உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பட்டிணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

@Balajijagadesh: பட்டிணி என்ற சொல் உள்ளதா? இல்லாத அல்லது தவறான சொற்களையும் விக்சனரியில் சேர்க்கலாமா?--Kanags (பேச்சு) 11:06, 23 சூன் 2021 (UTC)Reply

@Kanags: இச்சொல் அகராதியில் இருந்து எடுத்ததே. பல நூல்களில் இச்சொல் பயன்படுவதைப் பார்த்துள்ளேன். ஒரு ஆதாரம். //இல்லாத அல்லது தவறான சொற்களையும் விக்சனரியில் சேர்க்கலாமா?// எனது கருத்து. --> தவறான சொல்லாக இருந்தாலும் பரவலாக பயன்படுகிறது என்றால் (அதனை ஆதாரத்துடன் நிறுவ முடியும் என்றால்) அதைச் சேர்த்து அதன் விளக்கம், எதில் இருந்து திரிந்தது போன்ற விவரங்களைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டு பவளம் பவழம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:43, 23 சூன் 2021 (UTC)Reply
@Balajijagadesh: பட்டிணி என்ற சொல்லை ஒரு சிலர் தவறாக எழுதி வருகிறார்கள் என்றே நம்புகிறேன். அதற்காக அவற்றை நாம் ஒரு சரியான சொல்லாக சேர்க்க வேண்டுமா? தவறான சொற் பயன்பாடு என்ற கருத்தில் மட்டுமே இவற்றை விக்சனரியில் சேர்க்க வேண்டும். @செல்வா:.--Kanags (பேச்சு) 06:53, 26 சூன் 2021 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பட்டிணி&oldid=1910423" இலிருந்து மீள்விக்கப்பட்டது