பேச்சு:மலசலக்கூடம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • இந்தப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் கொல்லை எனும் சொல்லும், தெலுங்கு దొడ్డి எனும் சொல்லும் மலசலக்கூடம் என்று நேரிடையாக அர்த்தம் தரும் சொல்லல்ல என்பதால், அவை நீக்கப்பட்டன...காலைக்கடன் கழிக்க அந்நாளில் வீட்டிற்கு வெளியே கொல்லையில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் இப்பொருளில் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டன.--Jambolik (பேச்சு) 21:28, 11 சூன் 2016 (UTC)[பதிலளி]
  • கொல்லைக்குப் போதல், பின்னால போய் விட்டு வருகிறேன், ஆத்துக்கு போவணும் ஆகிய சொற்றொடர்கள், இன்றளவும் சேலம், ஈரோடு, பெரம்பலூர் மாவட்டங்களில், ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப் படுகின்றன.இன்று நடைமுறையில் பல சொற்கள் சில இடங்களில்/அல்லது /நடைமுறையில் முழுமையாகவே, பயன்படுத்தப்பட வில்லை என்பதால் நீக்க வேண்டாம் என்றே கருதுகிறேன். எடுத்துக்காட்டு, அணுக்கர் என்ற சொல் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டாலும், நாம் விக்கியில் அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறோம். அதே போல, விக்சனரிக்கு நான் வந்த போது பலுக்கல் என்ற சொல் எனக்கு புரியவில்லை. அது இலக்கியத்தில் எங்குள்ளது எனத் தேடி பார்த்தேன். கிடைக்கவில்லை. பின்பு, பேராசிரியர் செல்வா, அதனை ஒலிப்பு என எளிமையாக்கினார். --தகவலுழவன் (பேச்சு) 07:07, 13 சூன் 2016 (UTC)[பதிலளி]
  • முழுக் கொல்லையையுமே மலசலக்கூடமாக்கிவிடுதல் சரியல்லவே!...முதன்முதலாகப் படிப்போர் கொல்லை என்றாலே மலசலக்கூடமெனப் பொருள்கொண்டால்?...இதற்குப் பதிலாக கொல்லைக்குப் போதல் எனும் சொல்லை உருவாக்கி, விளக்கமளிக்கலாம்!...வெளிக்குப் போதல் என்னும் சொல்லும் சமூகத்தில் இதே பொருளுக்குப் பயன்படுத்தப்படுகிறது...வெட்டவெளி நிலத்திற்குப்போய் மலசலம் கழிப்பது என்பது பொருள்...அதற்காக வெளி எனும் சொல்லை உருவாக்கி இந்தப்பொருளை தருவது ஏற்புடையதல்ல என நினைக்கிறேன்...பலுக்கு என்னும் சொல் தெலுங்கில் ஒலியுண்டாவதை, சொல்வதை, பேசுவதை, பதில் தருவதை நிலைக்குத் தக்கவாறு, குறிக்கும் சொல்லாகப் பயன்படுகிறது...பண்டையத் தமிழ் இலக்கியங்களில் எங்காவது காணக்கிடைக்கலாம்!--Jambolik (பேச்சு) 13:54, 13 சூன் 2016 (UTC)[பதிலளி]
  • உங்கள் கருத்து?--70.106.228.23 15:00, 15 சூன் 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:மலசலக்கூடம்&oldid=1452659" இலிருந்து மீள்விக்கப்பட்டது