பேச்சு:field observation

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

களாவதானம், களாவதனிப்பு? பழ.கந்தசாமி 03:49, 6 மார்ச் 2010 (UTC) களப்பார்வை என்பது எளிமையாப்படுகிறது.த*உழவன் 11:51, 6 மார்ச் 2010 (UTC)

தொடர்பான உரையாடல்[தொகு]

பயனர் பரிதிமதி அவர்களில் உரையாடல் பக்கத்தில் இட்டதை இங்கேயும் இடுகின்றேன். இச்சொல்லுக்க்குக் கள நேர்ப்பார்வை, களத்தில் காணல், களக் கண்டறி, களத்தில் காண்கை, களக் காண்டல் எனலாம். காண்பு என்றால் காணுதல், காண்டல், காட்சி. எனவே களக் காண்பு என்றும் கூறலாம். இது என்ன? களத்துல் நேரில் பார்த்து (கண்டு) அறிதல்தானே. ஏன் இவ்வளவு பாடுபட வேண்டும் :) பார்த்தறி, கண்டறி, பார்த்துணர், கண்டுணர்.. இப்படி ஏதும் சொல்லலாமே.--செல்வா 05:15, 6 மார்ச் 2010 (UTC) மேலும் சில நினைத்துப் பார்ப்பது தொடர்பான பிற சொற்களுக்குப் பயன் படலாம். தமிழில் காண், பார், நோக்கு என்னும் சொல் போலவே நோடு என்றும் சொல் இருந்திருக்க வேண்டும் ஆனால் இன்று நோட்டம் என்னும் பெயர்ச்சொல் மட்டுமே வழக்கில் உள்ளது. தமிழில் பழங்காலத்தில் நோட்டக்காரன் என்று சொல் இருந்தது. இவன் நாணையங்களைப் பரிசோதிப்பவன். பிற திராவிட மொழிகளில் (கன்னடம் முதலான்வறுள்) நோடு என்பது இன்றும் வினைச்சொல்லாக வழக்கில் உள்ளது. நாம் நோடு என்றால் குறிப்பிட்டுப் பார்த்தல் என்னும் பொருளில் ஆளலாம். நோடல் => observation. நோட்டம் என்பதன் பொருளாக கழக அகராதி போன்றவை கண்திட்பம் என்று தருகின்றது. திட்பமாய்த் தெளிவாய் காணல் நோட்டம். ஒரு நோட்டம் விட்டான் என்று பேச்சு வழக்கில் கூறுவது, இன்றைய பொருளில் சற்று விரைவாக கணக்கிட்டுப் பார்த்தான் என்னும் பொருளில் ஆள்கிறோம். உண்மையில் அதன் தெளிவான பொருள் கண்திட்பம். இந்தக் கண்திட்பம் என்பது ஆங்கிலத்தில் sharp, acute and incisive observation (in a scientific and serious sense). எனவே நோட்டம் என்பது உண்மையில் மிகத் தெளிவான அறிவியல் நோக்கிலான பார்வை. கண்திட்பம் என்பதும் அதுவே. இன்றும் political observer என்று வரும்பொழுது அரசியல் நோக்கர் என்று கூறுகிறோம் அல்லவா அதுபோல நோக்குதல் என்பதும் குறிப்பாகப் பார்த்தல். பார்த்தல் என்பது பரவலாக அனைத்தையும் கண்ணால் பார்த்துக் கருத்தால் உள்வாங்கல். நோக்கல், நோட்டம் (நோடல்) என்பது குறிப்பாக நுட்பமாகப் பார்த்தல். காணல் என்பது அறிவார்ந்த கண்வழி உள்வாங்கல் (கண் என்றாலே அறிவு, அறிவை உணர்த்துவது கண் என்பது கண் என்னும் சொல்லின் பல பொருட்களுள் ஒன்று). திருக்குறளில் நோக்கு என்னும் சொல் 8 இடங்களில் வந்துள்ளன. பலரும் அறிந்திருக்ககூடிய குறள்கள்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

--செல்வா 14:17, 6 மார்ச் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:field_observation&oldid=483939" இலிருந்து மீள்விக்கப்பட்டது