37, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply

இறுதியாக ஒரு நிறம் பற்றி ஒரு வினா[தொகு]

 • absolute line என்ற ஆங்கிலக் கூட்டுச்சொற்களுக்கான மாதிரிச்சொல்லில், அனைவரது கருத்துப்படி வார்ப்புருக்களையும், அதற்கு மேலே குறிப்புகளையும் இட்டுவிட்டேன்.கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி.
 • கூகுளில் இந்த வெளிர்நீல நிறப் பட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதால், நமது விக்கியின் நிறமான சாம்பல் நிறத்தினை, கொடி வார்ப்புருவினைத் தவிர பிறவற்றில் இடலாமா? நாம் அதனை கண்டு வடிவமைத்தோம் என்று பிறர் நினையாமல் இருக்க இதனைக் கேட்கிறேன். --த*உழவன் 18:33, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply
நிறத்தைப் பற்றி இப்பொழுது கவலைப்பட வேண்டாம். வார்ப்புருக்கள் தனிசையாக (மாடுலராக) இருந்துவிட்டால், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். வெளிர்நீலமே எனக்குப்பிடித்துள்ளது, போலந்தியத்தில் உள்ளது போன்ற சாம்பலோ தொடர்பான பிற சாம்பல் நிறமோ எடுப்பாக இராது என்பது என் கருத்து. இவை என் தனிப்பட்ட எண்ணங்கள்தாம். எப்படியாயினும், இப்பொழுது நிறத்தைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். இப்பொழுது இருக்கும் வெளிர்நீல நிறத்திலேயே வலையேற்றுவது நன்றாக இருக்கும். --செல்வா 21:35, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply
பளீர் சிவப்பு, பச்சை முதலிய உறுத்தும் நிறங்களைத் தவிர்த்து எந்த நிறமும் எனக்கு உடன்பாடே. பழ.கந்தசாமி 21:40, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply

இரவியின் கருத்துகள்[தொகு]

தனிப்பட்ட வாழ்க்கை மும்முரத்தில், பல முறை நினைத்தும் விக்சனரிப் பக்கம் வர முடியாமல் இருந்நது. தாமதத்துக்குப் பொறுக்கவும். பொதுவாக என் கருத்துகளைச் சொல்கிறேன்.

சுந்தரும் நானும் பதிவேற்றிய வடிவமைப்பு எளிமையாக இருந்தது. பெரும்பாலும் இருவர் மட்டுமே செயற்பட்டதால், கருத்து வேறுபாடின்றி, வடிவமைப்பு பற்றி இந்த அளவு மெனக்கெடாமல் இருக்கிற தகவலைத் தலைப்பிட்டுக் காட்ட வேண்டும் என்ற அளவிலேயே செயல்பட்டோம். ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு நன்கு வளர்ந்த நிறைய விக்சனரிகளோ அகரமுதலிக் கலை, நூல் வடிவமைப்புக் கலை அறிந்தவர்களோ இல்லை. ஆனால், தற்போது தமிழ் விக்சனரி சமூகம் நன்கு வளர்ந்துள்ள நிலையில் இன்னும் ஆயிரக்கணக்கான சொற்களை ஏற்றும் போது எங்களின் முந்தைய வடிவமைப்பச் சீரமைக்க வேண்டிய தேவையை உணர்கிறோம். எனவே, புதிய வடிவம் ஏன் என்ற கேள்விக்கே இடம் இல்லை :)

நம் முன் உள்ள தேவையைப் பின்வருமாறு புரிந்து கொள்கிறேன்:

1. என்னென்ன தகவல்களைத் தர வேண்டும்?

அரசு தந்த அடிப்படைத்தகவல்கள், நாம் வழக்கமாகச் சேர்க்கும் பெயர்ச்சொல்-வினைச்சொல்-ஒலிப்பு போன்ற தகவல்களுக்கு மேலதிகமாக என்னென்ன சேர்க்கலாம்? கொடி, IPA, உசாத்துணை போன்றவை இதில் வரும் எனப் புரிந்து கொள்கிறேன். என்னுடைய கருத்து, இருக்கிற தகவல்களை மட்டும் கூட முதற்கட்டமாக இட்டால் போதுமானதே. இல்லாத தகவல்கள், அவற்றை எப்படி உள்ளிடுவது என்ற யோசனையில் இருக்கிற தகவல்களை உள்ளிடுவதில் தாமதம் வேண்டாம். அப்புறம், தகவலே இல்லாமல் வெறும் வார்ப்புருக் கூடுகளை மட்டும் இட வேண்டாம் (முன்பு, ஒலிப்புக் கோப்புகளுக்கு இவ்வாறு இட்டோம்). இவ்வாறு தகவலே இல்லாமல் ஏகப்பட்ட வார்ப்புருக்களை இட்டால், வீணே பக்க அளவு கூடுவதுடன் நிறைவற்ற தோற்றமும் வரும். தகவல் இல்லாமல் சும்மா பக்கத்தை வளர்த்து வைத்திருப்பது போன்ற எண்ணமும் வரும்.

2. தகவல்களை எப்படி ஒழுங்குபடுத்துவது, அழகூட்டல்?

அகரமுதலியாக்கம், நூலாக்கம் என்பதே ஒரு கலை தான். அந்தத் தேர்ச்சியுடன் நாம் பக்க வண்ணங்களை, வடிவமைப்பை மேம்படுத்திச் செய்ய வேண்டும். அதே வேளை Parkinson's Law of Trivialityவில் வருவது போல் சின்ன விசயங்களில் காலம் கடத்துவதும் வேண்டாம். நீலம், சிகப்பு, pink போன்ற வண்ணங்கள் பொதுவாக இணைய இணைப்புகளில் பயன்படுவதால் இந்த வண்ணங்களைக் குழப்பாமல் பயன்படுத்த வேண்டும்.

dado2 பக்கத்தை எடுத்துக் கொண்டால், முதல்கொடிப்பட்டை, ஒலிப்பு, IPA, தமிழ் எழுத்து ஒலிப்பு உதவி, திரும்பவும் ஒரு கொடி, கோப்புப்படம், பொருள், திரும்ப dado2 , பெயர்ச்சொல் என்ற குறிப்புகளை எல்லாம் தாண்டித் தான் சொல்லின்பொருளுக்கு வர வேண்டி உள்ளது. மாகிர் முன்பு சுட்டிய படி, சாதாரணப் பயனர்கள் விக்சனரிக்கு வருவது பொருள் தேடித் தான். இந்தப் பொருள் எங்கு உள்ளது என்று தேடிக் களைக்கும் அளவுக்கு ஆகி விடக்கூடாது. பழகிய என் கண்களுக்கே சில பக்கங்களில் பொருள் எங்கு உள்ளது என்று தேட வேண்டி உள்ளது. இதனைக் குறையாகச் சொல்லவில்லை. விக்சனரி தொடங்கியதில் இருந்து எல்லா வடிவமைப்புகளிலும் நானும் பங்கு கொண்டுள்ளேன். எனினும், பயன்பாட்டு எளிமை பற்றிய புரிதல் கூடி வருவதால், இது ஒரு முக்கியப் பிரச்சினையாகத தெரிகிறது. dictionary.com போன்ற தளங்களில் meaning என்று தலைப்பிட்டுப் பொருளைத் தரவில்லை. நேரடியாக 1, 2, 3 என்று இட்டு பொருளைத் தந்து விடுகிறார்கள். விக்கிப்பீடியாவில் முன்னுரை, முடிவுரை என்று எழுதாமல் விடுவதையும் ஒப்பு நோக்கலாம். விக்சனரி ஒரு அகரமுதலி என்று புரிந்து தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு பொருளை அறிவது தான் முதல் நோக்கமாக இருக்கும். இதனை முன்னிட்டு, நேரடியாகப் பொருளை எவ்வளவு முன்கூட்டித் தர முடியுமோ தருவது நன்று. மற்ற மொழியியல் நோக்குத் தகவல்கள், meta தகவல்களைக் கீழே தள்ளலாம். தயவு செய்து இதனைக் கருத்தில் கொள்ளவும்.

தனி வாழ்க்கை மும்முரங்கள் மிகவும் அதிகமாக இருப்பதால் அடுத்த சில ஆண்டுகளுக்குக் கூட தமிழ் இணையம் பக்கம் அவ்வளவாக பங்கு கொள்ள முடியாது!. தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்சனரி இரண்டையுமே நன்கு தாங்கிப் பிடித்து வளர்க்கக்கூடிய பலர் இருப்பது கண்டு மகிழ்கிறேன். இத்திட்டங்கள் தொடங்கிப் பல ஆண்டுகள் 1, 10, 100 என்று எண்ணி மெல்லத் தான் வளர்ந்தோம். உலகாளவிய அகரமுதலி, கலைக்களஞ்சியங்கள் கூட ஆண்டுக்கணக்கில் உழைத்தே வெளிவருகின்றன. எனவே, நமது ஒரு சில மாத தாமதத்தைப் பொருட்படுத்தாமல் இன்னும் தேவையான நேரம் எடுத்து, கருத்தொற்றுமையுடன் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டிக் கொள்கிறேன். நன்றி--ரவி 11:42, 16 செப்டெம்பர் 2010 (UTC)Reply

1) தங்களின் கருத்துக்களைக் கண்டேன்.மகிழ்ச்சி. இப்போதைய கையிருப்புக்கு மட்டும் ஏற்ற வடிவமொன்றை நீங்களே முன்மொழிந்தால் நன்றாக இருக்கும்.

தினம் குறைந்தது 50 சொற்களுக்கு ஒலிக்கோப்புகளை உருவாக்கி, அதனை விக்கி ஊடக நடுவத்தில்(commons) இணைக்க முடியும். எனவே, பதிவேற்றத்தில் ஒலிப்புக்கான வார்ப்புரு அவசியம் வேண்டும். இல்லாவிட்டால், அங்கு பதிவேறிய பிறகு இங்கும், அதற்குரிய ஒலிக்கான வார்ப்புருவினை இடும் வேண்டிய வேலைப்பளு உருவாகும். அத்தளத்தில் ஆங்கிலக் கூட்டுச்சொற்களுக்கான ஒலிக்கோப்புகள், பெரும்பாலும் இல்லை எனலாம்.ஏறத்தாழ பதிவேற்றத்தில் 40,000- 50,000சொற்கள் ஆங்கிலக்கூட்டுச் சொற்களே. அதில் ஒரு இடர். அதுபற்றி பேச்சு:absolute line என்பதில் தெரிவித்திருக்கிறேன்.அதற்கு அடுத்துவரும் பொருளை தமிழக அரசே தந்துள்ளது.எனவே, அதுவும் பக்க வடிவில் வேண்டும். இறுதியாக இப்பொழுதுள்ள ஆங்கில ஆதாரங்களுக்கான வார்ப்புருவும் தவிர்க்க முடியாதது. பின் பக்கத்தினை விரிவாக்கும் போது, தேவையான வார்ப்புருக்களை இட்டு பக்கத்தினை விரிவு படுத்தலாம் என்பது எனது எண்ணம்.
 1. ஆங்கிலம் என்பதை குறிக்கும் முதல் மொழிவரி
 2. ஒலிக்கோப்புக்கான வரி
 3. பொருளுக்கான வரி
 4. ஆதாரங்களுக்கான வரி.

எனினும், இப்பொழுதே பிற பக்க வடிவத்திற்கான உட்கூறுகளை இட்டால், அது காண்போரை அதில் தகவல் சேர்க்க தூண்டுகோலாக இருக்கும் என்ற கருத்து அனைவரிடமும்(பவுல், செல்வா, பழ.கந்தசாமி, பெரியண்ணன்,த*உழவன்) இருப்பதால், absolute line என்ற வடிவத்தினை சிறு கருத்து வேறுபாட்டோடு அமைத்துள்ளோம். அதிலுள்ள வார்ப்புருக்கள் மூலம், முன்பு இருந்த சுந்தர் வடிவத்திற்கும் செல்லமுடியும். அந்த மாற்றத்தினை, மேலே 10.2 இல் கூறியுள்ளேன். இதுவே இப்போதைய நிலை. --த*உழவன் 13:01, 16 செப்டெம்பர் 2010 (UTC)Reply

 • த.உழவன், தமிழ் விக்சனரியின் முனைப்பான பங்களிப்பாளர் அளவையும் இலட்சக்கணக்கான பக்கங்களையும் கணக்கில் கொண்டால் ஏகப்பட்ட வெற்று வார்ப்புருக்கள் தகவல் நிரம்பாமல் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க நேரிடும். இது நல்லதல்ல. பயனர் சமூகம் இன்னும் வளர்ந்த பிறகு, தேவைப்படும் ஒவ்வொரு தகவலையும் முழு மூச்சாக அனைத்துப் பக்கங்களிலும் ஏற்றலாம். நீங்கள் கூறிப்பிட்ட ஒலிப்புக் கோப்புப் பதிவேற்றத்தைக் கூட இவ்வாறு செய்யலாம். ஒலிப்புக் கோப்புகள் போன்றவை அனைத்து உலக மொழி விக்சனரிகளுக்கும் பயன்படக்கூடியவை. எனவே விக்கிமீடியா காமன்சில் இதனை ஒரு பன்னாட்டுத் திட்டமாகக் கூட முன்னெடுக்கலாம். இன்னும் தேர்ந்த ஆங்கில ஒலிப்பாளர்களும், பன்னாட்டுக் குரல்கள் - ஒலிப்பு முறைகள் பதிவாக ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். வீட்டில் இணைய இணைப்பு இல்லை. வாரம் ஒரு முறையேனும் விக்சனரி பக்கம் வர முயல்வேன். தற்போதைய நிலையில் என்னால் எந்த தமிழ் / பொதுநலத் திட்டத்திலும் ஈடுபட இயலாது. கருத்து கூறுவது எளிது. ஆனால், செயற்படுத்துவது மிகக் கடினம் என்பதாலேயே பொதுவாக சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு ஓய்வில் செல்ல விரும்பினேன். தற்போது விக்சனரியில் முனைப்பாக இருக்கும் பலரும் கூடி முடிவெடுத்துச் செயற்படுத்துங்கள். நன்றி--ரவி 13:29, 16 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • மேலதிகத் தகவல் இணைக்கும் போது மட்டும், அதற்குத் தேவையான வார்ப்புருக்களை இடும் வழக்கத்தையே பிறமொழி விக்சனரிகளும் பின்பற்றுகின்றன. பல தொழில் நுட்பங்களைக் கையாளும், ஆங்கில விக்சனரியிலும் அவ்வாறே பின்பற்றப்படுகிறது. அதன்படி இப்பொழுது பொருள் என்பது மட்டுமே தேவை.பிற விளக்கம், பயன்பாடு போன்றவை இப்பொழுதே இணைக்கத்தேவையில்லை என்றே நானும் எண்ணுகிறேன். புதுப்பங்களிப்பாளருக்கு சில எடுத்துக்காட்டுகள் மூலம் அவர்களின் வரவேற்புரையிலேயே, பிற இடுகைகளை இடுதல் பற்றி விளக்குதல் நல்லபலனைத் தரும். வெறும் வெற்று வார்ப்புருகளை இப்பொழுதே இடுதல், தமிழ்விக்சனரியில் நிறைய எழுதப்படாமல் இருக்கிறது என்பது ஒரு குறையாக வாய்ப்புண்டு. மற்றொன்று குறைவான நேரத்தில், விக்சனரியில் பங்களிக்கலாம் என்ற எண்ணமும் உருவாக வாய்ப்புண்டு. அனைத்து வார்ப்புருக்களையும் இடுவதால், ஒரு சொல்லுக்கு பங்களிக்க அதிக நேரம் தேவை என்ற எண்ணம் பரவலாகும்.குறைவான நேரத்தில் செயல்பட பல பங்களிப்பாளரை அழைக்க, பக்கவடிவத்தின் ஆரம்பம் எளிமையாக இருக்கவேண்டுமென்றே நானும் எண்ணுகிறேன்.(எ. கா.) திருக்குறள் தள முத்து[1] என்பவரிடம் நம் தளத்தைப்பற்றி நான் அறிமுகம் செய்த போது, அவரது நேரமின்மையை என்னால் உணரமுடிந்தது. எனினும், அவர் நமது தொடர் பங்களிப்பாளர். அவரது இடுகைகள் எந்த படிவத்தினையும் பெரும்பாலும் பெற்றிருக்காது.--த*உழவன் 06:46, 18 செப்டெம்பர் 2010 (UTC)Reply

2)

இரவி, பல பணியழுத்தங்கள் இருந்தபொழுதும் நீங்கள் இங்கு வந்து கருத்தளித்தைப் பாராட்டுகிறேன், ஆனால் உங்கள் கருத்துகளில் பல எனக்கு ஏற்பு இல்லை. முதற்கண், ஒருவர் ஒரு வேற்றுமொழிச்சொல்லை எதிர்கொள்ளும் பொழுது, முதலில் அதனை எப்படி ஒலிக்க வேண்டும் என்று தெரிய வேண்டுவது தேவை (பல நல்ல அகரமுதலிகள் இதனைத் தருகின்றன. இங்கே எழுத்தாலும் ஒலிக்கோப்பாகவும் (கிடைக்கும் இடங்களில்) தர முற்படுவது தவறல்ல, சிறப்பாகும்). மொழிப்பட்டை என்பது எந்த மொழி என்பதைக் காட்ட. எனவே அதுவும் தேவையே (பட்டை இல்லாமல், கொடி இல்லாமல் இருக்கலாம், ஆனால் அப்படி இருப்பதால், அது எந்த மொழியில் உள்ளது என்னும் குறிப்பா அல்லது சொற்பொருளா என்பது குழப்பம் தரும் மாறும் உள்ளது. இது பற்றி பலமுறை உரையாடியுள்ளோம்). எனவே முதலில் வருவது பொருள் என்னும் பட்டையே. எனவே இரவின் கருத்துடன் ஒப்ப இயல்வில்லை. அவர் கூறும் "அலுப்பு" எங்கிருந்து வருகின்றது என்று புரியவில்லை? ஒலிப்பைச் சுட்டவில்லை எனில் முதலிலேயே பொருள் வந்துவிடும். ஆங்கில விக்கி போன்றவற்றில் சொற்பிறப்பைக் கூட முதலில் தருகின்றனர். இது தேவை இல்லை என்பது நம் கணிப்பு (இதனைப் பின்னே விளக்கத்தின் ஒரு கூறாகவோ, தனியாகவோ, ஆனால் பின்னே தரலாம்). இரவி கூறிய "இந்தப் பொருள் எங்கு உள்ளது என்று தேடிக் களைக்கும் அளவுக்கு ஆகி விடக்கூடாது. பழகிய என் கண்களுக்கே சில பக்கங்களில் பொருள் எங்கு உள்ளது என்று தேட வேண்டி உள்ளது. " என்னும் தொடர் எனக்கு வியப்பை அளித்தது. தேடிக் களைத்துவிடும் படியாகவா உள்ளது?!! ஒலிப்புக்கு அடுத்து உடனே பொருள் வருவதைத் தேடிக் கண்டுபிடித்துக் களைக்க வேண்டுமா? இரவி, சற்று பொருந்தும் படி கூறுங்கள்!! அடுத்து இரவி கூறுவது " dictionary.com போன்ற தளங்களில் meaning என்று தலைப்பிட்டுப் பொருளைத் தரவில்லை. ". உண்மை. பல அகரமுதலிகள் தமக்கென ஒரு வடிவ, ஒழுக்க, முறைகள் கொண்டுள்ளனர் (சாய்வெழுத்து எங்கே, என்ன பிறைக்குறிகள் தருவது போன்ற சீரான ஒழுக்க முறைகளுடன்.. ஆகவே அவர்கள் தனியாக பொருள் என்றுகூற வேண்டியதில்லை. பலர் தொகுக்கும் விக்கி அகரமுதலியில் உள்பகுப்புகள் இருப்பது நல்லது, மேலும் பொதுவாக ஓர் அகரமுதலியில் இல்லாத அளவுக்கு இங்கே படங்களும், பன் மொழி பெயர்ப்புகளும், சான்றுகோள்களும், எதிர்ச்சொற்கள், இணைப்பொருள் சொற்கள் என பல சேர்க்க வழி உள்ளது. எனவே தனித்தனி பகுப்பாக இருந்தால் எளிதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்பது என் கருத்து. கடைசியாக இரவி கூறிய மற்றொரு கருத்தும் எனக்கு உடன்பாடு இல்லை. அதாவது இப்பொழுது இல்லாத உட்கூறுகளைச் சேர்க்க வேண்டாம் என்று இரவி கூறுகிறார். அவை ஏன் இருப்பது நல்லது என்றால், விக்கி என்பது வளரும் ஒன்று. ஆகவே இப்பகுதிகளை நிரப்பக்கூடியவர்களுக்கு அது உதவியாக அமையும். அவரவர் வெவ்வேறு விதமாக ஆக்குவதற்கு மாறாக ஒரே சீராக இருக்குமாறு அமைய அவை உதவும். அவற்றை ஒவ்வொருமுறையும் சேர்க்கத் தேவை இராது. --செல்வா 13:33, 16 செப்டெம்பர் 2010 (UTC)Reply

3)

இரவி, உங்களின் பல்லாண்டு கால விக்கிப்பீடியா உழைப்புக்கு மிக்க நன்றி, நேரம் கிடைக்கும்போது இங்கு வரவும். கருத்துகள் தரவும்.

விக்சனரியில் பொருள் அதிகம் கீழே சென்றுவிடக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டே செயல்பட்டுவருகிறோம்/செயல்படுவோம். அதே சமயத்தில் புதிய வடிவமைப்பில் பயன்பாடு, ஒலிப்பு, விளக்கம் போன்ற அடிப்படைக் கூறுகள் இருக்குமாறும் பார்த்துக்கொண்டால்தான் விக்சனரிக்கென்று ஒரு தனித்தன்மை ஏற்படும். அழகியல் கூறுகள் ஒரு கண்ணுக்கிசைவான பக்கங்களைத் தருவதற்காக. அதனால், இவையனைத்தும் தேவை என்பதே எனது கருத்தும், பழ.கந்தசாமி 15:05, 16 செப்டெம்பர் 2010 (UTC)Reply

4) "மெதுவாகச் செல்வோம், அவசரப்பட வேண்டாம்" என்று இரவி அவர்கள் அனுபவத்திலிருந்து கூறுவது என் காதுகளில் விழுகிறது. அவருடைய கருத்தை நான் மறுக்கவில்லை. ஆயினும், த*உழவன், பழ. கந்தசாமி, திருச்சி பெரியண்ணண், செல்வா போன்றோர் சில புதுமுயற்சிகளை தமிழ் விக்சனரி நடைமுறைப்படுத்துவது சிறப்பு என்று சொல்வதையும் என்னால் கேட்க முடிகிறது. இரவி குறிப்பிடுகின்ற முக்கிய தடைகள் இரண்டு: இலட்சக் கணக்கில் பக்கங்கள் வெறும் தலைப்போடு பல்லாண்டுகளாகக் கிடக்கும் என்பது ஒன்று. பயனர் எண்ணிக்கை மிகும்போது, ஒலிப்பு, மொழிபெயர்ப்பு போன்ற மெருகூட்டல்களைச் செய்யலாம் அல்லது பொது முயற்சியாக நாம் பிற மொழி விக்கிகளோடு ஒத்துழைக்கலாம் (எதிர்காலத்தில்) என்பது மற்றொன்று. ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றிரண்டு பட்டைகள் உள்ளீடு இல்லாமல் கிடந்துவிட்டால் பெரிய இழப்பு இல்லை என்பது என் கருத்து. வெற்றிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்பது என் உறுதியான நம்பிக்கை. அவ்வாறு நிரப்பப்படாமல், பார்வைக்கு அழகின்றி, பயனரையும் அச்சுறுத்தும் நிலை ஏற்பட்டால் அதை உணரப்போகின்ற விக்கியர் அந்நிலையைச் சரிசெய்வார்கள் என்பதும் எனது நம்பிக்கை. ஆனால், உறுதியான, நிலைத்துநிற்கின்ற அடித்தளம் இடுவது நம் பொறுப்பு. அதை நாம் இன்றே, இப்போதே செய்வதுதான் முறை. அத்தகைய அடித்தளம் சிறிது விஞ்சிய அளவு போனாலும், குறையில்லாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வோம்.

ஆக, இரவியின் கவன ஈர்ப்புக்கு மதிப்புக்கொடுக்கும் அதே நேரத்தில், புது முயற்சிகளையும், எதிர்கால வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு செயல்படுவோம். வாழ்த்துகள்!--பவுல்-Paul 03:34, 17 செப்டெம்பர் 2010 (UTC)Reply

 • செல்வா, பவுல், கந்தசாமி, த. உழவன் - எனது கருத்துகளைப் படித்துப் பொறுமையாக பதில் தந்தமைக்கு நன்றி. இது தான் சரி, தவறு என்று ஏதுமில்லை. ஒரு அகரமுதலிக்கு உரிய தகவல்களை ஒழுங்குபடுத்தித் தர வேண்டும். அதே வேளை, இணையத்தில் மக்கள் வாசிக்கும் பழக்கம், எதைத் தேடுகிறார்களோ அதை முதலில் தருவது என்னும் அடிப்படையிலும் பக்க வடிவமைப்பு இருக்க வேண்டும். இணையப் பக்கங்களை மக்கள் வாசிப்பது குறைவு. முதலில் ஒரு நோட்டமே இடுவார்கள். ஒரு அகரமுதலிக்கு வருபவர்கள் பொருளையே முதலில் தேடுவார்கள் என்பது வெளிப்படை. எனவே, முதல் நோட்டத்திலேயே பொருளை இலகுவாக கண்டு கொள்ளுமாறு இருத்தல் நலம். பொருளை இயன்ற அளவு மேலே தருவது தேடுபொறிகளில் இருந்த நோட்டம் விடுபவர்களுக்கும் சாதகமாக இருக்கும். (விக்கிப்பிடீயா கட்டுரைகளில் அறிமுக உரையை கூகுள் பக்கத்தில் இருந்தே பார்த்துப் புரிந்து கொள்வது போல்..)

செல்வா, ஒலிப்பு குறித்த தகவல்கள் முக்கியம் தான். அதனை முதலில் தராமல் பொருளுக்கு அடுத்துத் தந்தால், தளத்தின் பயன்பாட்டு எளிமை கூடும் என்று கருதுகிறேன். நீங்கள் கூறும் modular வடிவமைப்பில் உடன்பாடு தான். அவற்றின் வரிசையை மாற்றுவதில் தவறில்லையே?

வடிவமைப்பு, அழகூட்டம், பயன்பாட்டு எளிமை என்பவை அகவயமானவை. இயன்ற அளவு பலரின் அகவயமான கருத்துகளை அலசிப் பார்த்து புறவயமான தரவு அடிப்படையில் செயற்பட வேண்டும். பல விதமான கருத்துகளையும் சீர் தூக்கிப் பார்த்துத் தேவையானவற்றைத் தாராளமாகச் செயற்படுத்தலாம். பொறுமையாகப் போகலாம் என்று கூறவில்லை. விக்சனரி போன்ற மிகப் பெரிய திட்டங்கள் பத்தாண்டுகள் கடந்த நிற்கவல்லவை. எனவே, காலம் கடக்கிறதே என்று சோர்வடையாமல் உற்சாகமாகப் பணியாற்றலாம். நாம் எடுத்துக் கொள்ளும் காலம் நியாயமானதே.--ரவி 06:38, 17 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • தேடுபொறிகளுக்கேற்ற வடிவமைப்ப்பு என்ற அடிப்படையில் கருத்திட, நீங்கள் 2006இல் உருவாக்கிய பார் சொல்லை எடுத்துக்கொண்டேன். கூகுளில் பார் என்று மட்டும் தேடினால், அது த.விக்கிப்பீடியா கட்டுரையின் முதல்வரிகளைக் காட்டுகிறது. அத்தேடுபொறி சாளரத்தில் முன்னொட்டாக அகரமுதலி அல்லது அகராதி என்று எழுதி பார் என்ற சொல்லினை இட்டால், கூகுள் நமது விக்சனரியின் பார் சொல்லைத் தேடித்தருகிறது. மற்ற இணைய அகரமுதலிகளை காட்டுவதில்லை என்பது மகிழ்வாக இருக்கிறது. யாகூவில் சிறுவேறுபாட்டுடன் தமிழ்விக்சனரித் தெரிகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொன்று யாதெனில், தமிழ்விக்சனரியின் பார் சொல்லின் முதல்வரிகளைக் காட்டுவதில்லை என்பதே. சுந்தர், கணேசு, மாகிர் போன்ற நுட்பவியலாளரே வடிவமைப்பில் இறுதி முடிவு செய்தால் நன்றாக இருக்கும். விக்சனரிதிட்டத்தின் இந்திய மொழிகளில், தமிழ் முதலாவதாக இருக்கிறது. வடிவமைப்பிலும் பிற இந்திய மொழிகளுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருப்பின், அது நம் அனைவருக்கும் பேரானந்தம் அல்லவா? இப்போதைய தேவையை, முன்பு விட மேம்படுத்துவோம். பின்னர், அதனை இன்னும் மேம்படுத்துவோம். நம்விக்சனரியின் எதிர்காலம் அதன் வடிவமைப்பில் இருக்கிறது என்பதனை விட, அதன் உள்ளீடுகளைப் பொறுத்தே இருக்கிறது. ஒலிக்கோப்புகள் ஏறத்தாழ இன்னும் ஒரு இலட்சம் இருக்கிறது. படங்கள் இருக்கிறது. தொடர்புடைய சொற்களை உருவாக்க வேண்டும். எல்லாவற்றினையும் விட கைவசம் இருக்கும், ஒரு இலட்சம் சொற்களை இனியும் பதிவேற்ற காலதாமதம் செய்வது நமக்கு சிறப்பா? நம் ஒவ்வோர் மனதிலும் கருத்துக்களும், எண்ணங்களும் காலத்திற்கு ஏற்ப பல்வேறு காரணங்களால் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். எனவே, அருள்கூர்ந்து முடிவு எடுப்பீர். நன்றி. வணக்கம்--த*உழவன் 07:14, 18 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 • இரவி, கேம்பிரிட்சு அகரமுதலி, நீங்கள் சுட்டிய dictionary.com, ஆக்ஃசுபோர்டு என்று ஏறத்தாழ எந்த அகரமுதலியை எடுத்துக்க்கொண்டாலும் ஒலிப்பை முதலில் தருகின்றார்கள். இங்கு பலரும் பொருளுக்கு அடுத்ததாக ஒலிப்பு வந்தால் நன்றாக் இருக்கும் என்று முடிவெடுத்தால், விளக்கதின் ஒரு பகுதியாகவோ, தனியாகவோ பொருளுக்கு அடுத்தாற்போலக் கொடுக்கலாம். முதலில் ஒரு வரியில் ஒலிப்பு வருவதே சிறந்ததென்பது என் தனிக்கருத்து. ஆனால் 2 வரியிலோ 3 வரியிலோ ஒலிப்பைத் தருவது பொருளுக்கு முன் இடையூறாக உள்ளது எனில் பொருளுக்கு அடுத்துத் தரலாம். முதலில் ஒலிப்பைத் தருவதே சரியானதென்பது என் தனிக்கருத்து (மற்ற நல்ல அகராதிகள் எல்லாம் அப்படித்தான் தருகின்றன). இதனையும் பிற கருத்துகளையும் எல்லோரும் சீர்தூக்கிப் பார்த்து இணக்க முடிவெடுக்க வேண்டும் என்பதே என் விருப்பமும். --செல்வா 02:28, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

சுந்தரின் கருத்துகள்[தொகு]

பல நாட்களாக நம் தளத்துக்கு வர இயலாததால் என்னால் இயன்ற அளவு மட்டும் உரையாடல்களைப் படித்துப் பார்த்தேன். மனதில் பட்டதைச் சொல்கிறேன். யாரும் தவறாகக் கொள்ள வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். (பொதுவாக நான் இப்படியான விளக்கத்தைத் தரத் தேவை இருந்ததில்லை என்றாலும் இங்கு வழக்கத்தினைக் காட்டிலும் காரமான, நபர்களின் நிலைப்பாடு என்ற அளவிற்கு உரையாடல் சென்றுள்ளதைக் கவலையுடன் பார்க்கிறேன்.)

நாம் உருவாக்கும் இப்பக்கங்களுக்கு மூன்று முனைகளிலான பயன்பாட்டை எதிர்பார்க்கலாம். அவை முன்னுரிமை வரிசைப்படி பின்வருமாறு.

 1. பக்கங்களைப் படித்துப் பொருளையும் கூடுதல் தகவல்களையும் பெறும் மக்களின் பார்வைக்கு
 2. பக்கங்களில் பிழை திருத்தத்துக்கோ, வேறு தகவல்களைச் சேர்ப்பதற்காகவோ தொகுக்க முற்படும் வழமையான அல்லது புதிய பயனர்களின் தொகுப்பு முனையம்
 3. தேடுபொறிகளோ வேறு தகவல்பெறுநுட்பத் தானியங்கிகளோ பக்கங்களைப் பகுத்தல்

முதல் பயன்பாட்டுக்கான தேவை ஒன்றே: தேடிவரும் தகவல்களைத் தெளிவாகச் சொல்லுதல்.

இரண்டாவதுக்கும் ஓரளவுக்கு மூன்றாவதுக்குமான தேவை எளிய விக்கி நிரல். மூன்றாவதுக்கான சிறப்புத் தேவை செல்வா குறிப்பிட்டது போல் ஒரே அச்சில் அமைந்த பக்கங்கள்.

நாம் அனைவரும் இந்த அடிப்படையில் இதை அணுக வேண்டும் என விரும்புகிறேன்.

அடுத்தது செல்வா குறிப்பிட்டபடி, கருத்துக்கணிப்பு எவை எவை இருக்க வேண்டும், எவ்வரிசையில் என்ற அளவில் இருக்கட்டும். வார்ப்புருக்களில் மாற்றம் செய்வதன் வழியாக வடிவமைப்பைப் பின்னால் மாற்றிக் கொள்ளலாம். இந்நிலையில்,

 • பொருள், ஒலிப்பு, சொல் பிறப்பு ஆகிய தகவல்கள் முதன்மையானவை.
 • ஒரே சொல் பல மொழிகளில் வரக்கூடிய சூழல் உள்ளதால் மொழியின் பெயரும் கொடியும் பயன் தருகின்றன.
 • படங்களும் பிற ஊடகங்களும் நம் தளத்தின் சிறப்புகள். அவற்றைத் தயங்காமல் பயன்படுத்த வேண்டும்.

வரிசையிலும் எடுப்பிலும் முதல் வரி முகன்மை பெறுதல் சரியாக இருக்கும். அதே வேளையில் பொருளும் ஒலிப்பும் சற்றேறக்குறைய இரு நெட்டுவரிசையில் அடங்கக் கூடியவை. (திரையில் கண்கள் பாயும் பகுதிகள் அடிப்படையிலும் கூட அது சரியாக இருக்கும்.) தொகுத்தல் பக்கத்தில் கசகசவென்று இல்லாமல் இருக்க வேண்டுமானால் சான்றுகளை இரு நெடுவரிசைகளில் தரும் வார்ப்புருவான w:en:Template:Col-begin என்பதைப் பயன்படுத்தலாம்.

அடுத்தது படங்கள் முடிந்த வரை மேலிருந்து கீழாக வருவது நல்லது. சில இடங்களில் இரு படங்களை ஒரே வரிசையில் அருகருகே காட்ட வேண்டுமானால் w:பேட்ஃசின் போலியொப்புரு கட்டுரையில் உள்ள வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். (இது பின்னால் தேவைப்படுவது, தானியங்கி வழியாகப் படங்கள் ஏற்றப்படுமா தெரியவில்லை.)

கொடிகள் தேவை என்பதை உணர்கிறேன், ஆனால் அவற்றை வலது புறத்தில் ஓரத்தில் தந்து இடப்புறம் மொழிப்பெயரைத் தருதல் நல்லது. கண் பார்வைக்குறைவு உடையவர்களுக்கான மென்பொருட்கள் பெரும்பாலும் உரைகளை நம்பியே செயல்படுகின்றன. (accessibility வழிகாட்டல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.)

கூடுதலாக ஒரு விண்ணப்பம். விக்கியில் கட்டுரைகள் உள்ள இடத்தில் அவற்றுக்கான இணைப்பைத் தரும் வசதியையும் செய்து தர வேண்டும்.

இவற்றை உங்களில் ஒருவராகவே முன்வைக்கிறேன். ஏற்கனவே தானியங்கித் திட்டச் செயல்பாட்டில் ஈடுபட்டதற்காக முன்னுரிமை எதுவும் தேவையில்லை. இந்தக் கருத்துக்களைப் பெரும்பாலானோர் ஏற்றால் இங்கு ஏற்கனவே தந்துள்ள மாதிரிகளை ஒட்டி வடிவமைத்துத் தர முயல்கிறேன். -- Sundar 10:27, 18 செப்டெம்பர் 2010 (UTC)Reply

1)மிக்க நன்றி சுந்தர். மிக்க ஆழமான உங்களது நடுநிலையானக் கருத்தாடல், வழமை போல, என்னைக் கற்கத் தூண்டுகிறது. absolute line என்ற வடிவமைப்பில் உள்ளவைகளை, சிற்சில கருத்து வேறுபாட்டுடன் இதுவரை உரையாடிவர் (பவுல், கந்தசாமி, செல்வா, பெரியண்ணன், த*உழவன்) ஏற்றுள்ளனர். நீங்கள் அதன் வடிவமைப்பினையும், வார்ப்புருக்களையும்குறிப்பாக மேலே10.3லுள்ள 1.1) கூறிய விவரங்களையும் ஆய்ந்து, நீங்கள் முன்வைத்தக் கருத்துக்களுடன் வடிவமைத்திடக் கேட்டுக்கொள்கிறேன். --த*உழவன் 15:37, 18 செப்டெம்பர் 2010 (UTC)Reply

 • நான் இன்னும் முழுமையாக உரையாடல்களைப் படித்து முடிக்க இயலவில்லை, த*உழவன். இருந்தாலும் இப்போது தொடங்கியுள்ள கருத்துக் கணிப்பு முடிய முடிய படிப்படியாக வடிவமைப்பை மேற்கொள்ளலாமென நினைக்கிறேன். -- Sundar 05:52, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

2)சுந்தர், நீங்கள் பல பயனுடைய தொடுப்புகளைக் கொடுத்துள்ளீர்கள். மே மாதத்தில் இருந்து இதனைப் பற்றி உரையாடி வருகின்றோம். பற்பல (வெவ்வேறு) பக்கங்களில் உரையாடியதாலும், பல உரையாடல்கள் இடம் மாறி இருப்பதாலும், காலவரிசைப்படி கருத்துகள் பதிவாகாமல் இருப்பதாலும் படித்துப் புரிந்துகொள்வது கடினம். 2-3 நாட்களில் அல்லது 5-6 நாட்களில் இணக்க முடிவு ஏற்படக்கூடிய ஒன்று 4.5 மாதங்கள் ஆகியும், மிக எளிய முடிவுகள் கூட எடுக்க இயலாதவாறு கருத்தாடிக் கொண்டிருக்கின்றோம். நீங்களும், இரவியும் இப்பொழுது கருத்து தெரிவித்தமைக்கு நன்றி. தனிசையாக (மாடுலராக) வடிவமைப்பது நல்லது என்பதற்குப் போதிய வரவேற்பு உள்ளது என்பது தெரிகின்றது. அடுத்தது அது எப்படி எந்த வரிசையில் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் பலருக்கும் பல கருத்துகள் உள்ளன. dado2 என்னும் மாதிரி பக்க வடிவமைப்புக்கு தகவல் உழவனைத் தவிர மற்றவர்கள் (பழ.கந்தசாமி, பவுல், திருச்சி பெரியண்னன், செல்வா) ஏற்பு தெரிவித்தனர். மாகிரும் நீங்களும் கொடி வலப்புறம் இருக்கலாம் என்கின்றீர்கள். accessibility பற்றிய கருத்தையும் முன் வைத்திருக்கின்றீர்கள். இந்த accessibility-யைக் கருத்தில் கொண்டாலும், கொடி இடப்புறம் இருப்பதால் பெரிய இடர் நேராது என்பது என் கருத்து. சொல் வடிவில் உள்ள மொழிப்பெயர் நடுவாக இருப்பது சிறப்பு என்றே நினைக்கின்றேன். ஆனால் பெரும்பாலானோர் வேறுவிதமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் அப்படியே செய்வோம். பக்கத்துக்கான விக்கி நிரல்கள் சொருகலான வார்ப்புருக்களாக இல்லாமல் (not nested templates) இருப்பது நல்லதென்பது என் தனிக்கருத்து. நற்கீரன் div வரக்கூடாது என்கிறார். இதனையும் கருத்தில் கொண்டு தனிசையான (மாடுலரான) வார்ப்புருக்கள் உருவாக்கி சேர்க்கவேண்டும். ஒலிப்பு என்பதற்குத் தனி பட்டை வேண்டியதில்லை என்பதும் என் தனிக் கருத்து (இயன்றளவு ஒரே வரியில் அமைவதும் முயன்று பார்க்க வேண்டிய ஒன்று). இவை எல்லாவற்றையும் பற்றி 2-3 நாட்களில் முடிவெடுக்க இயலும். இடம் மாறி திசை மாறி கருத்துகள் சிதறாமல் இருந்தால். --செல்வா 03:23, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

 • முன்னமே கருத்திட இயலாமைக்கும் தொடர்ந்து இவ்வுரையாடலில் கொள்ள இயலாமல் இருந்ததற்கும் வருந்துகிறேன், செல்வா. நீங்கள் குறிப்பிட்டது போல், நேரடியாகப் பயனடிப்படையிலான இவ்வுரையாடல் இவ்வளவு நீளமான சிக்கலான உரையாடலாய் இருந்திருக்க வேண்டியதில்லை. இப்போது, ஓரளவு இணக்கம் ஏற்பட்டுள்ளது போலத் தென்படுகிறது. accessibility-க்கான தமிழ் மென்பொருட்கள் இன்னும் வெகுவாக வளரவில்லை என்றாலும் தொலைநோக்கில் மட்டும் பார்க்கலாம். அதிலும் இடப்புறத்துக்கு வலப்புறத்துக்குமான வேறுபாட்டைக் காட்டிலும் alt-text என்ன என்பது முக்கியம். div-ஐத் தவிரக்க வேண்டும் என்பதிலும் சிக்கலான சொருகலான வார்ப்புருக்களைத் தவிர்க்க வேண்டும் என்பதிலும் ஒப்புகிறேன். ஒலிப்பு முதலாவதாக வருவதில் எனக்குப் பெரிய மாற்றுக் கருத்து இல்லாவிட்டாலும் பல ஒலிக்கோப்புகள் இல்லாத சூழலில் பயனைக் கருத வேண்டியுள்ளது. ஆனால் ஒரே வரியில் தர இயலுமானால் மிக நன்று. தனிசையாக வடிவமைப்பது பற்றி ஒப்புதல் இருப்பதால், அடுத்த கட்டத்துக்கு நகரலாம் என்பதை ஏற்கிறேன். வரிசையைத் தேர்வு செய்வோம். பின் ஒரு வடிவமைப்பை இறுதி செய்துப் பதிவேற்றத்தைத் தொடரலாம். ஒருவேளை பின்னால் மாற்ற வேண்டுமானாலும் கூட பெரிய சிக்கலில்லை. அதுதானே விக்கியின் அடிப்படை. :) -- Sundar 03:41, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

நடப்பு நிலை என்ன?[தொகு]

சொற்களைப் பதிவேற்றுவதில் இப்பொழுது நடப்பு நிலை என்ன என்று விளங்கவில்லை? யாரேனும் நிலைமையை விளக்கினால் நன்று. தனிசையாக (மாடுலராக) வடிவமைப்பதில் இணக்கம் உள்ளது. மாற்றுக்கருத்துகள் ஏதும் வலுவாக இல்லை. அடுத்து ஒரு கருத்துக் கணிப்பு நடத்த வேண்டுமா என்று தெரியவில்லை. மேலே சுந்தர் கூறியவாறு அடுத்தக் கட்டத்துக்கு நகருவோமா? dado2 என்பதில் உள்ளது போல வடிவில் சொற்களை ஏற்றலாமா? அதில் என்னென்ன மாற்றங்கள் செய்தல் வேண்டும்? பல கேள்விகளுக்கு இன்னமும் மறுமொழிகள் இல்லை. (1) வார்ப்புருக்களை சொருகலாக (nested templates) இடவேண்டுமா? (வேண்டாம் என்பது என் கருத்து, மேலே சுந்தரும் ஒப்புகின்றார்). (2) படங்களுக்கு எளிமையாய், வழக்கமான முறையில் நிரல் இடுவதே மேல் அல்லவா? (வார்ப்புருக்கள் இல்லாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து). இவை தவிர (1) ஒலிப்புக்கு வெற்றாக இருந்தாலும் இப்போதைக்கு ஒரு பிரிவு இருக்கட்டுமா வேண்டாமா (சுந்தர் கூறியவாறு ஒரே வரியில் இடலாமா? என் விருப்பும் இதுவே- ஒரே வரியில் இடுதல்). இவற்றை எல்லாம் எப்பொழுது எப்படி முடிவு செய்து, த.இ.ப (இப்பொழுது த.இ.க) சொற்கள் ஏற்றம் நிகழவுள்ளது என்று அறியத் தாருங்கள். --செல்வா 20:57, 24 செப்டெம்பர் 2010 (UTC)Reply

 • dado2-வில் உள்ளவாறே பதிவு செய்துவிடலாம் என்பது என் கருத்து. இங்கு அடிக்கடி வரும் பலரும் நம் பக்கவடிவ உரையாடல்களைப் பார்த்துக் கருத்துகள் தெரிவித்துவிட்டனர். அக்கருத்துகளின் பெரும்பாலான அடிப்படைக் கூறுகள் அனைத்தும் dado2-வில் உள்ளதுபோலவே எனக்குப் படுகிறது. பழ.கந்தசாமி 21:21, 24 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • ஒலிக்கோப்புகளுக்கான வரி இருத்தல் நலம். ஏனெனில், இங்குள்ள அனைத்து ஒலிக்கோப்புகளும், விக்கி ஊடக நடுவத்திலிருந்தே இணைப்பினைப் பெறுகிறது. அங்கு உருவாக்கப்படும் பொழுது, இங்கு உடனடியாகத் தெரிவதற்கு வாய்ப்பில்லை என்பதால் முன்பு போல, வெற்று இணைப்பாக இருப்பினும் பதிவேற்றத்தில் இருப்பது நன்று. இதன் மூலம் ஒலிக்கோப்புகளை எளிமையாக உருவாக்கலாம். அங்கும் தானியக்கமாக, ஒலிக்கோப்புகளை பதிவேற்றிச் சோதிக்கிறேன். அதில் வரும் அனுபவங்களைத் தேவைப்படின் சொல்கிறேன்.(எ. கா.) archetypal criticism என்பதற்கு அங்கு ஒலிக்கோப்பு உள்ளது. ஆனால், இங்கு கோப்பு இல்லை என்கிறது. தொகுக்கத் துவங்கும் போது, கோப்புத் தெரிகிறது. எனக்கு ஏன் என்று புரியவில்லை.--த*உழவன் 01:27, 25 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 • ஒருசில முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்று நானும் காத்திருக்கின்றேன். மேலே செல்வா, பழ. கந்தசாமி, த*உழவன் கூறுவதை அடிப்படையாகக் கொண்டு ஒருசில கேள்விகளை உருவாக்கிக் கருத்துக் கணிப்பு நடத்தினால் பயனுள்ளதாய் இருக்கும் என்று நினைக்கிறேன். --பவுல்-Paul 02:19, 25 செப்டெம்பர் 2010 (UTC)Reply
 • செல்வா, படங்களுக்கு எளிமையாய் விக்கிநிரல் இடுவதுதான் சரி. அரிதாக எங்கேனும் இரு படங்களை ஒப்பிட்டுக் காட்ட வேண்டிய தேவை இருக்குமாயின் அங்கு மட்டும் விக்கிப்பீடியாவில் உள்ள வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். dado2 வடிவமைப்பு நன்றாகத்தான் உள்ளது. இன்னும் எஞ்சியுள்ள கேள்விகளை மட்டும் முனவையுங்கள், விரைவில் முடிவெடுத்து நகரலாம்.
 • த*உழவன், ஒலிப்புக்கென தனி வரி இருப்பது நல்லதுதான். இங்கு குறிப்பிடுவது ஒலிப்பையும் பொருளையும் ஒரே வரியில் தர வேண்டும் என்பது அல்ல. மாறாக, ஒலிப்புப் பகுதி இரு வரிகளில் வராமல் ஒரே வரியில் வரலாம் என்பதே. இதில் உங்களுக்கும் உடன்பாடு இருக்கும் என நம்புகிறேன். அப்புறம், archetypal criticism கட்டுரையில் ஒலிக்கோப்பு எனக்குச் சரியாகத் தெரிகிறதே? -- Sundar

02:10, 26 செப்டெம்பர் 2010 (UTC)

 • சுந்தர்! உங்களுடைய ஆழ்ந்த விக்கிநிரல் அனுபவத்தால், சிறந்ததொரு வடிவை முன்மொழிவீர்கள் என்று எண்ணினேன். எனக்கு ஏமாற்றமே. எனினும், நீங்கள் கருத்துக்களை முன் வைத்ததற்கு, என் நன்றியைக் கூற விரும்புகிறேன்.
நீங்கள் கூறிய படியே, ஒலிப்புக்குரியவற்றினை ஒரே வரியில் அமைத்திட நானும் எண்ணுகிறேன்.
மேலும், கீழ்கண்ட மாற்றங்களை செய்ய, கேட்டுக்கொள்கிறேன்.
 1. தொகுத்தலுக்குரிய ஆழிகளில் (பொத்தான்களில் ), பட ஆழியை அழுத்தினால்,[[படிமம்:Example.jpg]] மட்டும் வருகிறது.அதனை இது போல ([.[கோப்பின் பெயர்|thumb|150px|right|பட வர்ணனை]] )அமையுங்கள். தமிழில் தட்டச்சும் போது, மீண்டும் ஆங்கிலத்திற்கு மாறி, சில எழுத்துக்களை அடித்தப் பிறகு, மீண்டும் தமிழில் தொடர வேண்டிய நிர்பந்தமுள்ளது. மேற்கண்ட மாற்றங்களை செய்தீர்கள் என்றால், எனக்கு பங்களிக்க வசதியாக இருக்கும். புதியவர்களுக்கும் தெளிவாகப் புரியும்.
 2. கீழுள்ள தயவுசெய்து தகவல் ஆதாரங்களைத் தரவும் என்பதில் பிழையில்லை. இருப்பின், நாம் மாற்றலாம். விக்சனரி தளத்தை வடிவமைத்தவர்கள் பயன்படுத்தியச் சொற்களை, நாம் பயன்படுத்துவதால் அவர்கள் உழைப்புப் போற்றப்படுகிறது. மதிக்கப்படுகிறது. சொல்வளம் மிக்க நம் மொழி மூலம், வடிவமைப்புச் சொற்களை மாற்றிக்கொண்டே இருப்பது, அவர்களை மறப்பதற்கான முதற்படி ஆகும்.
அகரமுதலி என்பதால் எளிமையானச்சொற்களை, திரும்ப திரும்ப பயன்படுத்தும் போது, புதிதாகக் கற்பவருக்கு, கற்றலில் ஆர்வம் அதிகமாகும். சான்று என்பதனை உறுதி செய்யப்பட்ட தகவல்களுக்கே பயன்படுத்துதல் சிறப்பு. நாம் நிறைய உறுதி செய்யப்படாத மொழிபெயர்ப்புகளை வைத்திருக்கும் நிலையில், கீழுள்ள ஆதாரம் என்ற சொல்லை பயன்படுத்துவது தான் நலம். ஆதாரம் என்ற சொல்லே நடைமுறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நிறைய ஐயங்கள் உள்ளன. பதிவேற்றம் முடிந்தவுடன், அதுபற்றி வினவுகிறேன். --த*உழவன் 17:33, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

பதிவேற்றம் எப்பொழுது?[தொகு]

இதுவரை நடந்த கலந்த உரையாடல்கள் மூலம் எனது புரிந்துணர்வு மேம்பட்டது. என்னுடன் கலந்துரையாடிய அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அனுபவங்களை தமிழ் விக்சனரிக்காக பகிர்ந்ததில் மகிழ்கிறேன். பதிவேற்றத்திற்குரிய மாதிரியைக் கொடுத்தால், அதனை பதிவேற்றிக் காண்பிக்கிறேன்.நீண்ட நாட்களாகக் காத்திருந்த என் பதிவேற்ற ஆவல் மேலோங்குகிறது. பதிவேற்றத்தை என்று ஆரம்பிக்கலாம்?--த*உழவன் 17:48, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

 • dado2 பக்கவடிவம் இப்போது பெரும்பாலானோரின் கருத்துகளின்படி இருப்பதாகத் தோன்றுகிறது. புதிதாக இனிக் கருத்துக்கணிப்பு நடத்த அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அந்தவடிவத்தின் அடிப்படையில் பதிவேற்றம் செய்யலாம் என்றே நான் நினைக்கிறேன். பழ.கந்தசாமி 19:55, 1 அக்டோபர் 2010 (UTC)Reply
 • முதற்கட்டமாகச் சில சொற்களை எந்திரன் மூலம் தொடங்கலாம். எந்திரன் வெளியீடாக :) அமையட்டும். ஒரு முறை சரி பார்த்துவிட்டு மற்ற அனைத்தையும் பகுதி பகுதியாகப் பதிவேற்றலாம் என நினைக்கிறேன். பழ.கந்தசாமி 05:58, 2 அக்டோபர் 2010 (UTC)Reply
 • த*உழவனே! நேரம் கிடைக்கும்போது எந்திரனை ஏவி முதற்கட்டச் சில சொற்களைப் பதிவேற்றவும். ஒரு முறை அவற்றைச் சரி பார்த்ததும் எஞ்சிய அனைத்தையும் தொடர்வோம். பழ.கந்தசாமி 05:30, 4 அக்டோபர் 2010 (UTC)Reply
 • நீங்களே தவறாமல், தளராமல், தமிழ் விக்சனரியின் வளத்தை அதிகரிக்கிறீர்கள். அதனால், உங்களின் அண்மையப் பதிவான noob என்பதனை அடிப்படையாகக் கொண்டு மாதிரிகளை, நாளைகாலைப் பதிவேற்றுகிறேன். --த*உழவன் 13:40, 4 அக்டோபர் 2010 (UTC)Reply
 • நன்று. பதிவேற்றத்தினை எதிர்பார்த்திருப்பேன். (நான் முன்னர் கூறியபடி பணியடர்வு மிக அதிகம் (செப்டம்பர் முதல்), எனினும் என்னால் ஆன அளவு பல விக்கித்திட்டங்களிலும் தொடர்ந்து பங்குகொண்டு வருகிறேன். திசம்பர் வரையிலும் தொடர்ந்து பணியழுத்தம் கூடுதலாக இருக்கும்.)--செல்வா 00:51, 5 அக்டோபர் 2010 (UTC)Reply

தரவுகளை வெளியிடுதல்[தொகு]

@Info-farmer: இத்திட்டத்தில் நீங்கள் பயன்படுத்திய 1.32 லட்சம் சொற்களை எங்கேனும் வெளியிட்டுருந்தால் அதன் இணைப்பினைப் பகிர இயலுமா? -Neechalkaran (பேச்சு) 06:35, 30 திசம்பர் 2021 (UTC)Reply

அப்பணி முடிந்ததும். அதனைப் பேணவில்லை. மேலும், வின்டோசு கணினியை அதற்கு பிறகு நான் பயன்படுத்துவதில்லை. எனவே வின்டோசு சார்ந்த கோப்புகளையும் அழித்து விட்டேன். உழவன் (உரை) 09:00, 30 திசம்பர் 2021 (UTC)Reply