உள்ளடக்கத்துக்குச் செல்

சிவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கற்சிலை வடிவங்கள்
இறைவன்
சிவன்:
வைடூரியம்
ஒலிப்பு
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • சிவன், பெயர்ச்சொல்.
  1. மும்மூர்த்திகளுள் ஒருவரான சங்காரக்கடவுள்
  2. சிவபத்தர்க்கு வழங்கிய சிறப்புப்பெயர்
    (எ. கா.) கயிலாயன் ஆரூரான் தர்ம்மசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி ((S. I. I.) ii, 254).
  3. வைடூரியம் (மூ. அ.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. shiva, one of the great gods, the third of the Hindu triad, whose special function is Destruction
  2. title of Šaiva devotees
  3. cat's-eye, a variety of quartz

மதம்

[தொகு]
  • இந்து சமயங்களில் முதன்மையான சைவ மதக கடவுளாகப் போற்றப்படுகிறார் சிவன்.


விளக்கம்

[தொகு]
  1. எல்லோரினும் மேலானவன், உயர்ந்தவன்(ஒப்புமை: சிவிகை-மகுடம், சிவிங்கி-உயர்ந்த விலங்கு, ஒட்டகச்சிவிங்கி).
  2. ஆக்கம், அளவு, இறுதி இல்லாதவன்.
  3. ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்.
  4. ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.
  5. போக்கும் வரவும் புணர்வும் இல்லாத புண்ணியன்.
  6. ஆக்கல், காத்தல், மறைத்தல், அருளல் மற்றும் அழித்தல் ஆகிய ஐவகைத் தொழிலையும் செய்பவன்.
  7. ஆதியும் அந்தமும் ஆன பரம்பொருள்.
  8. முக்கண் முதல்வன் என இன்றைய கற்றோர்கள் சிலர் கூறுவர்.
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

சிவனைக் குறிக்கும் வேறு சொற்கள்

[தொகு]
  1. இறைவன்
  2. ஈசன்
  3. அரன்
  4. முக்கண்ணன்
  5. சாம்பவன்
  6. ஈஸ்வரன்

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. பார்வதி, ஈஸ்வரி
  2. பிள்ளையார்
  3. முருகன்
  4. சைவம்
  5. சிவ தாண்டவம் - சிவன் + தாண்டவம்
  6. சிவாலயம் - சிவன் + ஆலயம்
  7. இறையியல்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிவன்&oldid=1906583" இலிருந்து மீள்விக்கப்பட்டது