உள்ளடக்கத்துக்குச் செல்

மலசலக்கூடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மலசலக்கூடம்
மலசலக்கூடம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மலசலக்கூடம், பெயர்ச்சொல்

பொருள்

[தொகு]
  1. கழிப்பறை
  2. மலக்கூடம்
  3. கக்கூசு
  4. கழிவறை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. latrine
  2. toilet
  3. rest room (u s.a)
  4. lavatory
  5. convenience (british)
  • தெலுங்கு
  1. కక్కసు
  2. పాయిఖానా
  3. మరుగుదొడ్డి
  • இந்தி
  1. शौचालय
  2. पाखान

விளக்கம்

[தொகு]
  • மக்கள் தங்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள தனித்தனி அறைகள்..வீடுகளிலும், அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும்...நகரங்களில் பொது மலசலக்கூடங்களும் உண்டு...அவரவர்களின் சௌகரியத்திற்கு ஏற்றாற்போல பலவகையான வடிவமைப்புக் கொண்டவை...மக்கள் கூட்டம் செறிந்த இடங்களில் ஒரே கட்டிடத்திற்குள் பல அறைகளைக் கொண்ட மலசலக்கூடங்களுமுண்டு...எல்லா நேரத்திலும் தடையில்லாத தண்ணீர் கிடைக்கும்படியாகவும், இவ்விடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளத் தேவையான மருந்துப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வைத்திருக்கும் ஊழியர்களைக் கொண்டாதாகவுமிருக்கும் ...இப்படியானக் கழிவை இறுதியாக அப்புறப்படுத்தும் தீர்வில் பல செயல்முறைகள் உள்ளன...இவ்விடங்களிலிருந்து வெளியேறும் மலம், சிறுநீர் சுத்தீகரிக்கப்பட்டு பாதுகாப்பாக ஊருக்கு வெளியே விடப்படுவதோடு, சில இடங்களில் மறுசுழற்சி பயன்பாட்டிலும் உபயோகப்படுத்தப்படுகிறது...தூய்மை செய்யப்பட்ட மலசலக்கூட கழிவுகளின் நீரை, உழவுத் தொழிலிலும், குடிநீர் மற்றும் சமையலைத் தவிர்த்து ஏனைய வீட்டு உபயோகத்திலும், தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சவும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்துகின்றனர்... பலவித நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மலசலக் கூடங்களும் நாட்டுக்கு நாடு வித்தியாசமான பல வடிவமைப்புகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=மலசலக்கூடம்&oldid=1451436" இலிருந்து மீள்விக்கப்பட்டது