உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சோற்றுக்கற்றாழை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கருத்து[தொகு]

விளக்கத்தில், பஞ்சகாலங்களில் உணவாகப் பயன்படுத்தப்பட்டதால் இப்பெயர். என்று உள்ளது. இதற்கு தக்க சான்றுகோள் கொடுப்பது பயனுடையதாக இருக்கும் (கிடைத்தால்). இதன் இலையின் உள்ளே குழைவான பொருள் இருப்பதால் சோற்றுக்கற்றாழை என்று பெயர் என்பது நான் புரிந்து கொண்டது. சோறு என்பது அரிசியை நீரில் வேகவைப்பதால் உப்பி விரிவதோடு (அவிழ்கின்றது, அமிழ்ந்து) மென்மையாகவும்/மெதுமையாகவும் ஆகின்றது. குழைந்தசோறு சோற்றுக்கற்றாழையி இலையில் உள்ளே உள்ள குழைமம் போல்தான் ஓரளவு இருக்கும். இலையின் உள்ளே உள்ள குழைமம்தான் சோறு என்று சுட்டப்படுகின்றது என்பது நான் புரிந்துகொண்டுள்ளது. இருவரிடையே கடுமையான சண்டைவந்து, பேச்சு தடித்து, கொடுமொழிகள் உதிர்க்கும்பொழுது, குடல உருவி மஞ்சாசோத்தை எடுத்துறுவேன்னு என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கலாம். அதில் உள்ள மஞ்சா சோறு என்பது உடலின் உள்ளே உள்ள ஈரப்பொருள் அல்லது குழைவான பொருள் என்பது பொருள் என்பது நான் உணர்வது. சோறு என்றால் உணவு என்று மட்டுமல்ல, மெதுமையான, குழைவான ஈரப்பொருள் என்றும் சொற்பொருள் இருக்கும் என்பது என் கணிப்பு. --செல்வா 14:05, 24 ஜூலை 2010 (UTC)

  • எங்கள் ஊரில் கத்தாழைப் பஞ்சம் என்றும் அப்போது அதன் உள்ளீட்டை எடுத்துச் சமைத்ததாககவும் கேள்விப்பட்டிருக்கிறேன். வறட்சியும் பெருவெள்ளமும் இணைப்பையும் பார்க்கவும். (இதில் வெறும் கற்றாழை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது :). உங்கள் விளக்கமும் அருமை. பழ.கந்தசாமி 14:44, 24 ஜூலை 2010 (UTC)
தொடுப்புக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி. --செல்வா 16:12, 24 ஜூலை 2010 (UTC)
  • Aloe typica synonym of Aloe deltoideodonta என்பதனையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். மேலும், பேரினத்தின் பெயரை எப்பொழுதும் பெரிய எழுத்துக்களில் தான் எழுத வேண்டும் என்பது உலக உயிரியியல் பெயரிடல் முறைமையாகும். எனவே, aloe typica என்பதனை விட, Aloe typica என்பதே பொருத்தமான முறையாக உயிரியல் நிபுணர்களால் பின்பற்றப் படுகிறது.--த*உழவன் 01:54, 25 ஜூலை 2010 (UTC).
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சோற்றுக்கற்றாழை&oldid=764032" இலிருந்து மீள்விக்கப்பட்டது