உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மீனாட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விளக்கங்கள் சரிதானா?... மீனாட்சி என்னும் சொல்லில் ஆட்சி எனும் ஒலி தமிழைச் சார்ந்தது அல்ல!...மீனாட்சி என்ற பெயர் மீநாக்ஷி என்னும் வடமொழி சொல்லின் திரிபு!...அதனால் மீன்+ஆட்சி என்று மீனாட்சி என்னும் பெயரைப் பிரித்திருப்பது சரியல்ல என்று கருதுகிறேன்...வடமொழிச் சொல்லின் பொருளின்படி மீனைப்போன்ற கண்களையுடையவள் என்றே பொருள்...மீன் என்னும் சொல் வடமொழியிலும் கயலைக்குறிக்கும்...அக்ஷி என்றால் கண்... ஆகவே மீன்+அக்ஷி=மீநாக்ஷி=மீனாட்சி என்றானது...எனவே இந்தப்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கமும் சரியாக இருப்பதாகப்படவில்லை!!--Jambolik (பேச்சு) 14:31, 12 சனவரி 2013 (UTC)Reply

  • நீண்ட காலம் கடந்துவிட்டபோதிலும், மேற்கண்ட கருத்தை எதிர்த்தோ அல்லது உடன்பட்டோ எந்த அபிப்பிராயமும் வரவில்லை.--Jambolik (பேச்சு) 21:45, 26 நவம்பர் 2014 (UTC)Reply
  • தொடக்கத்தில், விளக்கப்பகுதியில் கொடுக்கப்பட்டிருந்த கண்களை மூடாத மீன் போன்று, கண்களை மூடாமல் இரவும் பகலும் விழித்திருந்து ஆட்சிப் புரிபவள் "மதுரை மீனாட்சி அம்மன்" என்பது பொருளாகும் என்னும் கூற்று தவறானது...மீன்கள் கண்களை மூடாமைக்குக் காரணம் அவைகளுக்கு கண் இமைகள் இல்லாமையே!...அவைகளுக்கும் தூக்கத்திற்கு ஒப்பான/ஈடான களைப்பாறுதல்/இளைப்பாறுதல் உண்டு...அப்போது கண்கள் திறந்த நிலையிலிருந்தாலும், பார்வை இருக்காது...இயற்கையான, உண்மையான மீன்களின் இந்த குணாதிசயத்தை ஒரு பெண் தெய்வத்திற்கும் உரியதாகக்காட்டுவது ஏற்புடையதல்ல!...ஆகவே மீனாட்சி என்னும் பக்கம் தக்கவாறு மாற்றப்பட்டது...--Jambolik (பேச்சு) 18:27, 8 திசம்பர் 2014 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:மீனாட்சி&oldid=1263930" இலிருந்து மீள்விக்கப்பட்டது