பேச்சு:சிவன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

எளிதில் புரியாத, விவாதத்திற்குறிய விளக்கப் பகுதியிலுள்ள விடயங்கள் விக்சனரிக்கு அவசியமா?...விக்கிபீடியாவுடன் இணைப்பைக்கொடுத்துவிட்டு, பேரகராதியின் பொருளுக்கேற்ப, எளிமையாக மாற்றிவிட்டால் போதாதா?--Jambolik (பேச்சு) 14:22, 13 பெப்ரவரி 2015 (UTC)

விளக்கப்பகுதியில் இருந்தவை[தொகு]

... ஆனால், ‘சிவன்‘ என்ற சொல்லின் பொருள் எது, அல்லது எவை என்பதையறிய, அதை மொழியியல் ரீதியாகவே ஆராயவேண்டும்...இதற்கு ஒருவருக்குத் தமிழ் மொழியின் ‘மொழிப்பொருள் காரணம்‘ சரியாக விளங்கியிருக்கவேண்டும்...தமிழ் எழுத்துமொழியில் ஒவ்வொரு மூலத்தனியொலியும் குறிப்பிட்ட ‘தன்மை‘ (nature) அடிப்படையிலான ஒரு விவரிப்பினைச் செய்கிறது... இதை ஆராய்ந்தறிந்த நிலையில், அவற்றைச் ‘சிவன்‘ என்ற சொல்லில் பிரயோகிப்பதன் மூலம்தான் ‘சிவன்‘ என்ற சொல்லின் பொருட்களைச் சரியாக அறியமுடியும்...

‘சிவன்‘ என்பது: 'சிவ் + அன்‘ ஆகும்...அதாவது: 'சிவ்' தன்மையானவன், அல்லது 'சிவ்'மயமானவன்... 'சிவ்' என்பது: ‘ச் + இ + உ' ஆகும். ஆகவே, அது: 'மேன்மை நிறைவு உயிர்ப்புத் தன்மை' யாகும்...

"மேன்மை நிறைவு உயிர்ப்புத் தன்மை" யை: அன்பு, அருள், அறிவு, அறம், ஒளி, புனிதம், செம்மை, இனிமை, அழகு, ... எனப் பலவற்றின் அடையாளங்களாக முடியும்...

இந்தநிலையில், 'சிவன்' என்பதன் பொருட்கள்: அன்புமயமானவன், அருள்மயமானவன், அறிவன், அறவோன், புனிதமானவன், செம்மையானவன், ஒளிமயமானவன், இனிமையானவன், அழகன், ... எனவெல்லாம் வரும்...

இவைகள் எல்லாம் புத்தபெருமானுடனும் ஒன்றும் என்பதை, 'மஹாயாண' பௌத்த இலக்கண நூலான விரசோழியம் உரையினூடாக உநுதிப்படுத்தமுடியும்.

இதனால்தான் புத்தபெருமான் இலங்கையில் தனது பாதப் பதிப்பினைச் செய்த மலையைத் தமிழில் ‘சிவன் ஒளிபாத மலை‘ என்பர்...


இந்தநிலையில், எமது சைவப் புலவர்கள் 'சிவன்‘ என்ற சொற்குக் கொடுத்துள்ள விளக்கங்கள் பிழையானவை, கற்பனையானவை என்பது உறுதியாகிறது...

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சிவன்&oldid=1456637" இலிருந்து மீள்விக்கப்பட்டது