பேச்சு:quantum entanglement

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தகவலுழவன் அவர்களுக்கு,

  • quantum என்ற சொல்லுக்கு 'துணுக்கம்' என்ற பொருள் சரியா?
  • அல்லது மட்டுவம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா? சென்னை பல்கலையின் பேரகரமுதலியில் மட்டு என்ற சொல்லுக்கு fixed quantity, measure என்பது போன்ற விளக்கம் வந்துள்ளது. quantum என்றால் fixed quantity/measure அல்லவா?
  • அல்லது மட்டு என்ற மூலத்தை வைத்து வேறு சொல் உருவாக்குதல் முடியுமா?

மதிப்பிற்குரிய பரிதிமதிக்கு,

என்னை நீங்கள், தகவலுழவன் என்று அழைத்தாலே போதும். ஏனெனில், நான் தங்களை விட வயதிலும், அனுபவத்திலும் இளையவன்.

  • பெயர்ச்சொல் என்றாலே பெரும் மாற்றத்திற்க்கும், விவாதத்திற்க்கும் உரியவை தான். இது நம் மொழியிலும் இருப்பது இயற்கை. மிக வேகமான மாற்றங்களுக்கு, உலக மொழிகள் பலவும் மாறியே வருகிறது. எனினும், ஒரு பெயர்ச்சொல்லின் வாழ்நாள் மற்றும் பயன்பாடு என்பது நம் இருவர் கையில் மட்டுமில்லை என்பது தங்களுக்குத் தெரிந்ததே. நம் மொழியில் பல அரிய சொற்கள், அழிந்தே வருகிறது. அதனை ஓரளவு காப்பற்றவே, இங்கு பங்களிக்கும் முயற்ச்சியிலிருக்கிறேன். எனது முழுமையான செயலாக்கம், இதுவரை இல்லை. தற்போது, இணைச்சொற்கள் என்பதற்காக திட்டமிடுகிறேன். ஏனெனில், இப்பிரிவு இதுவரை நூல்வடிவிலேயே இருக்கிறது. காண்க
  • entanglement என்பதற்க்கு சிக்கல் என்று மட்டும் பொருளிருந்தது. அத்துடன் தாங்கள் காட்டிய, பின்னல் என்பதனையும், அங்கு சேர்த்துள்ளேன்.
  • துணுக்கு என்பதிலிருந்து துணுக்கம். measure என்பதினை மட்டும் கருத்தினில் கொண்டு, துணுக்கம் உருவாக்கியிருக்கலாம். உங்களைப் போன்று துறைசார்ந்த ஆழமான எண்ணங்கள் அவர்களுக்கு இல்லை போலும்.
  • மேலும், fixed quantity,measure என்பவைகளை கருத்திற்கொள்ளும் போது, quantum என்ற சொல்லுக்கு துணுக்கம் என்பது மட்டும் சரியாகப் படவில்லை.

மட்டுவம் என்பது சரியாகப்படுகிறது.

என்றும் ஆர்வத்துடன், (தகவலுழவன் 03:37, 9 மே 2009 (UTC))
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:quantum_entanglement&oldid=296803" இருந்து மீள்விக்கப்பட்டது