பேச்சு:alcoholism
தலைப்பைச் சேர்-ism என்ற விகுதி உடைய சொற்கள் தமிழில் -மை என்னும் விகுதி கொண்டு முடித்தல் நன்று,
- எனது கருத்தின் படி,
- alcoholism மது மிகைமை என அழைக்கப்படல் சரியாகுமா என சரிபார்க்க வேண்டுகின்றேன்.--சி. செந்தி 17:06, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
alchoholism என்பதை எளிதாக வழக்கில் உள்ள குடிப்பழக்கம் என்னும் சொல்லாலேயே குறிக்கலாம். இதில் மிகைப்பட்ட, அடிமைப்பட்ட தன்மை இல்லையே என்று நீங்கள் நினைத்தால் குடி வயப்பாடு. குடிவயமை எனலாம். கள்வயமை, கள்வயப்பாடு என்றும் சொல்லலாம். பேச்சு:abuse என்னும் பக்கத்தையும் காண வேண்டுகிறேன். --செல்வா 18:45, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
- தஇபல்கலை அகராதியில் குடிவெறி என்றுள்ளது. - Mahir78 18:56, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
- மிக்க நன்றி மாகிர்!! குடிவெறி என்பது மிகச்சிறந்த சொல். வெறி என்பது -மை என்னும் விகுதி சேர்ந்த பொருளிலும் கொள்ளப்பெறும். வெறிமை என்று கூற வேண்டியதில்லை.--செல்வா 19:08, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
- குடிவெறி என்பது பொதுவாகக் குடிபோதையின் விளைவாக ஏற்படும் ஒரு மனநிலையைத்தானே குறிக்கிறது. அதன் பயன்பாட்டுக் connotation அடிமைத்தனத்தைக் குறிப்பதில்லையே! அதனால், குடிவெறி பொருந்தாதுபோல் தோன்றுகிறது. பழ.கந்தசாமி 21:43, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
- தற்போதைக்கு "குடிவயமை" என்னும் சொல் கட்டுரைகளில் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்; சிறப்பாக உள்ளது, எனக்கும் குடிவெறி என்பதனைப் பற்றி ஒரு ஐயப்பாடு உள்ளது.--சி. செந்தி 22:38, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
வெறி என்னும் சொல் பல பொருள்களில் பயன்படுவது. குடிவெறி என்பது குடிமயக்கம் (குடிமயக்க்த்தில் அறியாது செய்தல்) என்ன்பதும் ஒரு பொருள். ஆனால் குடிவெறி குடிக்கு அடிமையாதல் குடிப்பழக்கத்தில் நோய் போன்ற நிலையில் கட்டுண்ட நிலையையும் குறிக்கும். வெறிநாய் என்பது வெறி (ஒரு நோய் பிடித்த) நாய். வெறியாட்டு என்றால் ஏதோ பேய் போன்ற ஒரு பித்து பிடித்த ஒருத்திக்கு அது போகும்படியாக வேலனாடல். வெறி என்றால் நோய் (கழக அகராதி இருந்தால் பார்க்கவும்; வெறிநாய் என்பதிலும் இதே பொருள்). ஆகவே குடிவெறி என்பது வயப்பாடு மிகுந்த குடிப்பழக்கம் நோயாக அறியப்படுவது. [இது தவிர இலக்கியத்தில் வெறி என்றால் நறுமணம், நன்மணம் என்றும் பொருள். வெறிமலர் என்றால் மணம்பரப்பும் நறுமலர். வெறிமலர் சூட என்றால் நறுமணம் பரப்பும் மலர்ரைச் சூட. வெறி என்பதற்கு வேறுபல பொருள்களும் உண்டு. எ.கா. வெறிக்க ஓடுகின்றான் என்றால் விரைந்து ஓடுகின்றான் என்று பொருள்]. ஆகவே குடிவெறி என்றால் (1) குடிப்பழக்கம் நோயாக (நோய் போலும் வயப்பாடு கொண்டு) இருத்தல். (2) குடிப்பழக்கத்தால் தான் செய்வது அறியாது நடத்தல். ஆல்க்கஃகாலிசம் என்பது குடிவெறி (குடிவயநோய்) என்பதற்குப் பயன்படுத்தலாம். (முதல் பொருளில்). --செல்வா 01:45, 2 ஆகஸ்ட் 2010 (UTC)
Start a discussion about alcoholism
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve alcoholism.