பேச்சு:புனைப்பெயர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இது புனைபெயர் என ஒற்று மிகாமல் வரவேண்டும் என நினைக்கின்றேன். --செல்வா 08:27, 11 மார்ச் 2010 (UTC)

  • நீங்கள் சொல்வது சரி. இருப்பினும், புனைப்பெயர் என்றும் தேடப்படலாம் என்று கருதி இதை எழுதினேன். பழ.கந்தசாமி 08:34, 11 மார்ச் 2010 (UTC)
  • //1.இரண்டாம் வேற்றுமை விரியில் ஒற்றுமிகும். எடுத்துக்காட்டு: அவனைக் கண்டேன். தமிழைக் கற்றேன்.( ஐ இரண்டாம் வேற்றுமை உருபு என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்).//

பயனர்_பேச்சு:Meykandan என்பதில் மேலும் பல விளக்கங்கள் உள்ளன.த*உழவன் 08:38, 11 மார்ச் 2010 (UTC)

புனைபெயர் என்பது ஊறுகாய் என்பது போன்ற வினைத்தொகை. புனைதல் என்றால் அணிதல், கற்பித்தல், அலங்கரித்தல், தரித்தல், எழுதுதல், செய்தல், உருவாக்குதல் என்று வெவ்வேறு இடங்களில் பொருள் தரும். புனைந்த பெயர், புனைகின்ற பெயர், புனையும் பெயர் என பல காலநிலை வினைகளை உள்ளடக்கிய வினைத்தொகை ஆகையால் அதில் ஒற்று மிகாது. புனைஇ என்றால் புனைந்து அணிந்து என்று பொருள். புனைசுருட்டு என்பது ஏமாற்று, மோசம் போன்ற பொருளைத் தரும் இன்னொரு வினைத்தொகை. த*உழவன், இது இரண்டாம் வேற்றுமையே அல்ல. அவன்+ஐ = அவனை, தலை+ஐ = தலையை என்பது இரண்டாம் வேற்றுமை எ.கா. தலையைச் சொறிந்தான் என்றால் இரண்டாம் வேற்றுமை வெளிப்பட வருவதால் ச் என்னும் ஒற்று மிகுந்து வரும். இங்கு புனையை என்பது முன் சொல் அல்ல. புனையை என்றல் அலங்கரிப்பை, அணியை என்று பொருள் வரும். அதுவல்ல இங்கு சொல். புனைந்த பெயர். புனைந்து கொண்ட பெயர். இட்டுக்கட்டி தானே ஏற்றிவைத்துக்கொண்ட பெயர். வினைத்தொகை. இதே போல இன்னொரு சொல்லும் வெகுவாகத் தவறாக வழங்கும். திருநிறைசெல்வன், திருநிறைசெல்வி என ஒற்று மிகாமல் வரவேண்டும் (வினைத்தொகை - திருநிறைந்த, திருநிறைகின்ற, திருநிறையும் செல்வன்/செல்வி). ஆனால் பிழையாக ஒற்று மிகுத்து எழுதுவர் பலர். ஊறு"க்"காய் என்றால் எப்படிப் பிழையோ அப்படி.--செல்வா 18:28, 11 மார்ச் 2010 (UTC)
நன்றி. பக்கத்தைப் புனைபெயர் என மாற்றலாமா? (தவறான வழக்குகளையும் சுட்டிக்காட்டலாம்). திருநிறைசெல்வன்/செல்வி என்பதிலும் இப்படி செய்யலாம். விக்சனைரியின் சிறப்புகளில் இதுவும் ஒன்றாக அமையக்கூடும். --செல்வா 21:51, 11 மார்ச் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:புனைப்பெயர்&oldid=633242" இலிருந்து மீள்விக்கப்பட்டது