உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:coffee

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

காபியின் ப்ராசிலியக் கதை சுவையாக இருந்தாலும், அது இணையத்தில் வேறு எங்குமே காணப்படவில்லை! மேலும், ப்ராசிலிய மொழி என்று ஒன்றுமே இல்லை. போர்சுகீசியமே அங்கு பேசப்படுகிறது. இங்கு கூறப்பட்டிருப்பதை எவரேனும் தெளிவுபடுத்தித் தகுந்த இணைய ஆதாரத்தைச் சேர்க்க வேண்டுகிறேன்.

  • {.{ஆங்கிலம்-சொற்பிறப்பியல்}} என்பதனை, இணைத்துள்ளேன். காணவும்.--02:29, 6 நவம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
அழகிய மணவாளன் சொல்வதோடு ஒப்புகிறேன். பாவாணர் கூறும் காபியின் பிரேசிலிய “குளம்பு” சொற்பிறப்பியல் வேறெங்கும் காணக்கிடைக்கவில்லை. ஒன்று பாவாணர் பிழையாகக் ”குளம்பி” என்று மொழி பெயர்த்திருக்க வேண்டும். அல்லது அவர் கூறும் “பிரசீலிய மொழி” போச்சுகீசியமன்றி வேறெதாவது பழங்குடி மொழியாக இருக்க வேண்டும்.(அதற்கான சான்று எதுவும் இணையத்தில் இல்லை)--சோடாபாட்டில்உரையாடுக 17:05, 6 நவம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:coffee&oldid=1020652" இலிருந்து மீள்விக்கப்பட்டது