பேச்சு:வீச்சுப் பண்பேற்றம்
தலைப்பைச் சேர்எளிமையாக, வீச்சு மாற்றம், வீச்சு மாறுகை என்றே சொல்லலாமே! வீச்சு மாறுகை, அதிர்வெண் மாறுகை, அலைமுக மாறுகை (phase modulation), அலையகல மாறுகை (pulsewidth modulation). சொற்களில் சுருக்கம் மிக முக்கியம். அப்படி இயலாத இடங்களில் தேவையான அளவு நீட்டலாம், ஆனால் சுருக்கம் நாட வேண்டும். இந்தப் பண்பேற்றம் என்னும் சொல்லும் போதிய அளவு தகவல் தராத சொல் (இங்கு). குறிப்பலைகளை (குறிகைகளை) ஊர்தி அலையின் வீச்சளவின் மாற்றமாக மாற்றி ஏற்றிச் செலுத்துவது. இதில் இந்த மாற்றம் (modulation) என்னும் அடிப்படை கருத்தே இல்லாமல் உள்ளது தற்பொழுது உள்ள சொல்.
குறிப்பலைகளை (குறிகைகளை அல்லது சைகைகளை) ஊர்தி அலையின் வீச்சளவின் மாற்றமாக ஏற்றுவது வீச்சு மாறுகை. இப்படி வீச்சளவில் மாற்றங்களாக ஏற்றி செலுத்தப்படும் அலைகள் (அலை) பெறுனி அல்லது வாங்கிகளில் ஊரிதியலையை நீக்கிவிட்டு அதில் ஏறியிருந்த வீச்சளவு மாற்றங்களை மட்டும் பிரித்தெடுக்க இயலும். என்பது போல எழுதலாம். இதில் மாற்றம், மாறுகை என்பது மிக முக்கியமானது. Modulation என்பதே கருவானது. எதில் மாற்றம் என்பதால் நுட்பங்கள் மாறுகின்றன.
--செல்வா 12:25, 3 மே 2010 (UTC)
- பண்பேற்றம், வீச்சுப் பண்பேற்றம், அதிர்வெண் பண்பேற்றம், கட்டப் பண்பேற்றம் ஆகிய சொற்கள் தமிழ் நாட்டுப் பாடநூல்களில் புழக்கத்தில் உள்ளவை. --பரிதிமதி 23:57, 3 மே 2010 (இந்திய நேரம்)
- நன்றி. நினைத்தேன் இப்படியாகத்தான் இருக்கும் என்று! நீங்கள் தந்திருக்கும் விளக்கம், இயற்பியல். மின்னணுவியல், தொலைத்தொடர்பியல். (வானொலி) சைகை அலையைப் பயன்படுத்தி ஊர்தி அலையின் வீச்சினைப் பண்பேற்றுதல். என்பதில் உள்ள :ஊர்தி அலையின் வீச்சினைப் பண்பேற்றுதல்" என்னும் தொடர் இயல்பாகவோ, சரியான பொருள் தருவதாகவோ இல்லை. ஊர்தி அலையின் வீச்சளவு சைகைகளுக்கு ஏற்ப (ஒத்து)மாறுகின்றது (அல்லது மாற்றப்படுகின்றது). அப்படியான மாற்றத்தை ஊர்தி அலையின் மீது ஏற்றும் நுட்பம் என்னும் கருத்து வரவேண்டும் இல்லையா? மாறுகின்றது, மாற்றம் (modulate, modulation) என்னும் அடிக்கருத்துகளை விடுத்து விளக்குவது சரியாக அமையாது என்பது என் கருத்து. கட்டப் பண்பேற்றம் என்றால் phase modulation-ஆ? --செல்வா 19:52, 3 மே 2010 (UTC)
- பண்பேற்றுதல் என்பதை பண்பேற்றம் செய்தல் என்று மாற்றியுள்ளேன். பண்பேற்றம் என்ற சொல்லிற்கான பக்கத்தில் அதன் வரையறை கொடுத்துள்ளேன். மேலும், வீச்சுப் பண்பேற்றம், அதிர்வெண் பண்பேற்றம் ஆகியவற்றிற்கான வரையறைகள் Wordwebonline-இல் கொடுக்கப்பட்ட வரையறைகளின் மொழிபெயர்ப்பே; மேற்கோள்கள் தலைப்பில் கொடுத்துள்ளேனே? நிற்க. பண்பேற்றம் - சொல் தேர்வு சரியானதுதான். ஒரு அலையின் பண்பினை மற்றொரு அலையின் பண்பின் மீது ஏற்றுகின்ற நிகழ்வு அல்லவா? அதேபோல், modulari என்ற பழம் பிரெஞ்சு சொல்லிற்கு இசையை உருவாக்குதல் என்ற பொருளும் ஒழுங்குபடுத்து என்ற பொருளும் தான் கொடுக்கப்பட்டுள்ளன. (Online Etymological Dictionary - [1]) --பரிதிமதி 11:22, 4 மே 2010 (இந்திய நேரம்)
- பரிதிமதி, விளக்கத்தை மாற்றி எழுதியுள்ளேன். பார்க்கவும். பண்பேற்றம் செய்தல் என்பது செயற்கையான அமைப்பு. மொழிபெயர்ப்பதால் சில நேரங்களில் கருத்து சரியாக அமையாமல் போகும். புரிந்துகொண்டு நம்மொழியில் பொருள் விளங்குமாறு எழுதினால் பயன் மிக்கதாக இருக்கும். சைகை அலையின் பண்புகளை ஊர்தி அலையின் பண்பொன்றின் மீது ஏற்றுதல் என்பது சரிதான், அதே போல பண்பேற்றம் என்ற சொல்லும் தனியாகப் பார்த்தால் சரிதான், ஆனால் பண்பை இன்னொரு பண்பில் ஏற்றுதல் என்பது இயல்பாய் இல்லை. ஒன்றின் பண்புக்கு ஏற்ப மற்றதில் ஒன்றை மாற்றுதல் என்பது இயல்பாக இருப்பதாகத் தோன்றுகின்றது. பழம் பிரான்சிய மொழியில் எப்படி இருப்பினும், இச்சொல்லில் modulation என்றால் மாற்றம் என்பதுதான் கருத்து. module, modular முதலான சொற்களில் வரும் கருத்து வேறானாது. அவை இங்கு தேவை இல்லை என நினைக்கின்றேன். எப்படியாயினும், வரையறையில் நான் செய்த மாற்றத்தைப் பாருங்கள். கருத்துவேறுபாடு இருந்தால் தெரிவியுங்கள். கட்டப் பண்பேற்றம் என்றால் phase-modulation-ஆ? --செல்வா 11:48, 4 மே 2010 (UTC)
- ஆமாம். கட்டப் பண்பேற்றம் என்றால் phase modulation. இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருந்த மேற்கோள் இணைப்பை நீக்கி விட்டேன்.--பரிதிமதி 21:44, 4 மே 2010 (இந்திய நேரம்)