பேச்சு:entropy

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

entropy ஐ ஒரு ஆற்றல் அல்லது சக்தி என மொழிபெயர்ப்பது சரியென்று எனக்குத் தோன்றவில்லை. entropy, disorder, chaos என்ற சொற்கள் ஆங்கிலத்திலும் ஒரே பொருளுடையனவே. ஆயினும், இயற்பியலில் ஒவ்வொன்றும் ஒரு தனிக் கருத்துருவைக் குறிக்கிறது. அதேபோல் சீர்குலைவு, முறைமையின்மை, ஒழுங்கின்மை என்பன ஒரே பொருளனவாயினும் கீழ்க்கண்ட மரபை நாம் பினபற்றலாம் என்பது என் கருத்து. (குறிப்பு: முறையின்மை என்பது illegitimate என்ற பொருளைத் தரும். எனவே நான் முறைமையின்மை என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறேன்.)

entropy - சீர்குலைவு disorder - முறைமையின்மை chaos - ஒழுங்கின்மை

வெப்ப இயங்கியலில் entropy என்ற சொல் thermal charge என்றும் வழங்கப்படுகிறது.இது ஒரு பொருளின் intrinsic அதாவது இயல்பு மதிப்பாகும். <ref:McGraw-Hill Dictionary of Science and Technology> எனவே இங்கு entropy என்பது பொருளின் பயன்கொள்ளவியலாத வெப்ப ஆற்றலையே குறிக்கும்.இது பொருளில் தேங்கியுள்ள மீட்டெடுக்கமுடியாத இயல்பான வெப்ப ஆற்றலையே குறிக்கிறது.எனவே இயல்பாற்றல் என்ற சொல்லே பொருத்தமானது. பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை 16:18 27 ஏப்பிரல் 2015 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:entropy&oldid=1286939" இலிருந்து மீள்விக்கப்பட்டது