பேச்சு:frontal bone
தலைப்பைச் சேர்.
Untitled
[தொகு]- கொஞ்சம் வேலை அதிகம். அடுத்த மாதம் முதல் உங்களுடன் இணைகிறேன்.செந்தி!இத்தளத்தில் தேடிப்பார்த்தால், நமக்கு கொஞ்சம் வேலை குறைய வாய்ப்புண்டு. இதைப் போல இரண்டு படங்களையும் இணைத்தால், மருத்துவம் படிக்காதவருக்கும் எளிதானப் புரிந்துணர்வை உண்டாக்கும் என எண்ணுகிறேன். மேலும், தங்கள் படத்தின் குறுக்கே கோடுகள் வருவதால், அவ்வெழுத்துக்களை வலப்பக்கம் கொண்டு வந்தால் உட்கோடுகள் குறையும். உங்களுக்கு பிடித்திருந்தால், இது போன்று உருவாக்கலாம். காப்புரிமைப் படங்களை, கருப்பு வெள்ளைப் படங்களாக மாற்றி, குறைந்த செறிவில் (pixels) பயன்படுத்தும் போது நமக்கு காப்புரிமை பிரச்சனை எழாது என்றே கருதுகிறேன். உங்களின் கருத்தறிய ஆவல்--த*உழவன் 02:16, 8 ஆகஸ்ட் 2010 (UTC)
பாராட்டு
[தொகு]நல்ல படம் செந்தி! எழுத்துகள் எப்பொழுதும் பெரிதாக இருக்க வேண்டும் ஏனெனில், படத்தைச் சுருக்கும்பொழுதும் தெளிவாகத் தெரிய வேண்டும். எனவே பொதுவாக எழுத்துகள் இன்னும் கொட்டையாகப் பெரிதாக இருக்க வேண்டும். மிக அருமையாக இப்படத்தைச் செய்து பாகங்களைப் பெயரிட்டு செய்துள்ளீர்கள். அருமை! --செல்வா 04:03, 8 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றி
[தொகு]உங்கள் கருத்துச் சரியே த*உழவன்,பாராட்டிற்கு நன்றி செல்வா அண்ணா. என்னிடம் ஏறத்தாழ இருபதிற்கும் மேற்பட்ட உடல் கூற்றியல் புத்தகங்களின் மின்வடிவம் உள்ளது, அவற்றில் இருந்து படங்களை எடுக்கப்பார்கின்றேன்; சில படங்கள் விளக்கமான படங்களாக "commons.wikimedia.org" தளத்தில் அமையவில்லை, மேலும் அவற்றின் மேலே ஆங்கில எழுத்துக்கள் இருப்பது தமிழ்ச் சொல்லைச் சுட்ட இடையூறாக இருக்கிறது.
- இது எனது முதல் முயற்சி, (நெட்டர் என்னும் மருத்துவர் தானே வரைந்து உடல் கூற்றியல் தொகுப்பையே (atlas) வெளியிட்டுள்ளார், அந்த ஆர்வத்திலும், செல்வா அவர்களின் சிவாஜி, கேமமாலினி போன்ற ஓவியங்களும், மேலும் த*உழவன் என்னிடம் அவர் வரைவதைப் பற்றிக் கூறியதுமே என்னை வரைய வேண்டும் என்று தூண்டியது, இது ஒரு இரசிய புத்தகத்தைப் பார்த்து, ஆனால் மாற்றியமைத்து வரைந்தது.)
- ஒரு உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்தே இங்கு பதிவிலிட்டேன். இந்த வரைபு தரமானதாக அமைய மேலும் என்ன செய்யவேண்டும் என்பதை உங்கள் போன்ற சிறந்த ஓவியர்களிடம் இருந்து அறிய ஆவலாக உள்ளது. வரைந்த ஓவியம் கணிணி நுட்பத்தால் சரி செய்யப்பட்டது.
- --சி. செந்தி 09:10, 8 ஆகஸ்ட் 2010 (UTC)
செந்தி, காப்புரிமம் உள்ள எந்தப்படத்தையும் மேலோட்டமாக மாற்றி வெளியிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் மருத்துவர் என்பதால், உங்கள் அறிவாலும் பட்டறிவாலும் உருவாக்கிய படம் என்று பதிவு செய்யுங்கள். பிற படங்களைப் பார்த்து வரைந்தாலும் (உருவாக்கினாலும்), வேறு படங்களில் இல்லாத சிறப்புக்கூறுகள் அப்படத்தில் இருந்தால், அது காப்புரிமத்தின் சிறப்புக்கூறாக (தன்னாக்கமாக காப்புரிமத்தினர் செய்ததாக தாங்கள் கருதக்கூடும்). படத்தில் உள்ளமைப்புகள் சற்று வேறுபட்டதாக இருப்பின் காப்புரிமம் சிக்கல் இருக்காது என்று நினைக்கின்றேன். துறையறிஞர்கள் பரவலாக அறிந்த உண்மைகளை அத்துறையைச் சேர்ந்த ஒருவர் தான் அறிந்தவாறு வரைவதில் சிக்க இருக்காது என்றே நினைக்கின்றேன். இப்பொழுதே படங்கள் மிக நன்றாக உள்ளன. மேடு பள்ளங்களை சற்று மிகைப்படுத்திக் காட்ட (எலும்புப் படமாக இருப்பதால்), வெளிர்நீல நிறம் அல்லது சற்று கருமை நிறைந்த சாம்பல் நிறத்தைப் பயன்படுத்தலாம். முன்பக்க தோற்றமும், பக்கவாட்டுத் தோற்றமும் காட்டுவது விளக்கிக் கூறுவதற்கு நல்ல ஏற்பாடு. --செல்வா 01:02, 9 ஆகஸ்ட் 2010 (UTC)
- நன்றி, நான் முழுவதும் பென்சில் கொண்டே வரைகிறேன், கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் கூறியவாறு வரைய முயற்சி செய்கின்றேன்.--சி. செந்தி 17:10, 9 ஆகஸ்ட் 2010 (UTC)
- செந்தி, அருமையான முயற்சிகளுக்குப் பாராட்டுகள். பழ.கந்தசாமி 17:59, 9 ஆகஸ்ட் 2010 (UTC)
- நன்றி கந்தசாமி அவர்களே. --சி. செந்தி 16:10, 10 ஆகஸ்ட் 2010 (UTC)
- நன்றி, நான் முழுவதும் பென்சில் கொண்டே வரைகிறேன், கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் கூறியவாறு வரைய முயற்சி செய்கின்றேன்.--சி. செந்தி 17:10, 9 ஆகஸ்ட் 2010 (UTC)