பேச்சு:பூர்வமாய்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Sundar
தமிழில் "பூர்வமாக" என பின்னொட்டு இட்டு இருபதிற்கும் மேற்பட்ட சொற்களைப் புழங்குகிறோம். அதில் ஒற்று மிகுந்தும் மிகாமலும் எழுத்துப்பூர்வமாக/எழுத்துபூர்வமாக, அறிவுப்பூர்வமாக/அறிவுபூர்வமாக, உணர்ச்சிப்பூர்வமாக/உணர்ச்சிபூர்வமாக என இருவேறு வழக்குகள் நடைமுறையில் உள்ளன. பூர்வம் என்பது வடமொழியாகையால் ஒற்று வராது என்று ஒருசாரரும், தமிழ் ஒலிப்பில் ஒற்று வேண்டும் என்று ஒருசாரரும் கருதுகின்றனர். இதில் எதை சீர் தரமாகக் கொள்ளலாம்?-Neechalkaran (பேச்சு) 14:22, 3 சூலை 2019 (UTC)
- வடமொழி என்று நீங்கள் சொல்லியதால், அதனைப் பயன்படுத்துவோர் எண்ணத்திற்கு விட்டு விடலாம். இது குறித்த உங்கள் தகவல்களை பேணலாம் என்றே எண்ணுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 16:06, 3 சூலை 2019 (UTC)
- @Neechalkaran: ஒற்றுமிகுவதே பொருத்தமாகப் படுகிறது. இல்லையெனில் ஒலிப்பில் குழப்பம் நேரலாம். அனைவருக்கும் எது வடமொழிச்சொல் எது தமிழடிச்சொல் எனத்தெரிந்திருக்க வாய்ப்பில்லை. -- Sundar (பேச்சு) 05:05, 25 சூலை 2019 (UTC)